Friday, August 19, 2016

பன்னாட்டு ஒளிப்பட தினமாம்!


இன்று 19-08-2016 பன்னாட்டு ஒளிப்பட தினமாம்...
.
இந்த ஒளிப்படத்தை விட நான் வேறென்ன ஒளிப்படத்தை பதிவிட முடியும். என் இனம் இன்னும் முள் வேலிக்குள் அல்லவா அடைந்து கிடக்கிறது. நஞ்சை அல்லவா அருந்த செய்கிறான் சிங்களவன். தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால் தமிழனுக்கு இந்த அவலம் நடந்திருக்குமா...
.
துரோகிகளும் எட்டப்பர்களும் இருக்கும் நாட்டில் தமிழீழ குடியரசு மலரும் நாள் தான் எமக்கான ஒளிப்படம் விடுதலையின் ஒளிப்படமாக இருக்கும்.

.
மறுமலர்ச்சி மைக்கேல்

அண்ணன் அய்யலுசாமி அவர்களின் அன்பு மழையில் இன்று!

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அண்ணன் அய்யலுசாமி அவர்கள் என்னை வாட்சப்பில் தொடர்பு கொண்டு மைக்கேல் நான் இப்போது நிஸ்வாவில்தான் உள்ளேன் என்றார். அதற்கு முன் மஸ்கட்டில் வேலை பார்த்தார் அப்போதே சொன்னேன் அண்ணே உங்களை வெள்ளி கிழமை விடுமுறையாதலால் சந்திக்கிறேன் என்றேன். ஆனால் அந்த வெள்ளி கிழமை சந்திக்க இயலவில்லை வேறு வேலை இருந்ததால். 

அடுத்த வாரம் அண்ணா சந்திக்க வருகிறேன் என்ற போது அவர் ஷாப்பிங்க் செல்கிறேன் என்றார். சரி அண்ணா அங்கே சந்திக்கிறேன் என்றேன். அப்ப்போது என் நண்பன் சதீசுடன் அவனது காரில் ஒரு நண்பரை மருத்துவமனை அழைத்து சென்று விட்டு சந்திக்கலாம் என்ற நினைத்த வேளையில் அன்றும் வாய்ப்பை இழந்தேன். 

ஆதலால் இந்த வாரமாவது சந்தித்து விடவேண்டுமென்று நினைத்து இன்று 19-08-2016 காலையிலே தகவல் தெரிவித்துவிட்டு சென்றேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து 25-30 கிலோ மீட்டர் தூர பயணம் செய்து சென்றேன். அந்த இடம் பர்க் இடைத்தை தாண்டிய இடம். அதில் SAUD BHAWAN KIA MOTORS ல் டாக்சியை நிறுத்தி இறங்கி பார்க்கும்போதே எனக்காக காத்திருந்த அண்ணன் அய்யலுசாமி அவர்கள் கை அசைத்து அவர் நிற்பதை உறுதி செய்தார்கள். 

பின்னர் என்னை அழைத்து அவருடைய அலுவலகம் அழைத்து சென்று உடனே தமிழர் வழக்கப்படி நீர் அருந்துங்கள் என்று புதிய பாட்டிலை திறந்து கொடுக்க நானும் குடித்துவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது 1 மணி நேரத்திற்க்கு மேலாகிவிட்டது. அந்த இடைவெளியிலும் எனக்காக இனிப்பு உணவுகளும், இனிப்பு நீர் ஆகாரமும் எனக்காக வாங்கி வைத்ததை கொடுக்க அண்ணன் அய்யலுசாமியும் நானும் பருகினோம்.

கழகம் சார்ந்து பேச தொடங்கி, தேர்தல் தொடக்கம், முடிவு, ஓமன் இணையதள நண்பர்கள், குடும்பம், வேலை என எல்லாவற்றையும் அசைபோட்டோம். அண்ணனின் அன்பு கலந்த வார்த்தைகள் ஓமனில் இன்று ஒரு இன்பத்தை தந்தது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் அரபி வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள். அவ்வப்போதுதான் தமிழ் எனவே அதுவும் ஒரு ஆனந்தம்.

பின்னர் கடைசியில் அண்ணனின் அலைபேசியிலேயே அண்ணனுடன் ஒரு செல்பி எடுத்துவிட்டு விடைபெற்றேன். அண்ணன் அய்யலுசாமி அவர்கள் ஒரு நண்பரை அனுப்பி எனக்கு டாக்சி நிறுத்தத்தை காட்டிவிட செய்துவிட்டு டாக்சியில் செல்லும் வரை காத்திருந்து வழியனுப்பினார்கள். அன்பு பாராட்டி என்னை உணர்வுகளால் நிரப்பிய அண்ணன் அய்யலுசாமி அவர்களுக்கு என் நன்றி...

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, August 9, 2016

உதித்த நாள் நல் வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா!

அண்ணன் புகழ் பாட,

அனுதினமும் ஆழ்ந்து உணர்ந்து,

ஆன்றோர் சொல் கேட்டு,

தம்பியவன் தனிப் பாட்டில்,

தமையனை தாங்கி பிடித்து,

உள்ளமென்னும் ஓரக் கண்ணால்,

உள்ளூர மனம் பகுத்தறிந்து,

வெண் பல் புன்னகையுடன்,

வாழ்வாங்கு வாழ்வீர் நீர்.

தாயகத்தை பெயரில் சேர்த்து,

புலியின் கரம் பற்றி,

வார்ப்பிப்புடன் வெற்றி காண,

தம்பியின் புகழ் வாழ்த்தை,

மனம் திறந்து ஏற்றுக்கொள்ளும்,

உதித்த திருநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, August 7, 2016

மனம் காணும் நட்புகளுக்கு மனதார நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

உலகில் இறைவனுக்கே கிடைக்காத வரம் உண்டென்றால் அது நண்பர்கள் மட்டுமே. ஆனால் மனிதர்களாகிய நமக்கு நட்புகள் கிடைத்திருக்கிறது என்றால் அது புனிதமானதாகவே கருதப்படவேண்டியது.

உற்றார் உறவினர்கள் கூட எதிர்பார்ப்பார்கள். ஆனால் எதிர்பார்க்காத உணர்வென்றால் நண்பர்கள் மட்டுமே. நண்பர்கள் சிறு வயது முதல் தொடங்கி இப்போதை நம் வயது வரை நண்பர்கள் வட்டம் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. 

ஏதோ ஒரு உள்ளூர உணர்வுதான் நண்பர்களாக இணைக்கிறது. நட்பு என்பது செல்லுமிடங்களிலெல்லாம் உணர்வை ஊட்டி வளர்க்கும் ஊடகமாகவே அமைகிறது. இதில் ஒரே தட்டில் உண்டும், ஒரே போர்வையை இழுத்து பிடித்து  உறங்கியும், திருவிழா காலங்களில் இளநீர் பறித்து குடித்துவிட்டு மீந்ததை வேறு விடயங்களுக்காக பயன்படுத்தியதும், நுங்கு பறித்து வெட்ட வெட்ட குடித்துவிட்டு, மீந்ததை கண்ணீரில் விட்டு கண்ணை குளிர வைத்ததும், கிணத்தடி அரட்டைகளும், ஒரு சைக்கிளில் 4 பேர் பயணங்களும், ஒரே ஐஸ்கிரீமை பலபேர் சாப்பிட்ட நாட்களும்தான் மறக்க முடியாதவை. ஆனால் இன்னும் பல சொல்ல வேண்டுமென்றால் நட்புகளின், நண்பர்களின் உணர்வு கலந்த பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கும் 07-08-2016 காலையில் நான் சிற்றுண்டி சாப்பிட்டு வரும் வழியில் நண்பர்கள் கொள்ளிக்கட்டை ஊதுவதற்காக வரும் நேரத்தில் எதிர்ப்பட்டார்கள். அவர்கள் கொள்ளிக்கட்டை ஊதினால், நான் இருந்தால் சற்று தள்ளிதான் நிற்ப்பார்கள். பேசிக்கொண்டே அவர்கள் ஊதிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது நான் நின்ற தோரணையை பார்த்து ஒரு நண்பர் அதை படம் பிடி அழகாக இருக்கிறது இந்த போஸ் என்று அடுத்த நண்பனின் ஆப்பிள் அலைபேசியில் படம் பிடித்தார்கள். பார்த்தீர்களா நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தி நண்பர்களை மகிழ்விக்கும் ஒரு அடையாளம்.

அனைவரும் நட்போடு வாழ்வோம். ஆயுளை பெருக்குவோம்.

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.


நட்பில்,
மறுமலர்ச்சி,
மைக்கேல் செல்வ குமார்

Tuesday, July 19, 2016

விவாத மேடை முகம் பாரா நட்புகளின் முக்கிய சந்திப்பு!

முகம் பாரா நட்புகள் உருவாகி அரசியல் பற்றிய விவாதங்கள், பொதுவான விவாதங்கள், நக்கல் நைய்யாண்டிகள், சுவாரஸ்யமான உண்மை சம்பவங்கள் என எல்லாவற்றையும் விவாதிக்கும் தளமாக விவாதித்து வருகிறோம். கடைசியாக நடந்த சுவாதி கொலை வழக்கும் அதில் அடக்கம்.

கடந்த சட்டசபை தேர்தலில் தினமும் விடிய விடிய விவாதங்களும் நடைபெற்றது. இதில் குழுவாக இருக்கும் அனைவருமே வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள்தான். ஆனாலும் நட்புகளாக உணர்வுபூர்வமாக இருப்பது எங்கள் அனைவருக்குமான ஒன்றிணைந்த பாசமாகும்.

இந்த குழுவில் நக்கல் செய்யும்போது அண்ணன் பாண்டி அவர்களை ஓட்ட வேண்டுமென்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். ஏனென்றால் அவர் அவ்வளவு அன்பானவர். சிரித்துக்கொண்டே நக்கலடிப்பார். நாங்கள் அரசியல் பேசும்போது எங்கள் எதிரணியாயினும் அவர் அசராமல் பதிலளிப்பார். அவ்வளவு பொறுமை.

இந்த குழுவில் இளைஞர்கள் முதல் வழிகாட்டும் பெரியோர்கள் வரை இருக்கிறோம். பெரியவர் என்றால் அது திரவியம் சார்தான். அவர் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார். முகம்பாராமல் உருவான குழுவிற்கு அதிகமான நண்பர்கள் எண்ணிக்கைக்காக சேர்ப்பதில்லை. உணர்வுபூர்வமான உருத்துள்ள நண்பர்களையே சேர்க்கிறோம்.

கடந்த தேர்தலில் விடிய விடிய விவாதம் செய்தும், பகல் விடியும் போதும் விவாதம் செய்கிற ஒலி, காதில் ஒலித்து எழுந்த நாட்களும் உண்டு. அப்படி 24/7 என்கிற தொனியில் போய்க்கொண்டிருக்கும் விவாத மேடை களம். இணையத்தில் விவாதம் செய்வதோடு மட்டுமல்லாமல், வாய்ப்புள்ள நண்பர்கள் நேரில் சென்று, சேர்ந்து தேனீர் பருகி அதில் ஒரு மகிச்ச்சியை தேடி, அந்த நிகழ்வை குழுவில் பகிரும்போது மற்ற நண்பர்களும் சேர்ந்து இருந்தது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.

01-01-2016 அன்று அண்ணன் பாலசுப்ரமணி அவர்களால் உருவாக்கப்பட்டு உணர்வுபூர்வமாக தோழமையுடன் செயல்பட்டு வருகிற இந்த குழுதான் வாட்சப்பில் "விவாத மேடை" என்று பெயர் பெற்றது. இதில் பாண்டி அண்ணனும் அனைவரையும் அரவணைக்கும் பிம்பமாகவே செயல்படுகிறார். இதில் வக்கீல்கள், பொறியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசு மேலாளர்கள், மற்றும் ஏனையவர்கள் அடங்கும்.

