Sunday, November 13, 2016

தொண்டன் எங்கிருந்தாலும் அவனை, காக்கும் கவசமாக, தலைவர் வைகோவை தவிர யாருமுண்டோ?

ஓமன் நேரப்படி இன்று 13-11-2016 மதியம் சரியாக  12.09 தலைவரிடம் அழைப்பு வந்தது. நான் தம்பி பிரசாந்த் காலை கட் செய்தேன். நான் உடனே திரும்ப அழைத்து கால் போவதற்குள் திரும்பவும் அழைத்தார். அட்டன் செய்தேன். சொல்லிவிட்டு பின்னர் நான் பேசினேன். அண்ணே நலமா என்றவர் தலைவரிடம் கொடுக்கிறேன் என்றார். 

தலைவர் பேசினார்,

தலைவர்:  தம்பி மைக்கேல் நல்லா இருக்கீங்களா

நான்: ஐயா நான் நல்லா இருக்கேன். நீங்கள் நல்லா இருக்கீங்களா?

தலைவர்: நான் நல்லா இருக்கேன். உங்கள் பதிவு பார்த்தேன் (எனது வீட்டில் ஜன்னல் கம்பி வெட்டி எடுத்து கொள்ளை நடந்திருந்தது 11 ஆம் தேதி நவம்பர் 2016). நான் SP தர்மராஜிடம் பேசியிருக்கிறேன். நல்ல மனிதர்.

நான்: சரி ஐயா

தலைவர்: எனக்கு ரொம்ப வேண்டிய தம்பி, வேற யாரும்ணா அதிகமா சொல்லியிருப்பாங்க, ஆனாலதான் அந்த தம்பி 15 பவுனும், ₹10000 என்று உண்மையை சொல்லியிருக்கிறார். எனக்கு ரொம்ப வேண்டிய தம்பிணு சொல்லியிருக்கிறேன். தம்பியின் மனைவி மற்றும் மகன்தான் இருக்கின்றனர்.

நான்: சரி ஐயா

தலைவர்: கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசினேன்.  20 நாட்களில் கண்டுபிடித்துவிடுவதாக SP கூறியிருக்கிறார். என்றார்.

நான்: சரி ஐயா ரொம்ப நன்றி ஐயா

தலைவர்: இது எனது கடமை, திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க இல்லியா

நான்: ஆமா ஐயா திட்டமிட்டுதான் செய்துருக்காங்க. 2 வாரம் முன் என் நாயையும் விசம் வைத்து கொன்றிருக்கிறார்கள். 

தலைவர்: ஐயோ. ரொம்ப வருத்தமாக இருக்கிறது (அவர் தொனியில் அந்த வருத்தம் தெரிந்தது)

நான்: ஆம் ஐயா, நன்றாக நின்ற நாய் அடுத்த நாள் காலையில் மயங்கிய நிலையில் இருந்தது. சயங்காலம் இறந்துவிட்டது. விசம் என்று அறிந்தும் நாங்கள் வெளியில் சென்றதால் சாப்பிட்டிருக்கலாம் என்று அதை பொருட்படுத்தவில்லை என்றேன்.

தலைவர்: அப்படியா செத்து போச்சா...

நான்: ஆம் ஐயா நல்ல நாய், ஒரு ஆளையும் விடாது.

தலைவர்: சரி அப்போணா திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க. கிடைச்சிடும். கவலை படவேண்டாம்.

நான்; சரி ஐயா, நன்றி ஐயா. உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.

தலைவர்: சரி.. ம்ம்

நான்: சரி ஐயா சரி.

பேச்சு முடிந்தது. அலைபேசி தம்பி பிரசாந்திடம் கொடுக்கும் இடைவெளியில், தலைவர் சொல்வது கேட்கிறது. நாயும் செத்து போச்சாம், வருத்தமாயிருக்கு என்கிறார்.

நான் அலைபேசி காலை துண்டித்தேன்.

தலைவரிடம் 2.25 நிமிடம் பேசினேன். தலைவர் மிகவும் வருந்தினார். தொண்டன் எங்கே இருந்தாலும் அவனை காக்கும் கவசமாகவே தலைவர் வைகோ இருக்கிறார். அவர் குரல் கவசமாக ஓங்கி ஒலிக்கும் என்பது இதுவும் லட்சகணக்கான மனிதநேயமிக்க சான்றுகளின் ஒன்றாகும்.

இந்த கால் வரும் போதே, எனது முக புன்னகை கண்டு, அலுவலகத்தின் பக்கத்து இருக்கையில் இருக்கும் வட நாட்டு நண்பன் கேட்டான் யாரென்று. வைகோ என்றேன். வைகோவா என்று வாய் பிளந்தான். அவனுக்கு தலைவர் வைகோ பற்றி நன்றாகவே தெரியும்.

பேசி முடிந்து வந்ததும் சொன்னேன். தலைவர் வைகோவிடம் பேசினேன். நண்பன் சொன்னான், வைகோ பேசியிருக்கிறாரல்லவா கண்டிப்பாக உனது பொருட்கள் கிடைத்துவிடும் என்றான். அவனுக்கும் தலைவரின் மேல் அவ்வளவு நம்பிக்கை நம் கண்மணிகளை போல. நன்றி சொன்னேன். தமிழர்கள்தான் வைகோவை புரிந்தும், புரியாதது போல தேர்தல் காலங்களில் நடிப்பது வேதனை.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment