Friday, June 17, 2022
Wednesday, June 1, 2022
Monday, May 30, 2022
Sunday, May 29, 2022
Thursday, May 26, 2022
Wednesday, May 18, 2022
பேரறிவாளன் தூக்கு கயிறை, அவர் அழைத்தால் மட்டுமே வரும் நண்பன் ராம் ஜெத்மலானியின் வாதங்களால் அறுத்து எறிகிறார் வைகோ. தூக்குக் கயிறு அறுந்து வீழ்ந்தது. ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் வைகோ. தூக்கு கயிறை அறுத்ததால் இன்றுவரை உயிரோடு இருக்கும் பேரறிவாளன் இன்று விடுதலை. தமிழின காவலர் தலைவர் வைகோ அவர்கள் மகிழ்ச்சி அறிக்கை. தனக்காக கார்மேகம் பொழிவதில்லை. தனக்காக சோழ நதி பாய்வதில்லை. தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை. தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை. தனக்காக தலைவர் வைகோ வாழவில்லை. தமிழர்களுக்காக வாழ்கிறார்...
via IFTTT
Sunday, May 15, 2022
Wednesday, May 11, 2022
கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்! பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும். என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய். தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள். எம் இனத்தை நீ அழித்தாய் அன்று! உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று! எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று. உன் வீடோபற்றி எரிகிறது இன்று. எம் பிஞ்சு பாலகனை கொன்றாய். உன் பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள். சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய். இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள். இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான். எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால் இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். ஒருவன் செத்துவிட்டான். மிஞ்சியதோ நீதான். சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும். அதை கண்டு நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன். மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான். தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன. எங்கள் நிலம் எமதாகும் ஒரு நாள். புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமிழரின் தாகம், தமிழீழ தாயகம். தாயகம் மலருவதை காண, மைக்கேல் செல்வ குமார் 11-05-2021
via IFTTT
கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்!
Sunday, May 8, 2022
Sunday, May 1, 2022
Wednesday, April 27, 2022
Monday, April 18, 2022
Wednesday, March 23, 2022
தமிழீழம் சார்ந்து பேசினால், தொடரும் முகநூல் முடக்கம். காப்புரிமை வாங்கி தந்த தலைவர் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கோரிக்கை!
அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்ததற்காக எனது ஒரு வீடியோ சார்ந்த பதிவை முடக்கினார்கள். 30 நாள் தடை அறிவித்தார்கள். நான் அதை ஏற்கவில்லை. இப்போது அதை மறு பரிசீலனை செய்கிறோம் என்று தகவல் தந்தார்கள். இப்படியே போனால் முழுதாக முடக்கிவிடுவோம் என எச்சரிக்கை செய்துவிட்டு இந்த பதிவு தவறல்ல என்று மன்னுப்பு கோரிவிட்டு இன்று 23-03-2022 காலையில் விடுவித்துள்ளார்கள்.
Wednesday, March 16, 2022
தம்பி தமிழருணுக்கு திருமண வாழ்த்து!
அன்பு தலைவர் வைகோ அவர்களால் அடையாளம் காணப்பட்ட உரிமை போராளி தம்பி தே.தமிழருண் பெரம்பலூர். பின்புலம் இல்லாது, பொருளாதார கோரப்பிடியிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி தனது களப்பணியால் மாநில துணை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.
இன்று அவர் தனது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறார். தமிழ் பெயரை தனதாக்கிய அரசியை, தனது பள்ளி பருவ தோழியையே காதலியாக கொண்டு இன்று மனைவியாக்கியிருக்கிறார். அன்புத் தம்பியின் சுகத்திலும், சுகவீனத்திலும் தங்கை தமிழரசி உறுதுணையாக இருந்து குடும்பத்தை மாளிகையாக கட்டியெழுப்ப வேண்டும். தம்பியின் திருமணம், தம்பியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது நினைத்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். தந்தையும் தாயும் இல்லாத நிலையில் தலைவர் வைகோ அவர்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் கலந்துகொள்ளாத நிலையிலும், இயற்கை அவர்களும் இருக்கிறதென்ற நிலையில் அவர்கள் இல்லற வாழ்வில் வளம் பெற, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு தாழ்பணிந்து மகிழ்வுடன் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன், மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் மதிமுக 16-03-2021