விவாத மேடையின் நண்பர்கள் குமரியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேலையின் நிமித்தமாக அரபு தேசம், சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் இந்திய உபகண்டத்தின் பகுதிகள் என சிதறி வாழ்கிறோம். ஆனால் விவாத மேடையில் சந்திக்கிறோம்.

இதில் தம்பி சிவா, வக்கீல் அய்யனார், முத்துசாமி அண்ணன், பால முரளி அண்ணன், குமார் அண்ணன், ராஜ்குமார் அண்ணன், நடராஜன் அண்ணன், சந்திரன் அண்ணன், வக்கீல் செந்தில் குமார் மற்றும் சில அண்ணன்மார்கள் வந்து விவாதத்தை சூடேற்றுவார்கள். திரவியம் சார், மணி அண்ணன் வந்து அதை மெருகேற்றுவார்கள். பாண்டி அண்ணன் வந்து விவாதத்தை காமடி களமாக்குவார். அவ்வப்போது நானும் விவாததத்தில் கலந்துகொண்டு காரசாமமாக கேள்விகளை (அரசியல் மட்டும்) பாண்டி அண்ணாவிடம் கேட்பேன்.

இந்த குழுவிலிருந்து ஒரு மாதமாக திட்டம் தீட்டி நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறு ஒருங்கிணைப்பு நிகழ்வை நடத்தலாம் என்று நினைத்து நேற்று 17-07-2016 ஞாயிறு நிறைவேறியது.

நண்பர்களான அண்ணன் மணி, அண்ணன் குமார், அண்ணன் பால முரளி, அண்ணன் பாண்டி, அண்ணன் நடராஜன், அண்ணன் முத்துசாமி, சகோ அய்யனார், சகோ சிவா ஆகியோர் குமாி மாவட்டம் சிதறால் சமண படுகைக்கு 16-07-2016 அன்று சென்று அரட்டை அடித்து சுற்றி பார்த்து விட்டு, 17-07-2016 அன்று உணவு சமைத்து சாப்பிட அனைத்து பொருட்களையும் தயார் படுத்தி எடுத்து சென்று சுற்றி பார்த்து விட்டு இராமனாதிச்சன் புதூர் பண்ணை தோட்டத்தில் நண்பர்கள் கைப்பட சமையல் செய்து சாப்பிட்டு விட்டு நீச்சல் குளத்தில் நீராடி வீடு திரும்பியிருக்கின்றனர் (நான் அன்று உங்களுடன் இல்லையே என்ற வருத்தம் எனக்கு) . பின்னர் அனைவரும் அவரவர் வேலைகளுக்காக திரும்பியிருக்கிறார்கள். இந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும், அடியேனின் நெஞ்சார்ந்த பாராட்டுகளை நட்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போல எப்போதும் தொடர விழைகிறேன்.

நான் இதை எதற்கு சொல்ல வருகிறேனென்றால், ஒரு வாட்சப் குழு என்பது வெறுமனே நேரத்தை செலவிட மட்டுமல்லாது உணர்வுபூர்வமான நட்புகளை சேகரிக்கும் கூடமாகவும், நல்ல ஆரோக்கியமான முன்னோட்டமான செய்திகளை பகிர்ந்து வாழ்வியலுக்கு உதவிகரமாகவும், குடும்ப உணர்வை ஏற்படுத்தவும் எங்கள் விவாத மேடை போன்று வேறு குழுக்களும் பயன்படுத்தலாம் என்ற நல்லெண்ணம் தான். இந்த குழுவில் நல்லுள்ளம் கொண்டவர்கள் கொடையுள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதே பெரும் சிறப்பு. கொடையுள்ளம் வாழ்வியலுக்காக மட்டுமே. வேறு குழுக்கள் இருக்கலாம். அப்படியிருந்தால் தெரியப்படுத்துவதன் மூலம் இதை மற்றவர்களும் செயல்படுத்தி மகிழ்ச்சியான வாழ்வு வாழ வழிவகை செய்யும்.

எனவே அனைவரும் திட்டமிட்டு நல்ல நட்புகளை பெற்று மகிழ்ச்சியடையுங்கள்.

நட்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, July 16, 2016

குமரி தொண்டர்படை தளபதியுடன் இனிமையான சந்திப்பு!

இன்று 16-07-2016 காலை தூக்கம் விழிக்கும் நேரத்தில் அலபேசி மணி அடித்தது. நான் சுதன் பேசுகிறேன். மஸ்கட்டிலிருந்து மர்மூல் செல்ல நிஸ்வா (பர்க்) வழியாக வருகிறேன். பார்க்க இயலுமா என்றார். 1 மணி 30 நிமிடத்தில் அங்கே வந்துவிடுவேன் என்றார். நான் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். ஆனால் அவரது பேருந்து 10 நிமிடம் முன்னதாகவே வந்துவிட்டது. 

அவருடைய 20 நிமிட காலை உணவு வேளையில் சந்திக்க திட்டமிட்டு டாக்சிக்காக காத்திருந்தால் அனைத்து டாக்சியும் நிரம்பியே சென்றது. காத்திருக்க நேரம் சென்றுகொண்டிருக்கிறது. அவருடைய அலைபேசி நான் வந்துவிட்டேன் எங்கே இருக்கிறீர்கள் என்றார். நான் சிறுது நேரத்தில் வந்துவிடுவேன் என்றேன். ஆனால் டாக்சி கிடத்தபாடில்லை. சுதனும் வந்துவிட்டார். 

டாக்சி கிடைக்காதோ பார்க்க இயலாதோ என்று எண்ணும்போது ஒரு வழியாக தனியார் மகிழுந்து வந்து அருகில் நின்றது. பாருங்கள். கழகம் குடும்பமாக இருப்பதால், எனது சந்திப்பை நிராகரித்து விடகூடாதென்று இயற்கையும் கருணை காட்டியதால் தனியார் மகிழுந்து கிடைத்தது எவ்வளவு ஒரு உணர்வுபூர்வமானது. டாக்சிக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு இறங்கி ஓடி சென்றேன். அலைபேசியில் அழைத்தேன். உங்களை பார்த்துவிட்டேன் என்றார். அப்பொது நானும் பார்த்துவிட்டேன். இனிமையான உரையாடல்கள். அவருடன் ஊர் நண்பர்களும் இருந்தனர்.

அரபு தேசத்தில் தமிழ் பேசுகிறவர்களை கண்டாலே நமக்குள் உள்ளூர சந்தோச உணர்வு ஏற்ப்படும். அது இன்று காலையே கிடைத்தது. அவரது பேருந்து புறப்பட தயாராக நானும் விடைபெற்றேன்.

நன்றி வைகோவின் மெய்பாதுகாவலன், குமரி மாவட்ட தொண்டர்படை தளபதி ஆரோக்கிய சுதன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, July 6, 2016

அனைத்து உறவுகளுக்கும் ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்!

அன்பை போதிக்கின்ற இஸ்லாம் மார்க்கம் 30 நாட்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை நடத்தி அனைவரிடத்திலும் அன்பாக பழகுங்கள், ஒருவரிடத்தில் உதவுங்கள் என்று போதிக்கிறது. 

உலகை நல்வழிபடுத்தும் கொள்கைகளை கொண்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தினர் இயற்கையிலேயே கொடையுள்ளம் கொண்டவர்களாக, அன்பு பாராட்டுகிறவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் இந்த ரம்ஜான் ஈகை பெருநாளை உவகையோடு கொண்டாடி மகிழ எனது பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர்கள் நற்காரியங்கள் ஈடேறவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்