Sunday, February 28, 2021

ரவுடிகளின் சரணாலயம் எது?

பாஜக கமலாலயம்!
ரவுடிகளின் சரணாலயம்!

Saturday, February 27, 2021

மதிமுக கன்னியாகுமரி மாவட்ட துணைச் செயலாளர் வீடு புகுந்து ரெளடிகள் தாக்குதல்! தாயார் தீவிர சிகிச்சையில்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார் கொற்றிகோடு சுரேஷ் குமார். 

இவரது வீட்டில் நேற்று 26-02-2021 இரவு 10:30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோர் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுரேஷ்குமார், அவரது தாயாா் மற்றும் அவரது மனைவி காயமடைந்துள்ளனர்.

இதில் சுரேஷ்குமாரை அடிக்கும்போது தாய் மனம் வெதும்பி தடுத்ததால் அவரின் தாயாரை ரெளடிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

காயமுற்ற சுரேஷ் குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் 3 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயார் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

குற்றவாளிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோரை குமாி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவம் மேலும் நிகழா வண்ணம் சுரேஷ் குமார் குடும்பத்திற்கு குமரி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முன்வர வேண்டும். பொதுமக்களையும் இதுபோன்ற ரெளடிகளிடமிருந்து பாதுகாத்து குமரி மாவட்ட சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும்.

மேலும் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானவா், தமிழகத்தின் நேர்மையான அரசியல் கட்சியான மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் என்பதாலும், பல மக்கள் பணிகளை செய்து வரும் சமூக சேவகர் என்பதாலும், கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளான சமூக விரோதிகளை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் போராட்டத்தை அறிவிக்கும் முன் காவல்துறை நடவடுக்க எடு!

மைக்கேல் செல்வ குமார்.

5 மாநில‌ சட்டசபை தேர்தல் 2021! தேர்தல் ஆணையம் கண்ணியத்தை காக்குமா?

ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற நிலையில்,

அஸ்ஸாம் மாநிலத்திற்கு மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும், 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

மேற்கு வங்க மாநில அரசியலை சிதைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி அவர்களின் கட்சியை சிதைக்கும் நோக்கில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டமாகவும் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறது இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பாசிச பாசகவை அரியணையில் அமர்த்த இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி வேலை செய்கிறது என்பதை தேர்தல் நாட்களிலும், வாக்கு எண்ணும் மே 2 லும் புரிந்துகொள்ளலாம்.

மைக்கேல் செல்வ குமார்

Monday, February 22, 2021

வாய்மையே வெல்லும்!

இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல் விலை 100 ஐ தொட்டது.

விலை உயர்வுக்கு காரணம் முந்தைய அரசே!
8 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் நரேந்திரா குற்றச்சாட்டு.
பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு கண்டனம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.

இறுதியில் உண்மையே வெல்லும்..!

Friday, February 12, 2021

கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்திற்கு ₹15.47 லட்சம் ஒதுக்கி அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் MLA! முன்னாள் மாணவர் மைக்கேல் நன்றி!

கொடுப்பைக்குழி அரசு தொடக்க பள்ளிக்கட்டிடம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் இடிந்து தரைமட்டமானது. இதனால் மாணவர்கள் எந்தவித பாதுகாப்புமில்லாமல் கூரையில்லாத தரைதளங்களில் பாடம் கற்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.

மாணவர்கள் பாதிக்கப்படுவதால் கொடுப்பைக்குழி மக்கள் சார்பில் கொடுப்பைக்குழி ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் பிரின்ஸ் MLA, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கிராமசபை கூட்டங்கள் மூலமும், இன்னும் பிற அலுவலகங்களில் புதிய கட்டடம் கட்டி மாணவர்கள் பயன்பெற வேண்டுமென்று கோரிக்கை மனுக்களை கையளித்தனர்.

மட்டுமல்லாது தொடர்ந்து கண்காணித்து அதிகாரிகளை தொடர்புகொண்டனர். இதன் தொடர்பாக, கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் J.G.பிரின்ஸ் அவர்கள் மூன்று வகுப்பறைகளுக்கு 15.47 இலட்சம் கடந்த வருடம் ஒதுக்கீடு செய்தார். பின்னர் வரைபடங்கள், கட்டடம் கட்ட ஒப்புதல்கள் அனைத்தும் பெறப்பட்டது.

இதன் விளைவாக, ₹15.47 லட்ச மதிப்பிலான கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்திற்கு இன்று 12-02-2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மாணவர்கள் பயன்பெற அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டுமான பணிக்கான வேலையை துவக்கி வைத்தார் J G பிரின்ஸ் MLA அவர்கள்.

