Monday, January 11, 2021

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழீழ படுகொலையை நினைவு கூரும் வகையில் பல்கலைகழக வழாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இணையவழி மூலமாக 11-01-2020 ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் தாய் தமிழகம், தமிழீழ தாயகம். புலம்பெயர் தமிழர்கள் பங்றேற்றார்கள்.
அடியேனுக்கும் மதிமுக சார்பில் ஒமானிலிருந்து கண்டனகுரல் எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றிகள்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழீழ மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது சிங்கள அரசு!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்காக பல்கலைகழக மாணவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் கிழக்கு மாகாண மாணவர்களும் போராட திரண்டனர்.

இதை கண்டித்து தமிழகம், உலகம் முழுதுமுள்ள தமிழர்களின் தொடர் கண்டன போராட்டத்தால் அடிபணிந்த சிங்கள அரசு, பல்கலைகழக வளாகத்திலேயே, நினைவுத்தூண் இடித்த இடத்திலே துணைவேந்தர் தலைமையிலேயே மீண்டும் நினைவுசின்னம் எழுப்ப அனுமதியளித்தது. மாணவர்களாக சேர்ந்து அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ் எழும். தமிழீழம் மலரும்.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மைக்கேல் செல்வ குமார்

ரஜினியை விடுங்க மண்டவீங்கிகளா!

எனக்கு உடல் நிலை சரியில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை என சொல்லிய பிறகும் எதுக்குடா வம்படியா இழுத்து விட்டு கொல்ல பாக்குறீங்க மன்றம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்கிரிகளா...

வயசான காலத்துலயாவது rajinikanth என்ற நடிகரை மூடிக்குட்டு இருக்க விடுங்கடா...

Saturday, January 9, 2021

நினைவு தூணை இடித்த சிங்கள அரசை கண்டிக்கிறேன்!

எங்கள் உறவுகளை தமிழர்களை தமீழிழத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து கொன்றுவிட்டு அவர்கள் நினைவால் யாழ் பல்கலையில் எழுப்பிய நினைவுதூண்களை கூட நேற்று இரவு 08-01-2021 யாரும் இல்லாத நேரத்தில் அழித்து அப்படி ஒரு இனக்கொலை நடக்கவில்லை என்பது போல மறைக்க பார்க்கிறது சிங்கள பேரினவாதம்.

உலகம் இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழர்கள் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, இன்னும் கையில் எடுக்கமாட்டார்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

இப்போதைய தேவையில் அறவழியிலேயே எங்கள் நாட்டை தமிழீழத்தை அடைய விரும்புகிறோம். எங்களை ஒடுக்க ஒடுக்க எங்கள் உணர்வுகளை சிதைக்க சிதைக்க வீறு கொண்டு எழும் நாள் தள்ளி போகாது என்பதை நினைவூட்டுகிறோம்... அப்படி வரும் நாள் உலகமே எதிர்த்தாலும் சிங்கள தரைமட்டமாகும் என்பதையும் எச்சரிக்கிறோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
எங்கள் லட்சிய கனவு, தமிழீழம் அமையும் வரை என்றும் ஓயாது...

தமிழீழ தாகத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

Monday, November 30, 2020

கொடுப்பைக்குழியில் மரங்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை தேவை! உரிமைகளை வென்றெடுக்க‌ சாலை மறியலுக்கு தயாராவோம்!

குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிக்கு‌ உட்பட்ட‌ கொடுப்பைக்குழி கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து காந்திஜி‌ இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 500 க்கு மேலான நாட்டு செடிகள் இரும்பு வேலி பாதுகாப்புடன் ஏறத்தாள ₹100000 செலவில் கொடுப்பைக்குழி ஊர் முழுதுமுள்ள  சாலைக்கும், ஆற்றுக்கும் அதிக இடைவெளிவிட்டு யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இன்று 30-11-2020 தமிழ்நாடு அரசு‌ வாகனத்தில் வந்த சிலர் மரங்களை‌ கூண்டோடு பிடுங்கி‌ எறிந்து நாசம்‌ செய்தனர். 

ஊர்‌ மக்கள் வேண்டுகோள் வைத்தும், மரத்தின் பயனை‌ எடுத்து கூறியும், காரணத்தை சொல்லிவிட்டு அகற்றுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் தான்தோன்றிதனமாக ஆவண போக்கில் மரங்களை அகற்றினார்கள் தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்தவர்கள்.
 
ஊர் மக்கள்‌ மரம் நட்டது, மழை தருவதற்காக பசுமை நாடாக‌ மாற்ற வேண்டும்‌ என்ற எண்ணத்தில் குழி தோண்டி‌ புதைத்தது இன்றைய அரசு.

தமிழ்நாடு வாகனத்தில் வந்தவர்கள் எந்த அரசு ஊழியராக இருந்தாலும் பிடுங்கிய மரங்களை திரும்ப நட்டு தர வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு உரிமைகளை வென்றெடுக்க தயாராக வேண்டும்.

