கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார் கொற்றிகோடு சுரேஷ் குமார்.
இவரது வீட்டில் நேற்று 26-02-2021 இரவு 10:30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோர் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுரேஷ்குமார், அவரது தாயாா் மற்றும் அவரது மனைவி காயமடைந்துள்ளனர்.
இதில் சுரேஷ்குமாரை அடிக்கும்போது தாய் மனம் வெதும்பி தடுத்ததால் அவரின் தாயாரை ரெளடிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
காயமுற்ற சுரேஷ் குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் 3 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயார் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
குற்றவாளிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோரை குமாி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவம் மேலும் நிகழா வண்ணம் சுரேஷ் குமார் குடும்பத்திற்கு குமரி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முன்வர வேண்டும். பொதுமக்களையும் இதுபோன்ற ரெளடிகளிடமிருந்து பாதுகாத்து குமரி மாவட்ட சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும்.
மேலும் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானவா், தமிழகத்தின் நேர்மையான அரசியல் கட்சியான மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் என்பதாலும், பல மக்கள் பணிகளை செய்து வரும் சமூக சேவகர் என்பதாலும், கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளான சமூக விரோதிகளை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள் போராட்டத்தை அறிவிக்கும் முன் காவல்துறை நடவடுக்க எடு!
மைக்கேல் செல்வ குமார்.
No comments:
Post a Comment