Saturday, October 22, 2016

வைகோவின் களப்புலியை கண்டு இணையமே பயந்துவிட்டதோ?

பல நாட்களாகவே முகநூலில் நண்பர்கள் அழைத்தால் ஒலி எதுமே கேட்காது. பின்னர் நான் தனி செய்தியில் நண்பர்களிடத்தில் சொல்வேன் இந்த நாட்டில் வாய்ஸ் எல்லாம் பிளாக் செய்கிறார்கள் என்று. அப்புறம் நாங்கள் தனிசெய்தியில்தான் பேசுவது வழக்கம்.

ஆனால் சிறுது நேரத்திற்கு முன் வைகோவின் வரிப்புலி அண்ணன் திருப்பதி சாய் அவர்கள் அழைத்தார்கள். நான் எப்போதும் போல அட்டன் செய்தேன். நானும் ஒலி கேட்காது, தனி செய்தியில் ஒலி கேட்கவில்லை என்ற செய்தி சொல்ல மினிமைஸ் செய்கிறேன் ஒலி கேட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தலைவர் சந்தோசமாக இருந்தார் என்று அண்ணன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

பாருங்கள் என்ன ஆச்சரியம் வைகோவின் வரிப்புலி அழைப்பார் என்று இணையமே அதிர்ந்துவிடும் என பயந்து மார்க் சரி செய்துவிட்டாரோ?

மகிழ்ச்சியான தருணம் திருப்பதிசாய் அண்ணா நன்றி.

தமிழன்புடன்,

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, October 21, 2016

குமரி கட்டளை தளபதி தலமையில் சென்னைக்கு!

புலிப்படை தலைவனை காண குமரி மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் டிமிட்டிலால், ஓமன் இணையதள அணி உறுப்பினர் மாஹீன் ஆகியோர் சென்னை பயணம்.

நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில்...

உங்கள் பயணம் சிறக்கட்டும். நல்ல முடிவுகள் வரட்டும். தமிழகம் செழிக்கட்டும், தமிழர்கள் வளரட்டும், தமிழ் புகழ் ஓங்கட்டும்...

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, October 19, 2016

சகோதரர்கள் சோமு, சசிகுமார், ரவி ஆகியோருகு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்


சகோதரர் தமிழீழ சோமு அவர்கள் கொண்டுள்ள தமிழ் பற்றை தான் சார்ந்திருக்கும் கழகப்பற்றை நாம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. தன் ரத்த நாளங்களின் வேகம் குறைந்தாலும் தமிழ் மீதுள்ள காதல் ஓட்டம் குறையாவண்ணம் செயல்படுபவர். தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்காதா என்று ஏங்கும் உன்னத ஜீவி. அதனால்தான் தன் பெயரிலே அதை தாங்கி பிடிக்கிறார். வெற்றியோ தோல்வியோ சலிப்படையாமல், தான் தூக்கி பிடிக்கும் கொடியை பிறர் காண, துன்பம் தீர்க்கும் கொடி என்ற வாசகம் அவர்கள் எண்ணத்தில் உதிக்க, உயர பறக்க செய்து விட்டு செல்கிறார் செல்லுமிடமெல்லாம். சகோதரருக்கு என் அன்பு வாழ்த்தை அவர் பிறந்த பொன்னாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் வைகோ சசி குமார் அவர்கள் ஆயிரம் சோதனை காலங்களிலும் சிறுது நாள் விலகியிருக்கலாம் என முடிவெடுத்தாலும், தமிழ் பற்றாலும், நண்பர்களின் நட்பினாலும், முடங்கி கிடக்க முடியாமல், பொதுவாழ்விற்கு தன்னை அற்ப்பணித்தவர். களமாடிக்கொண்டிருக்கும் லட்சகணக்கான காளயர்கள் கூட்டத்தில் உறுமும் புலி போன்றவர். அண்ணனை வாழ்த்துவதில் மகிழ்ச்சி. வளமோடு வாழ்க.

உறந்தை ரவி அவர்களை சொல்ல எண்ண ஓட்டமெல்லாம் பல கூறுகளாய் பல செயல்களை நினைவுபடுத்தினாலும், சிங்கப்பூரில் மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்த மறுமலர்ச்சி வேங்கையாக வலம் வருபவர். அன்பு காட்டு சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, October 18, 2016

இளம் கருவூலம் தீபனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

மென் பொறியாளராய் வேலை பார்த்தாலும், கடினமாக பழகுபவர்களுக்கு கடினமாகவும், மென்மையானவர்களுக்கு மென்மையாகவும் பழக கூடியவர். அறிவார்ந்த சொற்களை பயன்படுத்தி நாகரீகமான பதிவின் மூலம் மறந்து விட்ட வரலாற்றை கூட கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துபவர்.

இவர் ஒரு ஊற்று பெருக்கு. அது புதியவர்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவூலம். இளம் பேச்சாளருக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு குறிப்புகளை சிறு மூளையில் சேமித்து வைத்திருக்கும் ஒரு அற்புத ஜீவி. 

தம்பியின் தமிழீழ உணர்வை கண்டு அனைவரும் பாராட்டியதுண்டு. அவரின் பெயரிலே தமிழீழம் கலந்த வரலாறே அடங்கியிருப்பது நிதர்சனம்.

அவரின் கனவும், எங்கள் கனவும், தமிழீழ தமிழர்களின் கனவும், உலக தமிழர்களின் கனவுமான தமிழீழம் மலரும் என்ற ஒரு உன்னதமான நம்பிக்கையில் அன்பு தம்பி தீபனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்வில் வளம் பல பெற்று, அன்பு என்னும் உலகை உணர்விலே கையாண்டு, வெற்றி புகழ்மாலை சூட வாழ்த்துகிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, October 17, 2016

கொடையுள்ளம் கொண்ட கருணா, கெளரி சகோதரர்களுக்கு பிறந்த நாள்!

சகோதரர் கருணா அவர்கள்:

அனைத்து நண்பர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதில் வல்லவர். கருணை உள்ளம் கொண்ட அண்ணன் இருக்குமிடமெல்லாம் சிரிப்பலைகள் அடித்துக்கொண்டேயிருக்கும். 

நவரத்தினத்தில் தவழ்ந்தாலும், மண் தரை நண்பர்களிடத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை. கல்லை கடைந்தாலும் அவர் மனது எப்போதுமே இரக்கமுடையதாகவே காணப்படும். 

ஊராட்சியில் துணை தலைவராக இருந்திருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னால் இயன்ற கழக பணிகளை செய்யும் தன்னலம் கருதா சேவகன்.

அண்ணன் பிறந்த நாள்களை கடப்பது போல இல்லற வாழ்விலும் அடியெடுத்து குழந்தை செல்வங்களுடன் கடக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து, மணக்கோலத்தில் மலர் தூவி வாழ்த்து சொல்ல ஆவலுடன்......


சகோதரர் கெளரி அவர்கள்:

திருப்பூரில் இருப்பது போல காட்சியளிப்பார். ஆனால் தமிழகம் சுற்றி வருவார். வேலை நிமித்தமானாலும் இயற்கையையும், அதன் வரலாற்றையும் நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பார்.

ஒவ்வொரு நாளும் ஓர் இடம் போல தோன்றும். இந்திய எல்லை வரை கடந்து வருவார். ஆனாலும் கடல் தாண்டிய கண்மணிகளிடத்தும் அன்பு கூருவார்.

ஆதி சங்கரனே அருள் பாலித்து கொடையுள்ளம் கொண்டவராக இருப்பார். கருணையை தன் பலமாக கருதுபவர். சில உயிர் காக்கும் கருவியாக செயல்பட்டவர். இன்னும் திரை மறைவில் பல சேவகம் செய்பவர். 

அண்ணனை இந்த நன்னாளில் வாழ்த்துவது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. நேரம் கடந்தாலும், மன பண்புகளை எழுதுவது பேரின்பமே...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...


மறுமலர்ச்சி மைக்கேல்.

Sunday, September 25, 2016

தமிழீழத்தில் "எழுக தமிழ்" எழுச்சி பேரணி!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் முற்றவெளியில் ‘எழுக தமிழ்‘ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் நேற்று 24-09-2016 அன்று திரண்டெழுந்தனர். தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கின்ற சிகப்பு மஞ்சள் கொடியை ஏந்தியவாறு எழுச்சி பேரணியில் கலந்துகொண்டனர். 

தமிழர்களின் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை சிங்கள கொட்டம் அறிந்திருக்கும். அற வழியில் தொடங்கிய போராட்டம், ஆயுதமேந்த நிர்பந்தப்படுத்தப்பட்டு, மீண்டும் அனைத்து தமிழீழ மக்களாலும் அற வழியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழீழ புலிக்கொடி ஐநா முன்றலில் பட்டொளி வீசி பறக்கும் நாள் வரை தமிழர்களின் தாகங்கள் தணியாமல் போராட்டம் நடபெற்றுக்கொண்டேதான் இருக்கும்.

தமிழீழத்தினை வென்றிட.... எழுக தமிழினமே...

தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, September 24, 2016

12 கோடி உலக தமிழர்களுக்கான விடுதலையின் முகவரி!

தமிழர்கள் அடிமைகளாகவே வாழ வேண்டுமா! தமிழனை தலை நிமிர நாதி இல்லையோ என்ற அவல குரல் ஒலிக்கும்போது அவலங்களை ஒழிக்க அவதாரம் எடுத்த பிள்ளைதான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

1987 ல் சுதுமலையில் தாயக மக்களிடையே பிரபாகரன் அவர்கள் தெளிவாக உரை நிகழ்த்தும்போது,

"எம் மக்களை காப்பாற்ற ஏந்திய ஆயுதம் இந்திய படையிடம் ஒப்படைப்படைக்கும் இந்த கணத்திலிருந்து, எமது மக்களை பாதுகாக்கும் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்" 

என்று இந்தியாவை நம்பியதை, உலக தமிழர்களும், தமிழீழத்தை புரியாத தமிழர்களும் அறிய செய்யவே புகழேந்தி தங்கராஜ் அவர்கள்  தன் வாழ்நாளை ஒதுக்கி விடுதலையின் முகவரியின் முன்னுரையிலே உலகறிய செய்துள்ளார்.

9 ஜூலை 2016 ல் சென்னை கவிக்கோ அரங்கில் தமிழின முதல்வர் வைகோ வெளியிட விடுதலையின் முகவரியுடன் நெருப்பு பூச்சாண்டியும் உலகறியப்பெற்றது.

இந்த நூல் தமிழகத்தை விட்டு வெளியேறி அரபி கடலை கடந்து ஓமன் மற்றும் பல நாடுகளை சென்றடைந்திருக்கிறது. சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்ததை அறிந்து, மதிமுக இணையதள நேரலை அண்ணன் அம்மாபேட் கருணாகரன் அவர்களிடன் கேட்டபோது, 

"எதை கேட்கிறீர்கள் தமிழீழ தலைவர் பிரபாகரன் புத்தகம்தானே, உங்களுக்கு விலையில்லாமலே நான் தருகிறேன்"

என்று சொல்லி வாங்கி தந்து, அதை ஓமன் இணையதள அணி உறுப்பினர் அண்ணன் ராக்கப்பன் அவர்களிடத்தில் கொடுத்து அரபி கடல் தாண்டி அனுப்பினார். அண்ணன் ராக்கப்பன் அவர்கள் வேறு நகரத்தில் வேலை செய்வதால், நேரடியாக தர முடியாத காரணத்தால் அவருடைய நண்பர் செபஸ்டியான் அவர்களிடத்தில் கையளிக்க நான் மஸ்கட் நகரம் சென்று பெற்றுக்கொண்டேன்.

முன்னுரையிலே முகவரியை அறிந்துள்ளீர்கள், உள்ளுரையில் உணர்ச்சி பிளம்பு வெடிக்க தமிழர்கள் அழிக்கப்பட்டதை உங்களுக்கு உள்ளபடியே படித்து தருகிறேன். விடுதலையின் முகவரி 648 பக்கங்கள், நெருப்பு பூச்சாண்டி 656 பக்கங்கள் அடங்கிய வரலாற்று புத்தகத்தை அன்பளித்த அண்ணன் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்.