Sunday, August 7, 2016

மனம் காணும் நட்புகளுக்கு மனதார நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

உலகில் இறைவனுக்கே கிடைக்காத வரம் உண்டென்றால் அது நண்பர்கள் மட்டுமே. ஆனால் மனிதர்களாகிய நமக்கு நட்புகள் கிடைத்திருக்கிறது என்றால் அது புனிதமானதாகவே கருதப்படவேண்டியது.

உற்றார் உறவினர்கள் கூட எதிர்பார்ப்பார்கள். ஆனால் எதிர்பார்க்காத உணர்வென்றால் நண்பர்கள் மட்டுமே. நண்பர்கள் சிறு வயது முதல் தொடங்கி இப்போதை நம் வயது வரை நண்பர்கள் வட்டம் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. 

ஏதோ ஒரு உள்ளூர உணர்வுதான் நண்பர்களாக இணைக்கிறது. நட்பு என்பது செல்லுமிடங்களிலெல்லாம் உணர்வை ஊட்டி வளர்க்கும் ஊடகமாகவே அமைகிறது. இதில் ஒரே தட்டில் உண்டும், ஒரே போர்வையை இழுத்து பிடித்து  உறங்கியும், திருவிழா காலங்களில் இளநீர் பறித்து குடித்துவிட்டு மீந்ததை வேறு விடயங்களுக்காக பயன்படுத்தியதும், நுங்கு பறித்து வெட்ட வெட்ட குடித்துவிட்டு, மீந்ததை கண்ணீரில் விட்டு கண்ணை குளிர வைத்ததும், கிணத்தடி அரட்டைகளும், ஒரு சைக்கிளில் 4 பேர் பயணங்களும், ஒரே ஐஸ்கிரீமை பலபேர் சாப்பிட்ட நாட்களும்தான் மறக்க முடியாதவை. ஆனால் இன்னும் பல சொல்ல வேண்டுமென்றால் நட்புகளின், நண்பர்களின் உணர்வு கலந்த பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கும் 07-08-2016 காலையில் நான் சிற்றுண்டி சாப்பிட்டு வரும் வழியில் நண்பர்கள் கொள்ளிக்கட்டை ஊதுவதற்காக வரும் நேரத்தில் எதிர்ப்பட்டார்கள். அவர்கள் கொள்ளிக்கட்டை ஊதினால், நான் இருந்தால் சற்று தள்ளிதான் நிற்ப்பார்கள். பேசிக்கொண்டே அவர்கள் ஊதிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது நான் நின்ற தோரணையை பார்த்து ஒரு நண்பர் அதை படம் பிடி அழகாக இருக்கிறது இந்த போஸ் என்று அடுத்த நண்பனின் ஆப்பிள் அலைபேசியில் படம் பிடித்தார்கள். பார்த்தீர்களா நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தி நண்பர்களை மகிழ்விக்கும் ஒரு அடையாளம்.

அனைவரும் நட்போடு வாழ்வோம். ஆயுளை பெருக்குவோம்.

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.


நட்பில்,
மறுமலர்ச்சி,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment