என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இருசக்கர வாகனங்கள்தான் இவைகள். பல வகையான இரு சக்கர வாகனங்கள் ஓட்டியிருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான இந்த வாகனங்களை இதுவரை ஓட்டியது இல்லை. நண்பர்களுடைய இரு சக்கர வாகனங்களையாவது ஓட்டிவிட வேண்டுமென்று நினைத்து கூட பல வருடமாக இதுவரை நடக்கவில்லை.
ஆனால் இப்போது, கடந்த சில வருடங்களாகவே சொந்தமாகவே வாங்கி ஓட்டிவிட வேண்டுமென்று திட்டமிட்டாலும்
நடக்கவில்லை. ஆனால் நம்மால் ஏன் வாங்க முடியாது என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் உயிர்ப்புடன்
இருக்கிறது. வாங்க இயலுமென்றாலும், அடுத்த தியாகத்தின்
தேவையை உணர்ந்து ஏதோ நம்மை தடுக்கிறது...
இப்போது பல நண்பர்கள் இதை உபயோகப்படுத்துகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு சில வருடங்களில் மூன்று மாடல்களில் ஒரு மாடல் வாங்கி விடுவேன்...
மைக்கேல் செல்வ குமார்
No comments:
Post a Comment