Thursday, January 28, 2021

பாசிச பாசகவின் பிடியில் சிக்கியிருக்கிறதா முகநூல் நிர்வாகம்?

என்னுடைய முகநூல் கணக்கு அபாயத்தில் உள்ளதாக முகநூல் அறிவித்தது இப்போது.

என்னுடைய பின்னூட்டங்களும், பதிவுகளும் மக்களை தவறாக வழிநடத்துவதாக கூறுகிறது...
எத்தனை தடவை முடக்கி மீண்டு வருகிறது. இப்போது மொத்தமாக முடக்க நடவடிக்கை என கூறுகிறது.
விடுதலை புலிகளை உலகறிய பேசினால் சிங்கள கைகூலியின் அடியாளாக மாறி முகநூல் நிர்வாகம் எங்களை முடக்குகிறது.
பாசிச பாசகவின் மக்கள் விரோதங்களை மக்களுக்கு கூறினால், பாசகவின் கைகூலியாக செயல்பட்டு எச்சரிக்கை செய்வது..
இது என்ன மாதிரியான முகநூல் நிர்வாகத்தின் மனநிலை என தெரியவில்லை.
முகநூல் இந்திய அதிகாரியாக இருந்த பாசிச பாசகவின் உளவாளி மாற்றப்பட்டதையடுத்து, வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அப்போதாவது முகநூல் உணர்வு சார்ந்த நேர்மையான பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் என்று நம்பினோம். அதுவும் இப்போது கானல் நீராக உள்ளது.
யாரையும் விலைக்கு வாங்கும் சக்தி பாசிச பாசகவுக்கு இப்போது உள்ளதால் இப்படிபட்ட நிலை இருக்கிறது.
காலம் மாறும், காட்சிகளும் மாறும் என பாசிச பாசக உணர வேண்டும்.
நல்ல அரசு அமைந்தால் முகநூலுக்கே தடை விதிக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதை அடக்கத்துடன் முன் அறிவிப்பாக முகநூல் நிர்வாகத்துக்கு தெரிவிக்க விளைகிறேன். ஆகவே பாசிச பாசகவின் மகுடிக்கு ஆடுவதை உணர்ந்து செயல்படவும் வேண்டுகிறேன்.
முகநூல் நிர்வாகம் தமிழ் பதிவுகளை கற்றறிந்த தமிழர்கள் மூலம் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நல்ல தரமான சமூக ஊடமாக விளங்க வழிவகுக்கும்.
பாசிச அரசுகளின் கைக்கூலியாக முகநூல் செயல்படகூடாது.
தமிழர்களின் உணர்வுகளை அடக்க முயலும் முகநூல் நிர்வாகத்தை கண்டிக்கிறேன்...


மைக்கேல் செல்வ குமார்

Tuesday, January 19, 2021

மறைந்த மருத்துவர் சாந்தா அவர்களுக்கு புகழஞ்சலி!

புற்றுநோயால் ஆட்பட்ட மக்களுக்கு சிகிச்சை‌ இல்லாமல் இருந்தா காலத்தில், இரத்த புற்றுநோய்க்கு மருந்து கொடுத்து மருத்துவம் மூலம் புற்றுநோய் குணமாக்கலாம் என்று மனிதர்களை காத்தவர்.

புற்றுநோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் புற்றுநோயால் மனம் தளராமல் இருக்க வேண்டுமென்று விளக்கியதோடு அவர்களுக்கு சிகிச்சையளித்து காத்தவர்.

40 ஆண்டுக்கு மேலாக அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் இயக்குனராக சிறப்பாக பணியாற்றி உலகறிய செய்தவர். மக்கள் பணிக்காகவே திருமணம் செய்துகொள்ளாத மாதரசி இன்று 19-01-2021 மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்து மக்களை நிலைகுலைய செய்துள்ளது.

அவர் மருத்துவம் பார்த்த ஒவ்வொரு மனிதரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரது மருத்துவ பணி ஈடிணையில்லாதது. 

