Sunday, November 13, 2016

தொண்டன் எங்கிருந்தாலும் அவனை, காக்கும் கவசமாக, தலைவர் வைகோவை தவிர யாருமுண்டோ?

ஓமன் நேரப்படி இன்று 13-11-2016 மதியம் சரியாக  12.09 தலைவரிடம் அழைப்பு வந்தது. நான் தம்பி பிரசாந்த் காலை கட் செய்தேன். நான் உடனே திரும்ப அழைத்து கால் போவதற்குள் திரும்பவும் அழைத்தார். அட்டன் செய்தேன். சொல்லிவிட்டு பின்னர் நான் பேசினேன். அண்ணே நலமா என்றவர் தலைவரிடம் கொடுக்கிறேன் என்றார். 

தலைவர் பேசினார்,

தலைவர்:  தம்பி மைக்கேல் நல்லா இருக்கீங்களா

நான்: ஐயா நான் நல்லா இருக்கேன். நீங்கள் நல்லா இருக்கீங்களா?

தலைவர்: நான் நல்லா இருக்கேன். உங்கள் பதிவு பார்த்தேன் (எனது வீட்டில் ஜன்னல் கம்பி வெட்டி எடுத்து கொள்ளை நடந்திருந்தது 11 ஆம் தேதி நவம்பர் 2016). நான் SP தர்மராஜிடம் பேசியிருக்கிறேன். நல்ல மனிதர்.

நான்: சரி ஐயா

தலைவர்: எனக்கு ரொம்ப வேண்டிய தம்பி, வேற யாரும்ணா அதிகமா சொல்லியிருப்பாங்க, ஆனாலதான் அந்த தம்பி 15 பவுனும், ₹10000 என்று உண்மையை சொல்லியிருக்கிறார். எனக்கு ரொம்ப வேண்டிய தம்பிணு சொல்லியிருக்கிறேன். தம்பியின் மனைவி மற்றும் மகன்தான் இருக்கின்றனர்.

நான்: சரி ஐயா

தலைவர்: கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசினேன்.  20 நாட்களில் கண்டுபிடித்துவிடுவதாக SP கூறியிருக்கிறார். என்றார்.

நான்: சரி ஐயா ரொம்ப நன்றி ஐயா

தலைவர்: இது எனது கடமை, திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க இல்லியா

நான்: ஆமா ஐயா திட்டமிட்டுதான் செய்துருக்காங்க. 2 வாரம் முன் என் நாயையும் விசம் வைத்து கொன்றிருக்கிறார்கள். 

தலைவர்: ஐயோ. ரொம்ப வருத்தமாக இருக்கிறது (அவர் தொனியில் அந்த வருத்தம் தெரிந்தது)

நான்: ஆம் ஐயா, நன்றாக நின்ற நாய் அடுத்த நாள் காலையில் மயங்கிய நிலையில் இருந்தது. சயங்காலம் இறந்துவிட்டது. விசம் என்று அறிந்தும் நாங்கள் வெளியில் சென்றதால் சாப்பிட்டிருக்கலாம் என்று அதை பொருட்படுத்தவில்லை என்றேன்.

தலைவர்: அப்படியா செத்து போச்சா...

நான்: ஆம் ஐயா நல்ல நாய், ஒரு ஆளையும் விடாது.

தலைவர்: சரி அப்போணா திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க. கிடைச்சிடும். கவலை படவேண்டாம்.

நான்; சரி ஐயா, நன்றி ஐயா. உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.

தலைவர்: சரி.. ம்ம்

நான்: சரி ஐயா சரி.

பேச்சு முடிந்தது. அலைபேசி தம்பி பிரசாந்திடம் கொடுக்கும் இடைவெளியில், தலைவர் சொல்வது கேட்கிறது. நாயும் செத்து போச்சாம், வருத்தமாயிருக்கு என்கிறார்.

நான் அலைபேசி காலை துண்டித்தேன்.

தலைவரிடம் 2.25 நிமிடம் பேசினேன். தலைவர் மிகவும் வருந்தினார். தொண்டன் எங்கே இருந்தாலும் அவனை காக்கும் கவசமாகவே தலைவர் வைகோ இருக்கிறார். அவர் குரல் கவசமாக ஓங்கி ஒலிக்கும் என்பது இதுவும் லட்சகணக்கான மனிதநேயமிக்க சான்றுகளின் ஒன்றாகும்.

இந்த கால் வரும் போதே, எனது முக புன்னகை கண்டு, அலுவலகத்தின் பக்கத்து இருக்கையில் இருக்கும் வட நாட்டு நண்பன் கேட்டான் யாரென்று. வைகோ என்றேன். வைகோவா என்று வாய் பிளந்தான். அவனுக்கு தலைவர் வைகோ பற்றி நன்றாகவே தெரியும்.

பேசி முடிந்து வந்ததும் சொன்னேன். தலைவர் வைகோவிடம் பேசினேன். நண்பன் சொன்னான், வைகோ பேசியிருக்கிறாரல்லவா கண்டிப்பாக உனது பொருட்கள் கிடைத்துவிடும் என்றான். அவனுக்கும் தலைவரின் மேல் அவ்வளவு நம்பிக்கை நம் கண்மணிகளை போல. நன்றி சொன்னேன். தமிழர்கள்தான் வைகோவை புரிந்தும், புரியாதது போல தேர்தல் காலங்களில் நடிப்பது வேதனை.

மைக்கேல் செல்வ குமார்

Saturday, November 12, 2016

என் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் இன்றைய தினதந்தி, தினகரனில்!

என் வீட்டில் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டதுடன் தகவல் தெரிவித்ததும் உடனடியாக வந்த வந்த காவல்துறை பத்திரிகையாளர்களுக்கு நன்றிகள். என் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் இன்றைய 12-11-2016 தின தந்தி, மற்றும் தினகரனில் நாகர்கோயில் பதிப்பில் வெளி வந்துள்ளது. 

இந்த களவு சம்பவத்தை அனைத்து மக்களும் ஒரு பாடமாக கொண்டு அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி காமிரா பொருத்துங்கள். மேலும் இயலாதவர்கள் ஏரியாவிற்கு ஒரு காவல் காக்கும் பொருட்டு ஒரு ஆள் அல்லது இரண்டு ஆட்கள் கூட நியமித்து ரோந்து வர செய்யுங்கள். 

மேலும் வீட்டிலுள்ளவர்களும் தைரியமாகவும், எப்போதும் விழிப்பாகவும் இருக்க வேண்டுகிறேன். தமிழ்நாட்டில், கல்வியறிவு முதலிடம் உள்ள மாவட்டமனான கன்னியாகுமரியின் தலைநகர் நாகர்கோயிலிலே இந்த சம்பவம் அதிர்ச்சியானதாகும். 

எனவே காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடுகளை உடனே குற்றவாளிகளை கண்டுபிடித்து பெற்று உரிமையாளரான எங்களிடத்தில் ஒப்படைத்து தர்மம் காக்க பாடுபட வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

களவு சம்பவம் பற்றிய தினத்தந்தி, தினகரன் லிங்க் மற்றும் ScreenShot இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.


(12-11-2016 நாகர்கோயில் பதிப்பு, dknnagercoil பிரிவில் 15 ஆம் பக்கம்)

நேற்றைய பதிவின் முழு விபர லிங்க்: https://www.facebook.com/MarumalarchiMicheal/posts/756127801192300

Friday, November 11, 2016

15 பவுன் நகை, ₹10000 கொள்ளை-மைக்கேல் செல்வ குமார் வீட்டில் பேரிச்சம் பழம் தின்றுவிட்டு கொள்ளையடித்த நூதனம்!

கன்னியாகுமரி மாவட்ட தலைநகராம் நாகர்கோயில், பார்வதிபுரம் அருகே கணியாகுளம் வசந்த் நகரில் எனது இல்லம் அமைந்துள்ளது. வீட்டில் கடந்த சில நாட்கள், வெளியில் சென்று இன்று 11-11-2016 மாலை 4 மணி அளவில் இல்லம் திரும்புகையில் இரும்பு கிரில் கேட் திறந்து உள்ளே நுளையும் போது மேஜையானது, போடபட்ட திசையிலிருந்து வேறு திசையில் கிடந்திருக்கிறது. மின் விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை பார்த்து திடுக்கிட என் வீட்டினர், சந்தேகம் ஏற்ப்பட்டு ஓமனிலிருக்கும் எனக்கு அலைபேசியில் அழைத்தனர். அதே வேளையில் பயம் காரணமாக வீட்டினுள்ளே செல்லாமல் பக்கத்து வீட்டார்களையும் அழைத்து அவர்களுடன் வீட்டின் அறையினுள் செல்ல திருடர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே வந்திருப்பது ஊர்ஜிதம் ஆனது. 

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அதை கவனித்து, வீட்டு ஜன்னல் கதவை உடைத்து எடுத்துவிட்டு, அதன் உள்பக்கமிருக்கும் இரும்பு கிரிலை சதுர வடிவில், வெட்டி எடுத்து வீட்டினுள்ளே சென்றுள்ளனர் திருடர்கள், வீட்டிலிருந்த பேரிச்சம் பழங்களையும் தின்று விட்டு, சமயலறையிலும் அனைத்து பாத்திரம் மற்றும் டப்பாக்களை திறந்து பார்த்து காசு பணங்களை கிடைத்ததை எடுத்துள்ளனர்.

வீட்டின் அனைத்து அறைகளுக்கும் சென்று பணம் நகைகளை தேடி, அலமாரிகளை திறந்து அலமாரியின் டிராயர்களை கீழே எடுத்து கட்டிலில் வைத்து நிதானமாக தேடி 15 பவுன் நகை மற்றும் ₹10000 பணத்தையும் எடுத்துவிட்டு, என் மகனின் கடவு சீட்டு, என்னுடைய வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களையும் கட்டிலில் வீசிச் சென்றுள்ளனர். அலங்காரம் அமைப்புக்களில் இருந்த புகைப்படங்கள் போன்றவற்றையும் வீட்டினுள் வீசியெறிந்துள்ளனர்.

வித விதமாக சேகரித்து வைத்திருந்த இந்திய ₹1, ₹2, ₹5, ₹10 பழைய நோட்டுகளும், பல அந்நிய நாட்டு பண நோட்டுகளையும்  எடுத்து சென்றுள்ளனர்.

இந்த திருட்டு கடந்த நான்கு தினங்களுக்குள் (08, 09, 10-11-2016) நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் வீட்டில் போடப்பட்டிருந்த விளக்குகள் அப்போதுதான் அணைக்கப்பட்டுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்கள் வீட்டு விளக்கு அணைந்திருக்கிறது என்று அலைபேசியில் அழைத்து சொல்லியதும், பீஸ் போயிருக்கும், வரும் போது மாற்றிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என் வீட்டில். ஆனால் இன்று வீட்டிற்கு வந்த பின்புதான் வெளி விளக்கு சுவிட்ச் வீட்டினுள் அணைக்கப்பட்டிருந்திருக்கிறது கண்டுபிடிக்கபட்டது.

உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க, மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர், புலன் விசாரணை குழுவினர் உள்ளிட்ட காவல் துறையினர் வந்து கொள்ளை நடந்த இடம் மற்றும் எப்படி நடந்திருக்கும் என ஆய்வு செய்து புகைபடங்கள் எடுத்துசென்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் வீட்டு நாய் இறந்தது. அதை விசம் வைத்து கொலை செய்திருந்தார்கள். அந்த அதிர்ச்சி தீர்வதற்கு முன்னே இந்த திருட்டு நடந்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது திருடர்கள் திட்டம் தீட்டிதான் இந்த அபார கொள்ளையை நிறைவேற்றியிருப்பார்கள்.

ஜனநாயகத்தின் தூண்களாக நான் என்னாளும் மதிக்கின்ற பத்திரிகையாளர்களும் என்னுடைய மற்றும் என் நண்பர்களுடைய அழைப்பை ஏற்று உடனடியாக வந்து தகவல் சேகரித்திருக்கிறார்கள், மட்டுமல்லாது நாளை அனைத்து நாளேடுகளிலும் செய்தி வரும் என்று தகவலும் தந்திருக்கிறார்கள். அழைத்த உடன் வந்த காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளை 12-11-2016 காலை எழுத்துபூர்வமாக வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எங்கள் வீட்டு நபர்கள் கைரேகைகளையும் நாளை சேகரிப்பார்கள்.

திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை காவல்துறை கண்டுபிடித்து எங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும், சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமெனவும், சுற்று புறத்தில் இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டுகிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

நட்பின் மழலைக்கு பிறந்த நாள் வாழ்த்து!

நட்பின் மழலைக்கு பிறந்த நாள் வாழ்த்து!

உன் மழலை மொழி கேட்டு பதிலளிக்க ஆசைதான்.
உன் சிரிப்பில் கடலளவு சிரிக்க ஆசைதான்.
உன் நடை கண்டு வியப்புற ஆசைதான்.
உன் விரல் பிடித்து ஊர் சுற்றவும் ஆசைதான்.
மனதில் மாணிக்கமாக நீ இருக்கிறாய்.
வளர்ந்து சுற்றம் போற்ற நட்பை நிலை நாட்டு.
நட்பிற்கு புதிய இலக்கணம் உருவாக்கு,
பள்ளி தொடங்கி கல்லூரி காலங்களில்,
நட்பின் வசந்தத்தினை நீ உணர்வாய்.
உன் பார்வை சினேகிதர்கள் மேல் பரவட்டும்.
சிறு குறு பருவம் முதலே பாசம் கொள்.
பாசங்களை உன் பெற்றோரிடத்திலும் புகுத்து.
நான் பார்த்த நேரத்தில் போர்வைக்குள் நீ இருந்தாய்!
இன்றைய கபடம் அறியா உன் படம் பார்த்து,
எனையறியாமல் என் விரல்கள் எழுத்தாணியாகிறது.
ஊர் போற்றி, வையகம் உனை போற்ற படித்திடு,
அரிதாக கிடைப்பதுதான் முக்கியமானதாகிறது,
எளிதாக கிடைப்பதையும் எட்டி பிடித்துக்கொள்.
பட்டங்கள் பல பெற பல நூறு நூல்கள் உண்டு.
நட்பிற்கு சுரண்ட தெரியா நண்பர்கள் தான் உண்டு.
உன் பெற்றோர் சொல் கேட்டு உலகறிந்திடு,
வாலிப நாட்களில் கடினத்தை உணராமல்,
நான் இல்லாவிட்டால் வேறு யார் என்ற எண்ணம் கொள்.
இதயங்கள் நிலை மாறி இடம்பெயர துடிக்கலாம்,
கட்டுப்பாடு என்ற வளையத்தில் அதை அடைத்திடு!
பட்டங்கள் பல பெற்று ஈன்றவரை பெருமை படுத்து,
நானிலம் போற்ற காலங்களை செம்மை படுத்து.
உன்னில் தவம் செய்து உழைப்பில் முன்னேறு.
பார் போற்றும் பாரியாய் பறை சாற்று.
இன்றைய என் வார்த்தைகள் உனக்கு புரிவதில்லை,
உன் தந்தை உனக்கு இதை படித்து காட்டினாலும்,
அர்த்தங்கள் உனக்கு புரியும் வயதில்லை,
நண்பர்கள் வட்டமாய் உருவாகும் காலம் வரும்.
அந்நேரம் இந்த வாழ்த்துரை ஒருவேளை உன் கண்ணில் படலாம்,
உன் தந்தையிடம் இது யார் என்று கூட கேட்கலாம்.
என் வார்த்தைகள் ஒருவேளை உணர்ச்சியூட்டலாம்,
நல்லதை மட்டும் எடுத்துக்கொள், கெட்டதை வீசிடு.
உன் வாழ்விலும் அதையே கடைபிடிக்கலாம்.
புகழ் பல பெற்று வாழ்வாங்கு வாழ,
அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மைக்கேல் செல்வ குமார்

11-11-2016 / ஓமன்

Wednesday, November 9, 2016

மனம் விரும்பும் ராயல்டி!

என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இருசக்கர வாகனங்கள்தான் இவைகள். பல வகையான இரு சக்கர வாகனங்கள் ஓட்டியிருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான இந்த வாகனங்களை இதுவரை ஓட்டியது இல்லை. நண்பர்களுடைய இரு சக்கர வாகனங்களையாவது ஓட்டிவிட வேண்டுமென்று நினைத்து கூட பல வருடமாக இதுவரை நடக்கவில்லை.

ஆனால் இப்போது, கடந்த சில வருடங்களாகவே சொந்தமாகவே வாங்கி ஓட்டிவிட வேண்டுமென்று திட்டமிட்டாலும் நடக்கவில்லை. ஆனால் நம்மால் ஏன் வாங்க முடியாது என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. வாங்க இயலுமென்றாலும், அடுத்த தியாகத்தின் தேவையை உணர்ந்து ஏதோ நம்மை தடுக்கிறது...

இப்போது பல நண்பர்கள் இதை உபயோகப்படுத்துகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு சில வருடங்களில் மூன்று மாடல்களில் ஒரு மாடல் வாங்கி விடுவேன்...

மைக்கேல் செல்வ குமார்

Monday, November 7, 2016

கடை விரிக்க, பாய் விரிப்பு?


பால் குணத்தில், வான் புகழ் கண்ட வைகோவை,
வீண் பழி சுமத்தாவிடில் விண்ணதிர விமர்சிப்பானென்று!

நவரசம் பேசி, வைகோவின் வைர சொல் பெற்று,
வார்த்தைகளுக்கு வண்ணம் பூசி, வசைபாடி மகிழ்வதேன்?

சரிந்தழிந்த திமுக வின் செல்வாக்கை நீ நிமிர்த்த,
வைகோ வை பகடை காயாக்க முயலுகிறாயோ?

பாமரன் வீடு எரித்து, குளிர் காயும் குணாளனே! 
நேர்மையாளன் அரசியலை அழிப்பதற்கு ஏன் துடித்தாய்?

அன்று பனை மரக் கீழ் நின்று பால் குடித்த விகடனே!
இன்று! நீ கள் குடித்து கல் மனதை பெற்றதேனோ

சுருட்டு முடியின்கெட்ட வாசம், உனை எட்டப்பனாக்கியது!
சொட்டை தலை சூனியத்தில், நரம்பில்லா நடிகனானாய்!

ராஜ தந்திரி பார்வையியிலே, அவர் சுதியில் உன் தாளம்!
உண்டபின் இலை போல உனை வைப்பார் என்றறியாய்?

கோபாலபுரம் கோபுரமென்று, கோமானாய் உனை அரவணைக்க,
சூட்சமத்தின் சுவை அறியாமல், சயனைடை பெற்றாயே!

தேர்தலையே திசை திருப்ப, தளர்ந்த பாதிகள் துணையிருக்க
நீ பெற்ற 1500 கோடியை மடைமாற்றம் ஏன் செய்தாய்!

வைகோ மேல் வாரியிறைத்தாய், மக்களை நம்ப செய்தாய்!
மாற்று அரசியல் கூட்டணியை, ஏன் நீ மழுங்கடித்தாய்?

நீண்ட செவி கொண்ட, குருட்டு விகடனே,
முரசொலிக்கு மகுடியானதால், காயடித்த காளையாவாய்!

உன் எழுத்தின் அர்த்தங்கள் புரியாத புதிராகினும்!
உன் பால் கொண்ட பற்றினால் உன் தமிழ் பருகினோமே!

விசமென்று புரியாமல், விழித்திருந்து பகிர்ந்தோமே!
விடியலை நீ தேடி, அமாவாசையை அழைத்துக்கொண்டாய்!

தனித்துவம் பெற்றிருந்தாய், தாலாட்டி மகிழ்ந்தார்கள்!
தரந்தாழ்ந்து போய் விட்டாய், உனை தூக்கி எறிவார்கள்.

கொட்டி கொடுத்த தமிழ் சொற்கள், கொஞ்சி விளையாட,
கூட்டிக் கொடுத்த அறிஞர்களால், உன் கூடாரம் காலியாகும்!

காகிதத்தில் எண்கள் வரைந்து, உன் மனதை மலடாக்கினர்!
உன் வாசகங்கள் ஜாலமிட்டால், அணு குண்டின் சுவையறிவாய்!

அந்நேரம் உன் எண்ணம் வைகோவை நினைக்கும் முன்னே!
அவர் குரல் ஒலித்திருக்கும், உனை காக்க கண்டன குரலாக.

மறுமலர்ச்சி மைக்கேல்

#ShameOnYouVikatan

Wednesday, November 2, 2016

தமிழை கொண்ட அருண்-க்கு பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் பற்றாளன். தன்னை அழைக்கும்போதே தமிழ் தென்பட வேண்டுமென்பதற்காக தமிழருண் என்று வலம் வருபவன். தமிழ் மீதுள்ள காதிலின் வெளிப்பாடு அவன் எழுத்துகளில் வெளிப்படும்.

போராட்ட வாழ்வை சந்திப்பவன். தனியொருவனாக போராட்ட களத்தையும் சந்தித்தவன். நேர்மைதான் என் நாணயம் என்று பொதுவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைகோவின் வரிப்புலி. பெரம்பலூர் மாணவர் மன்றத்தைன் மாணவ போராட்டங்களில் தளபதியாய் செயல்படுபவன்.

படிப்பில் பல பட்டங்களை வாங்கி வாழ்விலும் உயர்ந்து வாழ்வாங்கு வாழ பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்