கோவை தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மும்தாஜ் என்ற பெண் உயிரிழந்தார் என் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானேன். அவரின் ஆன்மா இறைவனடி சேரவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாதபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
எனவே இதை போன்ற கொடூர உயிரிளப்பு சம்பவங்கள் நிகழ கூடாது என்பதற்காகதானே கொடுப்பைகுழி ஊரில் சட்டவிரோதமாக அமைந்திருக்கும் பன்றி பண்ணையை அகற்றும்படி வட்டார பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் சில இளைஞர்கள் மீது பொய்யான குற்றசாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளது வெட்க கேடானது என சமூக விரோதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே இன்னும் தாமதிக்காமல் தொற்று நோயை பரப்பும் பன்றி பண்ணையை அகற்ற, மாவட்ட ஆட்சி தலைவர் கட்டளை பிறப்பித்து, பஞ்சயத்துதலைவர் அதை செயல்படுத்தி, ஒன்றிய தலைவர் அதை உறுதிபடுத்த வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment