கொடுப்பைக்குழி அரசு தொடக்க பள்ளிக்கட்டிடம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் இடிந்து தரைமட்டமானது. இதனால் மாணவர்கள் எந்தவித பாதுகாப்புமில்லாமல் கூரையில்லாத தரைதளங்களில் பாடம் கற்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.
மாணவர்கள் பாதிக்கப்படுவதால் கொடுப்பைக்குழி மக்கள் சார்பில் கொடுப்பைக்குழி ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் பிரின்ஸ் MLA, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கிராமசபை கூட்டங்கள் மூலமும், இன்னும் பிற அலுவலகங்களில் புதிய கட்டடம் கட்டி மாணவர்கள் பயன்பெற வேண்டுமென்று கோரிக்கை மனுக்களை கையளித்தனர்.
மட்டுமல்லாது தொடர்ந்து கண்காணித்து அதிகாரிகளை தொடர்புகொண்டனர். இதன் தொடர்பாக, கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் J.G.பிரின்ஸ் அவர்கள் மூன்று வகுப்பறைகளுக்கு 15.47 இலட்சம் கடந்த வருடம் ஒதுக்கீடு செய்தார். பின்னர் வரைபடங்கள், கட்டடம் கட்ட ஒப்புதல்கள் அனைத்தும் பெறப்பட்டது.
இதன் விளைவாக, ₹15.47 லட்ச மதிப்பிலான கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்திற்கு இன்று 12-02-2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மாணவர்கள் பயன்பெற அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டுமான பணிக்கான வேலையை துவக்கி வைத்தார் J G பிரின்ஸ் MLA அவர்கள்.
இவ்விழாவில் குருந்தன்கோடு ஊராட்சி தலைவர் திருமதி.சந்திரா ஒய்சி பாய், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு.கே.டி.உதயம், ஊராட்சி கவுன்சிலர் திருமதி.சிவந்திகனி, கக்கோட்டுதலை ஊராட்சி தலைவர் திரு கென்னடி, வார்டு உறுப்பினர்கள் திருமதி.தங்கம்மாள், திருமதி.விஜயா, திருமதி.சாரதா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள்,கொடுப்பைக்குழி வட்டார மக்கள் பலர், பள்ளிஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதிய கட்டடம் தொடர்பாக தொடர் களப்பணியாற்றிய கிளப் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார ஊர் மக்கள் அனைவருக்கும் முன்னாள மாணவனாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் மாணவன்
மைக்கேல் செல்வ குமார்
No comments:
Post a Comment