Thursday, October 12, 2017

15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்ட எங்கள் கிராம சாலை!

2001 அல்லது 2002 ல் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போடபட்ட சாலை இப்பொழுது 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஆனால் ஒருவகையில் பண இழப்பையும் ஏற்ப்படுத்துகிறது.

எப்படி என காண்போம்.

நான் பிறந்து வளர்ந்த பொன்னாடாம், சூரிய உதயம் காணும் எங்கள் குமரி மாவட்டத்தின், கொடுப்பைக்குழி கிராமத்தில், இப்போது போடப்பட்டிருக்கும் சாலையின் அருகே இருக்கும் வீட்டின் தரை மட்டம், இந்த சாலை செப்பனிடப்பட்டபின் தாழ்ந்துள்ளது என்பது வேதனையளிக்கிறது. சாலையிலிருந்து அண்ணாந்து பார்த்த வீடுகள், இப்போது சாலையின் மட்டத்திற்கு சரிசமமாக இருப்பது மன உழைச்சலை ஏற்படுத்துகிறது.

சாலை சீரமைப்பது, செப்பனிடுவது என்பது, பழைய சாலையின் மேல் மட்டத்தை அகற்றி விட்டு பழைய சாலை இருந்த அதே உயரத்திற்கு புதிய சாலை போடுவதுதான் சரியான விதி. அப்படி செய்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் தமிழகத்தில் அதற்கு மாறாக, பழைய சாலையை தோண்டி அகற்றுவதற்கு ஒதுக்கிய பணத்தை செலவளிக்காமல், அதற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏற்கனவே பழுதாகியிருக்கும் சாலையின் மேல், புதிய சாலை அமைத்துவிட்டு, அரசுக்கு கணக்கு காட்டி விடுகிறார்கள்.

இதனால் அனைத்து சாலைகளின் பக்கத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் சாலையை விட தாழ்வானதாக அமைந்துவிடுகிறது.

அப்படியானால் சாலையானது, வீட்டின் தரைமட்டத்திற்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படியே போனால் இன்னும் இரண்டு, மூன்று தடவை சாலை செப்பனிடப்பட்டால் , வீட்டு தரை மட்டத்தை விட சாலை மட்டம் உயரமாக இருக்கும். இது சரியான முறை கிடையாது.

இப்படி சாலை உயரமாக இருப்பதால், மழை காலங்களில் எளிதாக மழை நீர் வீட்டினுள் வருகிறது, வீடு பாதிப்படைகிறது. எனவே வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

50 வருடங்களுக்கு திட்டமிட்டு கட்டும் வீடு இதே போன்று சாலைகள் அமைத்தால் 25 வருடங்களிலே இடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சிபெறும். தனி நபர் வருமானம் வெகுவாக குறையும். ஆட்சியாளர்கள் காசு சுருட்டும் நிலை ஏற்படும். இது நாட்டுக்கே பெரிய இழப்பாகும்.

இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே காரணம். அவர்கள் இந்த நிலையை உணர்ந்து மக்கள் பண இழப்பை இனிமேலாவது தடுக்க தனது வீட்டுக்கும் இதே நிலைதான் என புரிந்து பொறுப்புணர்வுடன் கடைமையாற்ற வேண்டும்

இவையெல்லாம் மறுக்கப்படும் பட்சத்தில், வளருகிற தலைமுறை இளைஞர்களாவது வீதிக்கு வந்து இது போன்ற மறைமுகமான அநீதிகளை தட்டி கேட்க வேண்டும்.

கேலி கிண்டல்களை குறைத்து களத்திற்கு வர வேண்டும். அரசுகள் அடிமைகளாக இருப்பதை கண்டிக்க வேண்டும். நாம் வாக்களித்த அரசு நமக்கு நன்மை செய்யவில்லையென்றால், அரசை கவிழ செய்யும் அதிகாரம் வாக்களித்த நமக்கே இருக்க வேண்டுமென்று போராட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிபட்ட நாள் வரும்போதுதான் இந்தியா வல்லரசாகும். தமிழ்நாடு தழைக்கும்.

தமிழ்நாடு முழுதும் இதே நிலை நீடிப்பதை தடுக்க நாம் என்ன செய்ய போகிறோம்.

ஒரே வழி நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கொடுப்பது....

சிந்திப்பீர்களா?

ஊர்பாசத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

Thursday, September 14, 2017

இரண்டே நாளில் ஒட்டான்குளத்திற்கு மழை நீர் செல்லும் கால்வாயை உடைத்த விசமிகளுக்கு கண்டனம்!

2016 ஆம்வ ருடம் முதல் குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுப்பைக்குழி ஒட்டான்குளத்தில், பருவ மழை பொய்த்து போன காரணத்தால், தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்தது. பின்னர் அடுத்த பருவ மழை வருவதற்கு முன்னதாகவே குளத்தை தூர்வாரி தயார் நிலையில் வைத்தனர் ஊர் மக்கள். 

இதையொட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு 11-09-2017 முன்னர் மழை பெய்ததால், ஆற்று கால்வாய் வழியாக ஒட்டான் குளத்த்தை மழை நீர் எட்டியது. ஆனால் இடையில் செட்டிகுளம் அருகில் ஒட்டான்குளம் செல்லும் கால்வாய் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் செட்டிகுளத்திற்குள்ளும், அருகிலுள்ள கால்வாயிலும் சென்று வீணானது.

இதை கண்டறிந்த கொடுப்பைக்குழி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, உடைப்பை மண் வைத்து நிரப்பியும், கனமழை வந்தால் திரும்பவும் உடைப்பு ஏற்ப்படாவண்ணம் மணல் மூட்டைகளை அடுக்கியும் தற்காலிகமாக மழை நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ஒட்டான்குளம் தொடர்ந்து மழை பெய்தால் நிரம்பும் என எண்ணி கொடுப்பைக்குழி ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், 13-09-2017 அன்று சரி செய்யப்பட்ட கால்வாயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை சமூக விரோதிகள் உடைத்தெறிந்திருந்து, ஒட்டான்குளத்திற்கு மழை நீர் வராமல் தடுத்து கொடுப்பைக்குழி மக்கள் மகிழ்ச்சியை சீர்குலைத்திருக்கின்றனர்.

இந்த சமூக சீர்கேட்டு செயல் மூலம் விசமிகள், சமூகத்திற்கு எதிராக கொடுபைக்குழி மக்கள் விழித்தெழ வேண்டுமென அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.

இதனால் மழை நீர் ஒட்டான்குளத்தில் சென்று சேர முடியாத நிலையில், ஒட்டான்குளம் மூலம் பயன்பெறும் பல ஏக்கர் தென்னை, வாழை மரங்கள் அழியும் நிலையில் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே, இந்த சமூக சீர்கேட்டி ஈடுபட்ட விசமிகளை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை இந்த விடயத்தில் உடனே தலையிட்டு, உடைப்புகளை அகற்றிய விசமிகளை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பஞ்சாயத்து நிர்வாகம், கால்வாயை நிரந்தரமாக நீர் செல்லும் வகையில் சரி செய்து ஒட்டான்குளத்திற்கு நீர் நிரப்பி கொடுப்பைக்குழி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தாயக பணியில்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 22, 2017

பரவசமான பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ.

காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.  

அந்த இளைஞனே இன்னாளில் அந்த தலைவனின் நிழலாக பின் தொடருகிறான். 

ஆதலால் உலக தலைவர்கள் அறிந்துகொண்ட இளைஞன் தம்பி பிரசாந்த்.   வாழ்வின் எல்லா வளமும் புகழும் கிடைத்து பெருவாழ்வு வாழ தம்பி பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 8, 2017

மாணவர்களே! பெண்களே! திரண்டு வாருங்கள்! கச்சதீவை மீட்டு தாருங்கள்! சிங்களவனை கண்டிக்கிறேன்!

என் சொந்த நிலமான கச்சதீவை சிங்களவன் எப்படி பயன்படுத்த முடியும்.

என் நிலத்தை நான் பயன்படுத்தியிருந்தால் என் சகோதரன் சிங்களவன் குண்டு துளையுண்டு மடிந்திருப்பானா...?

ஏ தமிழினமே! எதற்காக போராடுகிறாய் என தெரியாமலே போராடுகிறாய்! நீதி வேண்டுமென்கிறாய்...

நீதியென்றால், பணமா?, துப்பாக்கி சூடு நிறுத்தமா? மீன்பிடி அனுமதியா? கச்சதீவு மீட்பா? என சரியான வரையறை இல்லாத வரை இந்த இனப்படுகொலையை சிங்களவன் தமிழினம் மீது நடத்திக்கொண்டேயிருப்பான்.

நாம் இந்தியத்திடம் நீதி கிடைக்காதா என 2 நாட்கள் ஆயிரக்கணகானோர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்போம்.

எனவே இப்படி செய்வதால், இதுவரை நமக்கான நீதி கிடைத்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தோமா?

ஒரே தீர்வு! கச்சதீவு மீட்புதான் என உலக நாடுகள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு,

"மாணவர்களே திரண்டு வாருங்கள். கச்சதீவை மீட்டு தாருங்கள்"

கச்சதீவை மீட்கும்போது தமிழகம் தானாக தனி நாடாகும் என உறுதியாக சொல்கிறேன்.

இல்லையென்றால் கீழே பதிந்திருக்கும் இந்த வீடியோவில் இருக்கும் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேந்த பிரிட்ஜோ என்ற மீசை எட்டிபார்க்கும் பருவத்திலிருந்த 21 வயது நிரம்பிய சகோதரனை சுட்டுக்கொன்றார்களே சிங்கள ஈன கொலையாளிகள், இதே நிலமை நமக்கும் ஏற்ப்படும். அப்போதுதான் நமக்கான வலியும் வேதனையும் தெரியும். இதை தடுக்க நீங்கள் எப்போது வீதிக்கு வரபோகிறீர்கள்.

நமக்கானது 2 நாள் ஒரு வார போராட்டம் அல்ல. உலகநாடுகள் தலையிடும் அளவிற்கான போராட்டம் வேண்டும். அதற்கு மாணவர்களும் பெண்களும்தான் முன்வர வேண்டும். இளைஞர்களும், பெரியவர்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் அரணாக தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகள் அரண் அமைக்க வேண்டும்.

தொடர் போராட்டத்தில் கச்சதீவை மீட்டெடுத்து நம் சொந்த நிலத்தை ஏன் பயன்படுத்த முடியாது என உறுதிகொள்ளும் மன வலிமை ஏற்ப்படுத்துங்கள்.

நாளை நமது தமிழ்நாட்டுக்கு தனியான கொடி ஐநாவில் பறக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுங்கள்.

தமிழன் உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறானென்றால் அவன் திறமைக்காக மட்டுமே... ஆனால் அவன் நாடு அடைய மட்டும் திறமை இல்லையா என கேள்வி கேட்டோர் செவிகளில் பறையடிக்கும் விதமாக போராடி தமிழரசு அமையுங்கள்.

தமிழினத்தை, தமிழ் மொழியை பாதுக்காக்க முன்வருவீர்கள் என்ற உயரிய எண்ணத்தில்........

தமிழ் தாயக கனவுடன்,
மைக்கேல் செல்வ குமார்

Friday, March 3, 2017

இசையமைத்த இளவலுக்கு வாழ்த்துக்கள்!

மீத்தேனை விரட்டியவரை எதிர்ப்பான், ஆனால் மீத்தேன் ஆபத்துக்கு கையெழுத்து போட்டவரை ஆதரிப்பான்.

நியூட்ரினோவை ஒற்றை மனிதனாக வழக்காடி நிறுத்தியவரை கிண்டல் செய்வான்.

முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்த, ஊர் ஊராக சென்று , அணை உடைப்பதை கடுக்க கால் கடுக்க நடந்தவரை தடுப்பான். ஆனால் அந்த கால ஆட்சிகளை பாராட்டுவான்.

புற்று நோயை உண்டாக்குகின்ற ஸ்டெர்லைட் நாசகார ஆலை மூடி 20 வருடமாக வழக்கு தொடர்ந்து, இன்றும் உச்ச நீதிமன்றத்தில் மூட வலியுறுத்த போராடுபவரை எதிர்ப்பான்.

ஹார்போ கைட்ரஜன் வாயு எடுக்க விடாமல் முதல் அறிக்கை மற்றும் போராட்டம் நடட்தியவரை கிண்டல் செய்வான்.

ஜல்லிகட்டுக்காக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க பாராட்டியவரை, அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். மெரினா புரட்சி என்ற பெயர் உலக வரலாறை பதிய வைக்கும் விதமாக "மெரினா புரட்சி" என பெயரிட்டு அறிக்கை விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்தவரை விமர்சிப்பான். அந்த அறிக்கையின் பலனால்தான் வரலாற்றில் மெரினா புரட்சி என்று தெரிந்தும் தெரியாதது போல விமர்சிப்பான்.

அணு உலை விவாதத்தில் ஒற்றை உறுப்பினராக எதிர்த்தவரை விமர்சனம் செய்வான். ஆனால் அணு உலை வேண்டாம் என்றவர் போராடினால் கிண்டல் செய்வான்.

எப்படிதான் அரசியலில் நேர்மையானவரை அடையாளம் கண்டுகொள்ள தவறினாலும், கொள்ளையடித்து குடும்பத்தை ஆசியாவில் பெரும்பணக்காரகளை நம்பினாலும், சிறு வயது முதலே அவனின் துறு துறு வெட்கம் கலந்த பேச்சை கேட்டு பழகியவனல்லவா நான். அவன் தனிப்பட்ட மரியாதையை இன்றளவும் பெறுபவனல்லவா நான். அவன் செயல்களை ஊக்கப்படுத்துபவன் அல்லவா நான். இதோ இன்று, அண்ணா நான் ஒரு இசை அமைத்திருக்கிறேன். பாருங்கள் பகிருங்கள் என்றான். வேலை பளுதான். நோட்டிபிக்கேசன் அவனுடையதால் உடனே பார்த்து கேட்டுவிட்டு வாழ்த்துக்கள் தம்பி என்றேன்.

இதோ அவன் இசையமைத்த இந்த சிறிய வடிவ இசையை உங்களுக்கும் பகிருகிறேன். அவன் இசையில் பெரிய மேதைகளாக வரவேண்டும் என மனதார எண்ணுபவன். நான் பிறந்த புண்ணியபூமியாம் கொடுப்பைகுழி என்னும் உள்ளூரில் பெயர் பெற்ற கண் விழிக்காத கிராமத்தில் பிறந்து இசையில் சிகரமேறிக்கொண்டிருக்கிறான்.

அவன் பெரிய இசைஞானியாக உருவெடுக்க வேண்டும் தம்பி என கூறியதுண்டு. அவன் எண்ணப்படி உயரட்டும் வாழ்த்துக்கள் தம்பி Jim Stephen...

உன் இசை உலகை ஆளட்டும். இளைஞர்களை, முதியவர்களை, பச்சிளம் பாலகர்களை மயங்க செய்யட்டும்.

பார் போற்ற இசை முரசு கொட்டு தம்பி. வாழ்த்துக்கள்.

அன்போடு அண்ணன்,
மைக்கேல் செல்வ குமார்.

Tuesday, February 21, 2017

குமரி தொண்டரணி சுமேஷ் திருமண நிகழ்வில் வைகோ!

மதிமுக தொண்டரணி குமரி மாவட்ட அமைப்பாளர் சகோதரர் சுமேஷ் அவர்களின் இன்றைய 21-02-2017 திருமண வரவேற்ப்பு நிகழ்விற்கு மாலை 5.30 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகிறார்கள்.

வைகோ அவர்களை வரவேற்கும் விதமாகவும், மணமக்களை வாழ்த்தும் விதமாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

உறவுகள் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தவும், மணமக்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இன்புற்று பல செல்வங்கள் கண்டு ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

தாய் மொழி நாள்! என் தாய் மொழி தமிழ் வாழ்க!

ஒரு இனத்தை எந்த அடக்குமுறையுமில்லாமல் அழித்தொளிக்க முதலில் அவன் தாய் மொழியை அழித்தால் போதும்.

அப்படிதான் ஈழத்தில் சிங்களவன் அழிக்க நினைத்து யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்து தமிழ் மொழியை அழிக்க பார்த்தான்.

பின்னர் 2009 ஈழப்போரில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்தியத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரசுடன் 10க்கு மேற்ப்பட்ட அமைச்சர்களுடன் பதவி வகித்து ஆயுதங்களை இலங்கை சிங்களவர்களுக்கு கொடுத்தும், 1.5 மணி நேரம் சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு கருணாநிதி ஈழத்தில் போர் நின்றுவிட்டது என பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழக நிலமையை கட்டுப்படுத்த நினைத்து வீட்டிற்கு சென்றார்.

ஆனால் போர் நிற்காமல் தொடர்ந்ததால் 175000 அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்ய காரணமாக இருந்தார் கருணாநிதி. ஈழத்திலும் கருணா என்பவன்தான் காட்டிக்கொடுத்தான்.

அப்படிபட்ட தமிழின அழிப்பு துரோகிகள் இன்று தமிழினம் பேசுகிறார்கள்.

தமிழர்களே! வருங்கால இளைய சந்ததியினரே! மாணவர்க்ளே! உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது வரலாற்றை முறையாக முழுமையாக படித்து தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.

இன்று தாய்மொழி தினமாம். அன்று தமிழினம் ஈழத்தில் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று புல்க்கொடி ஐக்கிய நாடு சபை முற்றத்தில் பட்டொளி வீசி பறந்திருக்குமே!

கெடுத்துவிட்டார்களே பாவிகள், தன் குடும்ப நலத்திற்காக...

ஆகவே தமிழர்களே நம் மொழியை அடையாளங்களை காக்க, இந்த நாளை கொண்டாடுவோம். இன்றைய ஒருநாளாவது நம் தாய் மொழியாம் தமிழில் பேசுவோம்.


தமிழ் மீது தீரா காதல் கொண்டு....
மைக்கேல் செல்வ குமார்

Tuesday, January 31, 2017

கருஞ்சட்டை காதலன், களப்போராளி ஆட்டோ ராஜ் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வைகோவின் வானம்பாடி, ராஜபக்சேவை விரட்டி நேராக கறுப்பு கொடி காட்டிய மாவீரன், கழகத்தை காவல் காக்கும் காவலன், தெய்வத்திற்கு நிகராக தலைவனை மதிக்கும் தொண்டன். அன்பு காட்டும் ஆதிக்க வெறியர். அனைவரையும் தனது சிரிப்பால் கவரும் ஆளுமை. கருஞ்சட்டை காதலர், என்னிலும் அளவற்ற பாசம் கொண்டு சகோதரா என அழைக்கும், அண்ணன் பிறந்த பொன்னாளில், ஆயிரம் ஆண்டு காலம் நலமோடு வாழ்ந்து தமிழகத்திற்காக போராடும் புரட்சி புயலின் ஓசையில் வலம் வர வேண்டி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

படம்: தம்பி ஜெயத்திற்கு நூல் வெளியீட்டு விழாவில் (4-1-17) எடுக்கப்பட்டது.

