Wednesday, December 31, 2014

ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் 2015

மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தந்த வருடம் கடந்து போகிறது... புதிய வருடம் பிறந்து புது பொலிவோடு ஒவ்வொரு விடயங்களையும் அறிந்து தெரிந்து, அனைவருக்கும் உதவியாக, நல்லெண்ணங்களை கடைபிடித்து, புதியம மனிதர்களாக அவதாரமெடுத்து, அன்பாக ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ உலக மக்களாகிய நாம உறுதி ஏற்போம்.

புதிய வருடம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதோடு புதிய வாழ்வில், செல்வமும், அன்பும், நற்பண்புகளும் பெற்று வாழ எனது ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

சல்மான்கானின் துரோக செயலுக்கு கண்டனம்.


600 க்கு மேலான தமிழக மீனவர்களை கொன்றழித்த இலங்கையின் அதிபரான மகிந்த ராஜபக்ச க்கு ஆதரவாக 2015 ஜனாதிபதிக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்துள்ளார் இந்தி பட நடிகரான சல்மான்கான். இதன் மூலமாக அவர் இந்திய தேசத்திற்கும், தமிழ் திருநாட்டிற்கும் துரோகம் இழைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாரத தேசம் கொடியவனுக்கு இன்னும் சாதகமாக இருக்கும் என்பதையே மறைகுகமாக எடுத்துகாட்டுவதாக விழங்குகின்றது. இது போன்ற செயல்களுக்கு பாரத பிரதமர் அவர்கள் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுத்து சல்மான்கானை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி வலியுறுத்துவதோடு, சல்மான்கான் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது எனவும் வன்மையாக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Thursday, December 25, 2014

கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2014


பாவிகளை இரட்சிக்க பாரினில் அவதரித்த ஏசுபிரான் பிறந்த தினத்தை உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்பு, கருணை, சமாதானம் என்பவற்றை போதித்து உலக மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழவேண்டுமென்று அன்பினாலே அவர்களை ஆண்டவர். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலே நாம் அனைவரும் இனிப்புகள் வழங்கி ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி கொண்டாட வேண்டும். வான வேடிக்கைகள், பட்டாசுகளை கவனமாக வெடிக்க செய்து மகிழ வேண்டும். இந்த ஓளி வெள்ளத்திலே அனைத்து மக்களின் வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டுமென்று கூறி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைகேல்

Wednesday, December 24, 2014

கே பாலசந்தர் - திரையுலக பேரிளப்பு...


அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய திரையுலகில் அளப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜாம்பவான் மனிதகுலத்திலிருந்து சென்று தேவர்களோடு உலாவர சென்றுவிட்டார். திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்திகளை உடைய திரைப்படங்களையே விரும்பி இயக்கினார். மக்களுக்கு நல்ல கருத்துக்களையுடைய திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் தயாரித்தும் வெளியிட்டிருக்கின்றார். பல திரையுலக நட்சத்திரங்களை உருவாக்கியவரும் இவரே. தேசிய மாநில விருதுக்கு சொந்தகாரர் எளிமையின் சிகரமாகவும் விழங்கினார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் திரையுலகின் அனைத்து நண்பர்களுக்கும் மனதின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு கே பாலசந்தர் அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Friday, December 19, 2014

தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு!!


தமிழ் மற்றும் எந்த புதிய மொழியையும் மத்திய ஆட்சி மொழியாக சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது தமிழ் மக்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது..

இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தமைக்கு அவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இதை தாங்கள் மந்திரியாக இருக்கும்போதே நிறைவேற்றியிருந்தால், அப்போதைய காங்கிரஸ் தலமையிலான மத்திய அரசு தமிழையும் ஆட்சி மொழி என அறிவிக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்பதையும் நினவுபடுத்துகிறேன்..

தமிழை ஆட்சி மொழி கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்ட மத்திய உள்துறை துணை மந்திரி ஹரிபாய் பராத்திபாய் சவுத்ரி, இந்த முடிவை ஏற்றுக் கொள்வதானால் அரசியலமைப்பு சட்டத்தின் 346-வது பிரிவில் திருத்த வேண்டிவரும். இதே கோரிக்கையை முன்வைத்து, தங்கள் பிராந்தியத்தின் மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மற்ற மாநிலங்களும் அழுத்தம் தர நேரிடும் என கூறி உலகமே போற்றும் தமிழை தட்டி கழித்துள்ளார். 

உலகம் தோன்றிய காலத்தே தொன்று தொட்டு தமிழ் மொழி வழக்கத்திலிருக்கிறது என்பதை தமிழின தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரைகளாகவே அளித்துள்ளனர். தமிழ் மொழி அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானதால், அதை ஆட்சி மொழியாக்கினால் பாரத்தின் தேசிய மொழி ஆக்கிவிடுவார்களோ என்ற கசப்பு மனப்பான்மையில் மத்திய மந்திரி இதை மறுத்துள்ளார் என தெளிவாகிறது.

தமிழ் மொழிக்கென்று தனி வரலாறே இருக்கிறதே... உலகின் முதல் கப்பல் படையை கட்டி நிறுவிய மன்னன் போற்றிய தமிழ் மொழிக்கே ஆட்சி மொழி அந்தஸ்து இல்லாதது தமிழர்களிடையே மிகுந்த மன வேதனையான விடயமே... இதுவே தமிழன் இன்னும் அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதற்கு ஒரு பெரிய சான்றுமாகும். 

எனவே உலகின் மிக பழமையான உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த தமிழை ஆட்சி மொழியாக்க, மந்திரிசபை கூடி பரிசீலித்து ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பன்றி பண்ணையால் கொடுப்பைக்குழி மக்களின் உயிர்கள் காக்கபடுமா!!!?


கோவை தனியார் மருத்துவமனையில்  பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மும்தாஜ் என்ற பெண் உயிரிழந்தார் என் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானேன். அவரின் ஆன்மா இறைவனடி சேரவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாதபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

எனவே இதை போன்ற கொடூர உயிரிளப்பு சம்பவங்கள் நிகழ கூடாது என்பதற்காகதானே கொடுப்பைகுழி ஊரில் சட்டவிரோதமாக அமைந்திருக்கும் பன்றி பண்ணையை அகற்றும்படி வட்டார பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் சில இளைஞர்கள் மீது பொய்யான குற்றசாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளது வெட்க கேடானது என சமூக விரோதிகள் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவே இன்னும் தாமதிக்காமல் தொற்று நோயை பரப்பும் பன்றி பண்ணையை அகற்ற, மாவட்ட ஆட்சி தலைவர் கட்டளை பிறப்பித்து, பஞ்சயத்துதலைவர் அதை செயல்படுத்தி, ஒன்றிய தலைவர் அதை உறுதிபடுத்த வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பி.பி.சி தமிழ்ச் சேவையை இந்தியுடன் இணைத்து டெல்லிக்கு மாற்றக்கூடாது


அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஈழம் குறித்த செய்திகளையும், தமிழ் இனம் பற்றிய செய்திகளையும் இலண்டனில் இருந்து இயங்கிய பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பின் மூலம் தெரிவித்து வந்தது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் தமிழ் ஈழ மக்கள் படும் அவலத்தையும் கொடுந்துயரத்தையும் ஓரளவாவது பி.பி.சி. தமிழோசை அறிவித்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பி.பி.சி. தமிழோசையை இந்தி மொழியுடன் இணைத்து இலண்டன் தலைமையகத்திலிருந்து மாற்றி புது டில்லியில் இருந்து ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது. எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 இலட்சம் நேயர்கள் உள்ளனர். முக்கியமாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.

டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். மேலும் பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியா-இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும்.

பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயமும் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து, இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு, முதல்வர் அவர்கள் தமிழர்களின் எதிகாலம், தமிழினம், தமிழ் மொழி ஆகியவற்றை கருத்தில் கொண்டு BBC அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளை வெளிபடுத்தி இப்போது இயங்கும் இடத்திலே தொடர்ந்தும் இயங்கும்படி செய்ய தூரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...