அடையாறு கான்சர் மருத்துவமனை இருக்கும் வரை அம்மையார் புகழ் நிலைத்திருக்கும்‌.

அவரை இழந்து வாடும் அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Monday, January 18, 2021

கொன்றவனை அரவணப்பதா?

தமிழீழத்தில் 146000 தமிழர்களை கொன்றவனுடன் கூட இருந்த முரளீதரன் படத்தில் நடிக்க ஒப்புகொண்டதற்கே தமிழன் மனதிலிருந்து ஒரு நடிகனாக தூக்கியெறிந்த பிறகும், திருந்தவில்லை....

இப்போது வேறு வடிவில் மேலும் சிங்களவனுக்கு சொம்படிக்க,

எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்ற தொனியில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று மேலும் மேலும் சிங்களவனை தூக்கிபிடிப்பது தமிழின துரோகத்தையே காட்டுகிறது.

கொன்றவனையும் அரவணைப்பதா? இனத்தையே அழித்தவனை இறுகப்பிடிப்பதா?
திட்டமிட்டு அழித்தவனை தாங்கி பிடிப்பதா?

சகோதரர் Vijay Sethupathi உங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விட்டு தாமதித்து துரோகி முரளிதரன் படத்திலிருந்து விலகினீர்கள்.

இப்போது மீண்டும் சிங்களவனுக்கே சிங்கி அடிக்கும்விதமாக அடுத்த படத்திற்கான போஸ்டர் வலம் வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே தமிழர்களின் சினத்திற்கு சிக்கியிருக்கிறீர்கள். உங்கள் மேலுள்ள எங்கள் என்ணங்கள் கலைந்து நிற்கிறது.

மேலும் மேலும் அதற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழர்களை அழிக்கும் பாதகர்களுக்கு ஆதரவாக ஆடவிரும்புகிறீர்கள். தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுடன் இணையவேண்டுமென்றால் சிங்கள தேசத்துக்கு குடியேறுங்கள்.

தமிழன் என்ற வேசமிட்டு தமிழர்களுக்கு துரோகமிழைக்க வேண்டாம்.

எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கமாட்டோம். கடைசியாக எச்சரிக்கிறோம் படத்திலிருந்து விலகுங்கள். அடுத்த தடவை இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.


தமிழீழம் எங்கள் உயிர் மூச்சில் கலந்திருக்கிறது.

சிங்கள அரச காடையர்களை என்றும் எதிர்க்கும் தமிழன்,

மைக்கேல் செல்வ குமார்,

Wednesday, January 13, 2021

என் பாசமிகு பெரியவரை இழந்துவிட்டேன்!

 

ராமநாதபுரம் சாதிக் அலி ஐயா இன்று 13-01-2021 பூவுலகை விட்டு பிரிந்தார்.

வாய் நிறைய பாசத்துடன் மைக்கேல் நல்லா இருக்கீங்களா என பாசம் காட்டுவார்.

அலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் அன்பை அளவில்லாது பொழிவார். அண்ணா சொன்ன குடும்ப பாசம் தலைவர் வைகோ வழியிலே நமக்கு கிடைத்ததனால்தானே மைக்கேல் நாமெல்லாம் இவ்வளவு பாசமாக இருக்கிறோம் என்பார்.

திராவிட இயக்கத்தில், மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் ஒரு மாவட்ட அவைத் தலைவர் என்ற ஒரு சிறு பெருமை கூட இல்லாமல் பாசம் காட்டுபவர்.

அண்ணன் மல்லை சி.ஏ.சத்யா Mallai C E Sathya அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். என்னிடத்தில் பேசின பல தடவைகளில் அண்ணன் சத்யா அவர்களை தலைவருக்கு நல்ல தம்பி கிடைத்திருக்கிறார் என்று மனதார மகிழ்வார்.

கண் பார்வை மங்கி இருக்கிறது மைக்கேல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தலைவர்தான் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் மூலம் ஏற்பாடு செய்தார் என்றார். அண்ணன் தி.மு.ரா பற்றி, இவ்வளவு உதவுவார், அறுவை சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார் என எதிர்பார்க்கவேயில்லை மைக்கேல் என அண்ணனை பற்றி பேசி மகிழ்ந்தார். கண் சரியாகிவிட்டது. அடுத்த கண் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது அதையும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். வயசாகிவிட்டதால் பார்வை குறைகிறது என்றார். அதையும் அறுவை செய்து சரி செய்துவிடலாம் ஐயா கவலை வேண்டாம் என்று சொல்வேன். ஆம் மைக்கேல் செய்துடலாம் என்று சொன்னார்.

அதற்கான நேரத்தில் கொரொனா கொடுமை தாண்டவமாடியது. வீட்டிலேதான் இருக்கிறேன் மைக்கேல். நீங்களும் ஒமானில் கவனமாக இருங்க என அவ்வளவு பாசம் காட்டுவார்.

நான் தனியாக ஒமானில் இருந்த போது மைக்கேல் எப்படியாவது குடும்பத்தோடு இருக்க முயலுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். கடைசியாக எப்படியோ குடும்பம் ஒமான் வந்ததும் அவர் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். தன் மகனிடம் எவ்வளவு பாசம் காட்டுவாரோ அவ்வளவு அன்பாயிருந்தார்.

2020 அக்டோபர் 17 ஆம் தேதி எனக்கு மகள் பிறந்த செய்தியை 18 ஆம் தேதி ஐயாவுக்கு அழைத்து சொன்னேன். எனக்கு பேத்தி பிறந்திருக்கிறாரா. ரொம்ப சந்தோசம். நல்லா இருங்க மைக்கேல். நீங்க நல்லா இருக்கணும் என்றே ன்னார். இந்த வார்த்தைகள் அவர் எப்போதும் என்னிடம் கூறும் வார்த்தைகள்.

அப்போது கூட கண் பற்றி பேசும்போது சீக்கிரம் அடுத்த கண்ணும் அறுவை சிகிச்சை செய்துடுவேன் மைக்கேல் என்றார்.

மதிமுக இணையதள உறவுகள் அனைவரிடத்திலு மிக நெருக்கமானவர். அனைவரையும் அரவணைத்து வயதானவர் என்ற சோர்வில்லாமல் இளைஞரை போல எல்லாரிடத்திலும் பழகினார். அனைவரும் அவரிடமும் அவ்வளவு பாசமாக இருந்தோம்.

ஆருயிர் சகோதரர் ஈரோடு Somasundaram Loganathan திருமணத்தில் கலந்துகொண்டு இணையதள கண்மணிகளோடு சிறப்பாற்றி அவ்வளவு அன்பை பொழிந்தவர்.

அண்ணன் Ammapet G Karunakaran பற்றி இணையத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி பம்பரமமாக சுழலுகிறார் என்று சிலாகித்திருக்கிறார். 2016 கழக இணையதள மாநாட்டில் கலந்துகொண்டு வரும்போது ராமநாதபுரம் வீட்டுக்கு போய்விட்டு போகலாம் என்று அன்போடு அழைத்தார்.

ஒரு முறை மண்டபம் சென்றபோது அவர் வீட்டுக்கு செல்ல இயலாமல் போனது. அது ஒரு விரைவு பயணமாக குடும்பமாக சென்றிருந்ததால் எங்கும் செல்ல இயலாத சூழலில் அவர் கண்டிப்பாக வீடு வரவேண்டும் என்று அழைத்தும் செல்ல இயலாமல் போனது.

இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் அவருடன் பழகிய நாட்களாக இருந்தன. இணையத்திலே எனக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

கழகத்தினர் அனைவரது திருமண நிகழ்விலும், குடும்ப நிகழ்விலும் கலந்துகொண்டவர்.

கழக அரசியல் போராட்டம் ஆர்ப்பாடம் என கலந்துகொண்டு கைதாகி விடுதலையானவர்.

தேர்தல் நேரங்களில் இணையதளம் சார்பாக தேர்தல் பிரச்சாரங்களை ஊர் ஊராக இளைஞனாக சென்று பம்பரத்திற்கு வாக்கு சேகரித்தவர்.

எனது சுக துக்கத்தில் சில வருடங்களாகவே ஆறுதலாக இருந்தவர். அவரது இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்றாலும், கழக இணையதள கண்மணிகளுக்கும் பேரிழப்பாகும்.

அதைவிட அவர் நேசித்த தலைவர் வைகோ எம்பி அவர்களுக்கு பேரிழப்பு, மதிமுகவிற்கு பேரிழப்பு.
மதிமுக இணையதள அணிக்கு பேரிழப்பு. மதிமுக இருக்கும் வரை ஐயாவின் புகழ் நிலைத்து நிற்கும்.

கண் அறுவை சிகிச்சை செய்து நலமாகிவிடுவார் என்ற நினைத்த நேரத்தில்தான் நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருக்கிறது. நவம்பரில்தான் கண்டுபிடித்தார்கள். கடைசி கட்டமாகிவிட்டதால் காப்பாற்ற இயலாமல் மரணமடைந்துவிட்டார் என்று அவரது இரண்டாவது மகன் சொன்னதுமே உடைந்துவிட்டேன்.

எப்படி ஆறுதல் சொல்ல, வார்த்தைகளை தேடி தேடி பேசி ஆறுதல் சொல்லி வைத்தேன் அலைபேசியை...

நல்லா இருக்கணும், நல்லா இருப்பீங்க மைக்கேல் என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் ஐயாவின் அந்த வார்த்தைகளை என்று கேட்பேனோ என்ற வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 12, 2021

டெல்லியில் போராடும் விவசாயிகளை படை கொண்டு விரட்ட ஒன்றிய அரசு திட்டம்!


இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களாக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அது விவசாயிகளை அடியோடு பாதிக்கும் சடங்கள் என்று சொல்லி பஞ்சாப் விவசாயிகள் முழுதும் திரண்டனர். இப்போது பல மாநில விவசாயிகளும் அவர்களுடனும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

10 க்கும் மேற்பட்ட தடவை பேச்சுவார்த்தைகளை நடத்தி விவசாயிகளை கலைந்து செல்ல மத்திய அரசு வற்புறுத்தியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது ஒன்றே தீர்வு என்று போராடி வரும் விவசாயிகளை கலைந்து செல்ல வைக்க பாசிச பாஜக அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்ததால்,

1. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்வார்கள். ஜனவரி 26 குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடும் மத்திய அரசு. தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளை தனிதனியாக மிரட்டி ஆசை வார்த்தை காட்டி பாசிச பாஜகவுக்கு அடிபணிய வைப்பார்கள் அல்லது ஆசைபடுபவர்களுக்கு பதவி சுகம் கிடக்க உறுதி கொடுப்பார்கள். சட்டம் கிடப்பிலே கிடக்கும். விவசாயிகள் தங்கள் வேலைகளில் மும்முரமாக விவசாயத்திலே இருப்பார்கள்.

மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

2. இடைக்கால தடை விதித்தாலும், 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறும் வரை, டெல்லியில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதை சாதகமாக்க பாசிச பாசக அரசு விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தும். விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று மேலும் தெரிவிப்பார்கள். அப்போது பாசக அரசு என்ன சொல்லுமென்றால், விவசாயிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்லி படைகளை அனுப்பி அடித்து நொறுக்க முயலும். விவசாயிகள் ரத்த காயங்களுடன் மரணமடைவார்கள். பலர் காயமடைவார்கள். போராட்டம் வீரியம் குறையும்.

இல்லையென்றால் பாசிச பாசக பல குண்டாஸ்களை ஆர் எஸ் எஸ் கும்பலை விவசாயிகளின் இடையே அமர செய்து கலவரத்தை தூண்ட முயலும். ஒன்றிய அரசு விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள், திவிரவாதிகள் புகுந்துள்ளனர், அவர்களை அகற்ற வேண்டுமென்று சொல்லி படைகளை அனுப்பி விவசாயிகளை அடித்து நொறுக்குவார்கள். போராட்டம் முடிவுக்கு வரும்.

குடியரசு தினத்தை சிறப்பாக நடத்துவார்கள்.

நாளடைவில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

இதுதான் நடக்கும் என்று எனது அனுமானம்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்-மைக்கேல் உரை!

2009 தமிழீழ போரில் சிங்களம் தமிழர்களை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்ததில் வீரச்சாவடைந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2018 ஆம் ஆண்டு நிறுவிய நினைவுத்தூபியை இடித்தழித்த சிங்கள அரசுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று 11-01-2021 நடத்திய நீதிக்கான குரல் இணையவழி கண்டனக் கூட்டத்தில் மதிமுக சார்பில் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையிலிருந்து அன்பு தலைவர் வைகோ எம்பி அவர்களின் தம்பி அடியேனின் (மைக்கேல்) கண்டன சிற்றுரை.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, January 11, 2021

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழீழ படுகொலையை நினைவு கூரும் வகையில் பல்கலைகழக வழாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இணையவழி மூலமாக 11-01-2020 ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் தாய் தமிழகம், தமிழீழ தாயகம். புலம்பெயர் தமிழர்கள் பங்றேற்றார்கள்.
அடியேனுக்கும் மதிமுக சார்பில் ஒமானிலிருந்து கண்டனகுரல் எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றிகள்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழீழ மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது சிங்கள அரசு!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்காக பல்கலைகழக மாணவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் கிழக்கு மாகாண மாணவர்களும் போராட திரண்டனர்.

இதை கண்டித்து தமிழகம், உலகம் முழுதுமுள்ள தமிழர்களின் தொடர் கண்டன போராட்டத்தால் அடிபணிந்த சிங்கள அரசு, பல்கலைகழக வளாகத்திலேயே, நினைவுத்தூண் இடித்த இடத்திலே துணைவேந்தர் தலைமையிலேயே மீண்டும் நினைவுசின்னம் எழுப்ப அனுமதியளித்தது. மாணவர்களாக சேர்ந்து அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ் எழும். தமிழீழம் மலரும்.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மைக்கேல் செல்வ குமார்

ரஜினியை விடுங்க மண்டவீங்கிகளா!

எனக்கு உடல் நிலை சரியில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை என சொல்லிய பிறகும் எதுக்குடா வம்படியா இழுத்து விட்டு கொல்ல பாக்குறீங்க மன்றம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்கிரிகளா...

வயசான காலத்துலயாவது rajinikanth என்ற நடிகரை மூடிக்குட்டு இருக்க விடுங்கடா...

Saturday, January 9, 2021

நினைவு தூணை இடித்த சிங்கள அரசை கண்டிக்கிறேன்!

எங்கள் உறவுகளை தமிழர்களை தமீழிழத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து கொன்றுவிட்டு அவர்கள் நினைவால் யாழ் பல்கலையில் எழுப்பிய நினைவுதூண்களை கூட நேற்று இரவு 08-01-2021 யாரும் இல்லாத நேரத்தில் அழித்து அப்படி ஒரு இனக்கொலை நடக்கவில்லை என்பது போல மறைக்க பார்க்கிறது சிங்கள பேரினவாதம்.

உலகம் இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழர்கள் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, இன்னும் கையில் எடுக்கமாட்டார்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

இப்போதைய தேவையில் அறவழியிலேயே எங்கள் நாட்டை தமிழீழத்தை அடைய விரும்புகிறோம். எங்களை ஒடுக்க ஒடுக்க எங்கள் உணர்வுகளை சிதைக்க சிதைக்க வீறு கொண்டு எழும் நாள் தள்ளி போகாது என்பதை நினைவூட்டுகிறோம்... அப்படி வரும் நாள் உலகமே எதிர்த்தாலும் சிங்கள தரைமட்டமாகும் என்பதையும் எச்சரிக்கிறோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
எங்கள் லட்சிய கனவு, தமிழீழம் அமையும் வரை என்றும் ஓயாது...

தமிழீழ தாகத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்