இவ்விழாவில் குருந்தன்கோடு ஊராட்சி தலைவர் திருமதி.சந்திரா ஒய்சி பாய், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு.கே.டி.உதயம், ஊராட்சி கவுன்சிலர் திருமதி.சிவந்திகனி, கக்கோட்டுதலை ஊராட்சி தலைவர் திரு கென்னடி, வார்டு உறுப்பினர்கள் திருமதி.தங்கம்மாள், திருமதி.விஜயா, திருமதி.சாரதா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள்,கொடுப்பைக்குழி வட்டார மக்கள் பலர், பள்ளிஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதிய கட்டடம் தொடர்பாக தொடர் களப்பணியாற்றிய கிளப் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார ஊர் மக்கள் அனைவருக்கும் முன்னாள மாணவனாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மாணவன்
மைக்கேல் செல்வ குமார்

Sunday, February 7, 2021

#P2P தமிழீழ மக்கள் எழுச்சி!

#P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சி போராட்டம் இன்று 07-02-2021 நிறைவுற்றது.

பொலீஸ் தடை, நீதிமன்றத்தடை, நுண்ணிய இனவாதத்தடைகள் தாண்டி, மக்கள் எழுச்சியாக ஆண்டுகால காத்திருப்பின்பின் நடந்துமுடிந்துள்ளது.

கவனித்த விடயங்கள் சில,

அதில் முக்கியமானது, மாபெரும் பேரணிகள்/ மக்கள் எழுச்சி நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறாததன் இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது. (சாதக பாதக என இரு பக்கத்திலும்)

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அவற்றின் மீதான நியாயங்களும் மதம் தாண்டி, கட்சி தாண்டி, அரசியல் தாண்டி மக்களை எழுச்சியுற செய்திருந்தன.

யார் தொடங்கினாலும், யார் முன்னின்றாலும், யார் தடைகளை உடைத்தாலும், யார் மக்களை அழைத்து வந்தாலும், யார் பணம் செலவழித்தாலும், யார் வாதிட்டாலும், யார் வழிநடத்தினாலும், யார் நேரில் வந்திருந்தாலும்

அனைத்தும் மக்களுக்காகவே செய்யப்பட்டன.

ஒரு தந்தை பிள்ளைகளுக்கு செய்யும் கடமை போன்று இவை அனைத்தும் இனத்துக்காக செய்யப்பட்ட, செய்யப்படவேண்டிய கடமையாக நினைத்துக் கொண்டால் போதும்.

தொடக்கத்தின் வெற்றியும், முடிவின் பிரமாண்டமும் அவசியம் என்பதுபோல, கிழக்கின் வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல், பேராதரவு கொடுத்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மக்களுக்கும், பிரமாண்டம் கொடுத்த யாழ்ப்பாண மக்களுக்கும் 🙏

தார்மீக ஆதரவு என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு பெரும் உணர்வு.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

Saturday, February 6, 2021

போராடும் பெண் ஆசிரியர்களின் கழிவறை தண்ணீர் வசதியை நிறுத்திய எடப்பாடி அரசு! கண்டனம்! சமூக ஆர்வலர்கள் கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகோள்!

நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.


இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராடிய முதல் நாளாம் 4 ஆம் தேதி முதலே பெரும்பாலான கழிப்பறையில் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்திருந்தனர். ஒன்றிரண்டு கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் வசதி இருந்தது.

இந்நிலையில் இன்று 06-02-2021 மாலை முதல் அனைத்து கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்துள்ளது தமிழக எடப்பாடி அடிமை அரசு. கழிவறை இல்லையென்றால் பெண்கள் கண்டிப்பாக போராட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று பிற்போக்கு சிந்தனையுடன் உடல் உபாதைகளுக்கான வசதியை கூட சொந்த மக்களுக்கு கொடுக்காமல் தடுத்து வைத்து மக்களை துன்புறுத்துகிறது இந்த அடிமை அரசு. உடல் உபாதைகளை செய்ய முடியாமல் திணறும் பெண் ஆசிரியர்களின் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இப்படிபட்ட மனித உரிமை மீறல்களை அடிமைஅரசு பாசிச பாசகவுடனே இணைந்து செய்வது அப்பட்டமாக தெரிகிறது. மனித அடிப்படை உரிமைகளை கூட கொடுக்காத எடப்பாடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மனித உரிமை ஆர்வலர்கள் தலையிட்டு உடனடியாக பெண் ஆசிரியர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யவும், சமூக ஆர்வலர்கள் தங்களாலான உதவியை செய்திடவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வ குமார்.

Monday, February 1, 2021

பெட்ரோல் டீசல் வரி உயர்வு!

இந்திய ஒன்றிய நிதியறிக்கை அமைச்சர் நிர்மலா பேசிய பின்னர், பெட்ரோல் 2.5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

பாசிச பாசக ஆட்சியில் பெட்ரோல் டீசலுக்கு வரியை உயர்த்தியதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வரி உயர்வை பாசிச பாசக அரசு திரும்ப பெற வேண்டும்.


பெட்ரோல் விலை பட்ஜெட்!

பெட்ரோலின் விலை இந்திய ஒன்றியத்தில் அதிகமே...

இந்தியாவை விற்க நிர்மலா பட்ஜெட் தாக்கல்!

பல லாபம் பெறும் அரசு நிறுவனங்களை விற்க இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா 2021-2022 க்கான பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.


அரசு நிறுவனங்களை விற்பதை நிறுத்த வேண்டும். கண்டனம்.