Friday, January 27, 2017

அவசர மருத்துவத்திற்கு உதவும் உலங்கு வானூர்தி தளம்!

இன்று 27-01-2017 காலை உணவிற்கு பின் என்னுடன் வேலை செய்யும் சகோதரர் Ismail Hussain அவர்கள் சற்று உடல் நலன் சரியில்லாத காரணத்தால் அவருடன் நானும் ஓமன் நாட்டின் நிஸ்வா நகரின் பொது அரசு மருத்துவமனை சென்றேன். அவருக்கு சிகிச்சையளித்துவிட்டு இடைவெளியில் மருத்துவருக்காக காத்திருந்தபோது ஏற்கனவே பார்த்த உலங்கு வானூர்தி நிறுத்தும் தளம் (Heli Pad) கண்ணில் பட்டது. உடனே சென்று ஒரு புகைப்படம் எடுத்தேன்.

அந்த மருத்துவமனையில் உலங்கு வானூர்தி நிறுத்தும் தளம் (Heli Pad) எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறதென்றால் அவசர தேவை மருத்துவத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம் தமிழ்நாட்டில் இப்படி அவசர மருத்துவ வசதிகள் கொடுக்க விரைவு பயணத்திற்காக வசதிகள் செய்யப்பdட மருத்துவமனைகள் இருக்கிறதா?

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.

Friday, January 20, 2017

ஓமன் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டத்தில் அடியேன்!

கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழின உணர்வோடு, தமிழர் பண்பாட்டை, தமிழர் கலாச்சாரத்தை, தமிழர் அடையாளத்தை காக்கும் விதமாக இன்று 20-01-2017 காலை 10 மணி அளவில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் ஒன்று கூடி எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது.

அரபு தேசம் என்பதால் இது போன்ற எழுச்சி போராட்டங்களுக்கு அனுமதி இல்லாததாலும், உள் அரங்கத்திலே உணர்வுமிக்க இளைஞர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

500 வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட அரங்கத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக 3000 பேருக்கு அதிகமாக தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கம் பெரிதாக இருந்ததாலும், ஓரளவு சமாளித்தாலும், கூட்டம் கட்டுக்கடங்காத காரணத்தால், தமிழின உணர்வாளர்கள் அரங்கத்தின் வெளியிலும் நின்றிருந்தனர்.

இதில் ஜல்லிகட்டு ஆதரவாக எழுச்சி முழக்கங்களையும், பீட்டாவுக்கு தடை செய்ய எதிர்ப்பு வீர முழக்கங்களையும் பெண்களும், இளைஞர்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்களும் முழங்கினார்கள்.

ஓமன் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 200 கிலோ மீட்டர், 300 கிலோ மீட்டர், 400 கிலோ மீட்டர், 500 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் தமிழர்கள் வந்து தமிழர் கலாச்சாரத்தை காக்க ஆதரவு முழக்கங்களை பதிவு செய்து இந்தியாவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வலியுறுத்தவும், பீட்டாவை தடை செய்யவும் திரண்டிருந்தது, தமிழர் ஒற்றுமையை அரபு தேசத்திலே நிலைநாட்டப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே!

அடியேனும் தமிழின உணர்வோடு கலந்துகொண்டு வீரமுழக்கங்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுப்பியதும், பீட்டாவை தடை செய்ய கோரியதும் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியதென்பதை என் தமிழின உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கும் வரையும், வாடிவாசல் திறந்து காளைகள் ஓடி வந்து ஜல்லிகட்டு நடந்து காளைகளை வீரர்கள் தழுவி வீரத்தை வெளிப்படுத்தும் வரையிலும், மேலும் ஓவ்வொரு வருடமும் தமிழர் பாரம்பரியத்தை எந்த வித தங்கு தடையின்றி எந்த வித போராட்டமின்றி நடத்த நிரந்தர அனுமதி உத்தரவை தமிழக இந்திய அரசு தரும் வரை தாய் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும் ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்