Tuesday, March 8, 2016

தமிழீழ தேசிய கொடியும், மதிமுக கொடியும்!

எனதருமை உறவுகளே!

எனக்கு தமிழீழ தேசிய மேஜை கொடியும், மதிமுக மேஜை கொடியும் தேவைப்படுகிறது. எங்கே கிடைக்கும். எவ்வளவு. யாராவது வாங்கி தருவதாக இருந்தால், வங்கி கணக்கு தருகையில் அனுப்புவதற்கு ஆகும் செலவுடன் காசு தருகிறேன். இரண்டும் ஒரே அளவு இருந்தால் மிக்க மகிழ்ச்சி...

விபரம் தெரிந்த தோழர்கள், தனி செய்தியில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
மைக்கேல்

Monday, March 7, 2016

ஈழ அகதி தற்கொலைக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி கூத்தியார் குண்டு இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றன.

மாதத்திற்கு 3 முறை அகதிகள் இருக்கை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று 06-03-2016 காலையில், அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் முகாமிற்கு சென்றுள்ளார். அப்போது ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ரவீந்திரனின் மனைவியை கண்டித்துள்ளார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன். அப்போது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார்.

தனது மகனை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவீந்திரன், ஐயா உங்கள் காலில் விழுகிறேன், என்னை மன்னியுங்கள், எனிமேல் தவறு நடக்காது என மிக பணிவோடு வருவாய் துறை அதிகாரியிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன்.

இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அந்த அதிகாரி, “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு” என கூறியிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். என்னைப்போல் இந்த முகாமில் யாரும் இனிமேல் பாதிக்க கூடாது, என்னை போல யாரும் அவமானப் பட கூடாது என்று, மின்னழுத்த மின்சார கம்பியை காலால் தொட, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தீ பிளம்பு போல வெடி வெடித்தது போல அவரது உடல் சிதறி கீழே விழுந்து ரவீந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

எனவே, இந்த இறப்புக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியையும், துணை போன தமிழக ஜெயலலிதா அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் வருவாயய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்வதோடு, இறந்த ரவீந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணமும், மகனுக்கு சரியான மருத்துவமும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்ததால், தாயகமான தமிழகத்திற்கு தஞ்சமடைந்தனர். ஆனாலும் இங்கும் அவர்களை சுதந்திரமாக வாழ விடாமல் சிறை போன்ற முகாம்களில் அடைத்திருப்பது கொடுமை செய்வது போன்ற வேதனையான விடயம் ஆகும்.

இனப்படுகொலை என தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு, இங்கேயும் படுகொலைக்கு துணை போவது போன்ற சூழ்நிலை காணப்படுகிறது, தமிழகத்திலே தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்த்துகிறது. இந்த நிலையை அரசுகள் மாற்ற வேண்டும்.

அவர்களும் மனிதர்களே என்னும் அடிப்படையில் அவர்களுக்கு திறந்த வெளி முகாம் அமைத்து அவர்களும், இந்திய பிரஜையை போல சுதந்திரமாக வாழவும், தமிழக அரசு உடனே தலையிட்டு அனைத்து வசதிகளையும் தமிழீழ அகதிகளுக்கு செய்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, March 6, 2016

அன்புக்கு அடிமையாக்கும், பிரேம் அவர்களுக்கு உதித்த திரு வாழ்த்து!

பசுமை பூங்காவில்,

சோலையின் சுவாசத்தில்,

நாஞ்சில் நாட்டில் நல்லவராய்,

4பேர் கூட்டணியியை ஊரூராய்,

கொண்டு செல்லும் மாசற்ற மாணிக்கம்.

இலவசத்தை இல்லாதாக்கி பொழுதெல்லாம்,

புத்தியோடு உத்திகளை உவகையோடு செய்யும்,

உவர் நிலத்தை உழவனாய் கடைந்தெடுக்கும் உழவாளி!

விண்ணுயர மாளிகைகளை ஓமனில் ஓய்வறியாது உருவாக்கி,

வங்கி வரை நாவினால் வாள் வீசி வீரத்தை பறை சாற்றி,

கொஞ்சும் குமரிக்கு பெருமை சேர்த்த பெருந்தகை.

தாயகத்தின் கனவுகளை இயன்றளவு எளிதாக்கிட,

எல்லை தாண்டி, ஏகலைவனே இணையென்று,

குடும்பமே துணையென்று கூதூகலித்திட,

கழகத்தின் கண்மணிகள் அறியப்பெற,

இணையத்திலே இணைந்தோமே,

இணைந்தே களத்தில் உறவாக,

எந்நாளும் பணியாற்றிட,

பிறந்த நாள் வாழ்த்து.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

தம்பியின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கருணையே உருவாய் கொண்டும்,

தமிழர் நலனில் ஈடில்லா அக்கரையோடும்,

ஈழத்தின் தலைமகனை உயிராயேற்றும்,

கலிங்கப்பட்டி கர்ணனை கனவிலும் நினைத்தும்.

இணையத்தின் ஏவுகணையை குறி பார்த்து,

தன்னலமில்லா வியூகத்தில் தனித்துவம்பெற்று,

தமிழே இதய துடிப்பாய் வடிவமைத்து,

குடும்பத்தை குதூகலத்தோடு கொண்டாடும்,

அப்பனென்று இலவசமாய் அனுதினமும் அழைக்கும்

மகனுக்கு மனுவேலனாய், எந்நாளும் கடமையாற்றி,

மண்ணுலகில் மனிதராய், புனிதம் பெற்றிட,

நீர் பிறந்த கருணை நாளில், 

தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, February 15, 2016

சீனி போன்ற சுவையுடைய வாசகம் அண்ணனுக்குபிறந்த நாள் வாழ்த்து!

வைகோ என்ற ஒரு தமிழ் போராளியின் பெயருக்காக நட்பு என்ற போர்வையில் இணைந்தோம். வளைகுடா நாட்டிலும் சேர்ந்தே வேறு திசைகளில் இருந்தாலும் கழக உணர்வால் இணைந்தே குழுவாக பணியாற்றுகிறோம். ஆலோசனைகளில் ஆரோக்கியமானவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றல் படைத்தவர். தமிழக அரசியலில் நல்ல கூட்டணி மக்களுக்கான நலன் கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்றெண்ணி அதற்காக தனது பங்களிப்பை செலுத்தி பணியாற்றுபவர். நல்ல பண்பாளர். நட்பிற்கு நாடு போற்றும் அளவிற்கு ஆதரவு கொடுக்கும் இதயம் படைத்த அண்ணனுக்கு தனி செய்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், பொது பதிவிலும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

தங்கமான ஈஸ்வரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பல்லாங்குழி விளையாட்டிலிருந்து, கோலி, பம்பரம், தட்டுபிள்ளை, சிங்காம் பிள்ளை, கிரிக்கெட், கபடி, சீட்டு இது போன்ற அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடிய ஞாபகம்தான் வருகிறது என்றாலும், நொங்கு வெட்டி சாப்பிட்டதையும், ஊர் சுற்றியதையும் மறக்க முடியாமல் என் இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

முகநூலில் வா என்று பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வளவு நாள் என் கண்ணில் தென்படாத உன் முகநூல் கணக்கு, உனது பிறந்த நாளிலே உனது அழைப்பாக வந்தது.

பார்த்ததுமே மகிழ்ச்சி தாண்டவம்தான். அதுவும் உனது பிறந்தநாளில் வந்தது அதை விட எல்லையில்லா மகிழ்ச்சி.

வயதில் மூத்த அண்ணனாக இருந்தாலும், நாங்கள் சிறு வயதிலே கைகோர்த்து வயல் வழியில் நடந்து திரிந்த காலத்திலே நட்பு கலந்த உணர்வால் பெயரை சொல்லி அழைக்கவே தொடங்கியிருக்கிறேன் என் கால்சட்டை பருவத்திலிருந்தே. வயதில் மூத்தவனை இப்படி அழைக்கிறானே என சிலர் கேட்டதுமுண்டு. ஆனாலும் என் நண்பனான அண்ணன் இதுவரை ஏதும் சொன்னதில்லை. இப்போதும் அப்படியே பழகுகிறோம் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்.

வருடங்கள் கடந்தாலும் தொலை தூரத்தில் இருக்க அந்த உள்ளூரமான நட்பு மட்டும் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. நேற்றிரவு முகநூலை திறந்த போதுதான் உன் முகநூல் அழைப்பு. உடனே அழைக்க எண்ணினேன். ஆனால் இந்திய மணி 11.45. காலையில் அழைக்கலாம் என்றிருந்தேன். என் பணி சுமை என்னை அனுமதிக்கவில்லை. உணவு இடவெளியின் போதே என் உணர்வை எழுத்துக்களால் வடிக்க முடிகிறது.

எங்கள் நட்பு இப்படியே தொலை தூரத்தில் எவ்வளவு நாள்தான் கடக்குமோ என்ற ஏக்கம்தான் என்னை வாட்டுகிறது. வறுமை தீராதா, ஊரோடு வாழ முடியாதா என்ற ஏக்கமும்தான் இன்னும் மேலோங்கி நிற்கிறது.

வயல்வழிகளில் நண்பனோடு கதை பேசி நடக்க முடியாதா, நொங்கு வெட்டி சண்டை போட்டு உண்ண முடியாதா, கிணத்தடியில் நள்ளிரவு வரை பேச முடியாதா, மிதி வண்டியில் பல மைல் செல்ல முடியாதா, வீட்டிற்கு தெரியாமல் தொலை தூரம் பயணிக்க முடியாதா என்ற எண்ணமெல்லாம் உன் ஒரு முகநூல் அழைப்பிலே நிகழ்ந்துவிட்டது.

நண்பனே வாயிலிருந்து வார்த்தைகளால் சொல்லமுடியாதவற்றை என் இதயித்தினூடாக என் கை விரல்கள் கவிதை பாடி விட்டன. உடல் தூரமாக இருந்தாலும், அந்த நட்புகள் உள்ளூர இதயத்திலே எப்போதுமே இருக்கிறது என்பதற்கு நீயும் சன்றாகும்.

நட்பை எவராலும் பிரிக்க முடியாது. நட்பிற்கோ எல்லை கிடையாது. கடல் தாண்டினாலும் கருணையோடு அளவளாவும் அன்பு மட்டும் அப்படியே அசையாமல் ஆட்கொள்கிறது.

வரும் காலம் எபோது நட்பு பாராட்டலாம் என்ற ஒரு எண்ண ஓட்டதிலே நண்பன், சந்தோசமாக நலமோடு வாழ நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.

Tuesday, February 9, 2016

வாழ்வில் வசந்தம் வீச ப்ரியமான தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முகநூலில் முகமறிந்து, ஈரோட்டில் இருகை கொடுத்து தூக்கியெடுத்து ஆராதித்த நேரத்தை எண்ணி நினைத்து பெருமைப்படுகிறேன். வண்டியிலிருந்து இறங்கியபோதும், நண்பர்களிடத்தில் உரையாட அவரை அழைத்து ஓரிடத்தில் விட்டதையும், சகோதரர் சோமு மண மேடையில் கொண்டு சேர்த்ததையும், போகும்போதும் வண்டியில் கைகொடுத்து இருக்கையில் அமர்த்தியதையும் எண்ணி பார்க்கிறேன்.

தம்பி வசந்த ப்ரியன் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்ற திறனுடைய ஒரு போராளி. தமிழகத்தின் தன்னலமில்லா போராளி, தமிழ்நாட்டின் ஊழியன் வைகோவே தம்பியின் எழுத்துக்களை பற்றி பெருமைபட்டது வசந்திற்கு வசந்தம் வீச செய்ததன்றோ.

தம்பியே! உன் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க, உன் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க, தொடர்ந்து போராடும் உன் குணத்தால் வாழ்வில் ஒளி வீச பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்