மரம் அகற்றிய பாதக செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மரங்களை‌ பிடுங்கி எறிந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அரசே அனைத்து மரங்களையும் மீண்டு நட்டு தர வேண்டுமென்று வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை காந்திஜி மன்ற உறுப்பினர் என்ற முறையில் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

மரம் நட்டு வளர்ப்பது பிறந்த குழந்தையை‌‌ பா து கா ப் து போ லா கு ம். இந்த‌ விசம காரியத்தை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
உறுப்பினர்.
காந்திஜி இளைஞர் முன்னேற்ற சங்கம்.
கொடுப்பைக்குழி.
30-11-2020

Sunday, November 29, 2020

Awarded as winner from Oman!

 


World CIO 2020

World Biggest CIO Leadership Excellence Award

The winner from Oman in the category of Oman

Awarded as winner


Thanks to supporting from my management team and families and friends.


Regards,
Micheal Selva Kumar

முகநூல் மார்க் அவர்களுக்கு மைக்கேலின் அன்பு மடல்!


அன்பு சகோதரர் மார்க் அவர்களே!


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பயிற்றுவித்த எங்கள் பாட்டன் கணியன் பூங்கன்றனார் ஊரிலிருந்து மைக்கேல் செல்வ குமார் எழுதும் மடல்.

அன்பு சகோதரர் மார்க் அவர்களே!

தமிழ் மக்கள், முகநூலில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் படத்தையோ, தமிழீழ படத்தையோ, தமிழீழம் சார்ந்த செய்திகளையோ பதிந்தால், பதிவுகள் எங்கள் முகநூல் கணக்குகளிலிருந்து அகற்றப்படுகிறது. முகநூல் கணக்குகள் முடக்கப்படுகிறது. இது தற்போது அல்ல, சில வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு எதிரான உங்கள் செயலாகும். இந்த முடக்கங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்து நடக்கிறதா என்று தெரியவில்லை. தெரியவில்லயென்றால் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்களின் பதிவுகளை முகநூலில் முடக்குவதன் மூலம் தமிழர்களை விடுதலையை தடுக்குறீர்கள், அவர்களை அடிமையாகவே இனவிடுதலை அடையாமல் வைக்க நீங்கள் சிங்கள பெளத்த இலங்கை அரசுக்கு வேலை செய்கீறீர்கள் என்பதை உங்கள் மீது குற்றச்சாட்டாக வைக்கிறேன்.

தமிழீழம் சார்ந்த பதிவுகளை, நீங்கள் தமிழ் மக்களிடத்தில் பேசி அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆபாச படங்களையோ கொலை கொள்ளை சம்பவங்களையோ ஆதரிக்கும் படங்கள் முகநூலில் வந்து பெண்களை முகம் சுழிக்க வைக்கிறதே? அப்படி பட்ட பதிவுகளை நீங்கள் தடுக்காமல் தமிழர்களின் தமிழீழ உணர்வுகளை முடக்க நினைக்கிறீர்கள் என்று உங்களை குற்றம்சாட்டுகிறேன். நீங்கள் என்று சொல்வது தனிநபரான உங்களை அல்ல உங்கள் முகநூல் நிறுவனத்தை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்படியான ஆபாச பதிவு செய்பவர்களை முடக்குவதில்லை. அவர்கள் அதிகம் எழுதுகிறார்கள். அவர்கள் மேலும் சுதந்திரம் கொடுத்து எழுத தூண்டுவதுபோல அவர்களை தடை செய்யாமல் இருப்பது முகநூல் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் மக்கள் இதயங்களிலிருந்து தமிழீழத்தையும் மேதகு வே பிரபாகவன் அவர்களையும் அழிக்கவோ நீக்கவோ முடக்கவோ முடியாது. மாறாக அடக்குமுறை ஒடுக்குமுறை என்பது தமிழர்களை திமிறி எழவே செய்யும் என்பதை கூறிகொள்கிறேன்.

இப்படியே எங்களின் தமிழீழ உணர்வுகளை வேகமாக வீரியமாக முடக்குவீர்களேயானால், எங்கள் உணர்வுகளை முடக்க முடக்க தமிழீழம் மலரும் காலம் விரைவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டவில்லையென்றாலும் கேடு விளைவிக்காமல் இருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டு, ஆராய்ந்து புரிந்து பதிவுகள் மீதான நீக்கம், முடக்கத்தை இனிமேலாவது செய்யாமல் இருக்க வேண்டுமென்று உங்கள் முகநூல் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறேன். இதை translator மூலம் படித்து புரியாத பட்சத்தில் உங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் உணர்வுள்ள தமிழன் மூலம் பதிவின் உண்மையை அறிந்து இனிமேலாவது தமிழர்கள், தமிழீழம் சாந்த பதிவுகளை செய்ய அனுமதிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
தமிழன், தமிழ்நாடு, இந்தியா