Friday, August 19, 2016

அண்ணன் அய்யலுசாமி அவர்களின் அன்பு மழையில் இன்று!

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அண்ணன் அய்யலுசாமி அவர்கள் என்னை வாட்சப்பில் தொடர்பு கொண்டு மைக்கேல் நான் இப்போது நிஸ்வாவில்தான் உள்ளேன் என்றார். அதற்கு முன் மஸ்கட்டில் வேலை பார்த்தார் அப்போதே சொன்னேன் அண்ணே உங்களை வெள்ளி கிழமை விடுமுறையாதலால் சந்திக்கிறேன் என்றேன். ஆனால் அந்த வெள்ளி கிழமை சந்திக்க இயலவில்லை வேறு வேலை இருந்ததால். 

அடுத்த வாரம் அண்ணா சந்திக்க வருகிறேன் என்ற போது அவர் ஷாப்பிங்க் செல்கிறேன் என்றார். சரி அண்ணா அங்கே சந்திக்கிறேன் என்றேன். அப்ப்போது என் நண்பன் சதீசுடன் அவனது காரில் ஒரு நண்பரை மருத்துவமனை அழைத்து சென்று விட்டு சந்திக்கலாம் என்ற நினைத்த வேளையில் அன்றும் வாய்ப்பை இழந்தேன். 

ஆதலால் இந்த வாரமாவது சந்தித்து விடவேண்டுமென்று நினைத்து இன்று 19-08-2016 காலையிலே தகவல் தெரிவித்துவிட்டு சென்றேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து 25-30 கிலோ மீட்டர் தூர பயணம் செய்து சென்றேன். அந்த இடம் பர்க் இடைத்தை தாண்டிய இடம். அதில் SAUD BHAWAN KIA MOTORS ல் டாக்சியை நிறுத்தி இறங்கி பார்க்கும்போதே எனக்காக காத்திருந்த அண்ணன் அய்யலுசாமி அவர்கள் கை அசைத்து அவர் நிற்பதை உறுதி செய்தார்கள். 

பின்னர் என்னை அழைத்து அவருடைய அலுவலகம் அழைத்து சென்று உடனே தமிழர் வழக்கப்படி நீர் அருந்துங்கள் என்று புதிய பாட்டிலை திறந்து கொடுக்க நானும் குடித்துவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது 1 மணி நேரத்திற்க்கு மேலாகிவிட்டது. அந்த இடைவெளியிலும் எனக்காக இனிப்பு உணவுகளும், இனிப்பு நீர் ஆகாரமும் எனக்காக வாங்கி வைத்ததை கொடுக்க அண்ணன் அய்யலுசாமியும் நானும் பருகினோம்.

கழகம் சார்ந்து பேச தொடங்கி, தேர்தல் தொடக்கம், முடிவு, ஓமன் இணையதள நண்பர்கள், குடும்பம், வேலை என எல்லாவற்றையும் அசைபோட்டோம். அண்ணனின் அன்பு கலந்த வார்த்தைகள் ஓமனில் இன்று ஒரு இன்பத்தை தந்தது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் அரபி வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள். அவ்வப்போதுதான் தமிழ் எனவே அதுவும் ஒரு ஆனந்தம்.

பின்னர் கடைசியில் அண்ணனின் அலைபேசியிலேயே அண்ணனுடன் ஒரு செல்பி எடுத்துவிட்டு விடைபெற்றேன். அண்ணன் அய்யலுசாமி அவர்கள் ஒரு நண்பரை அனுப்பி எனக்கு டாக்சி நிறுத்தத்தை காட்டிவிட செய்துவிட்டு டாக்சியில் செல்லும் வரை காத்திருந்து வழியனுப்பினார்கள். அன்பு பாராட்டி என்னை உணர்வுகளால் நிரப்பிய அண்ணன் அய்யலுசாமி அவர்களுக்கு என் நன்றி...

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment