Sunday, November 27, 2016

தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்க நாள்!

தனது தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை கொடியளித்த மாவீரர்களுக்காக தமிழீழத்தில் முதலில் உயிர்கொடையளித்த மில்லர் அவர்கள் இறந்த தினமான நவம்பர் 27 ல் ஆண்டுதோறும் மாவீரர் தினமாக தமிழீழ மக்களும், உலக தமிழர்களும், தமிழக தமிழர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாவீரர் நாளில் நாம் அனைவரும் தமிழீழம் என்ற ஒன்றுதான் தீர்வு என்று அனைவ்ரும் ஒன்றாக போராட்டம் நடத்தி, பொது வாக்கெடுப்பு நடத்த போராடி ஐநாவுக்கு அழுத்தம் கொடுத்து, தாயக கனவை நெஞ்சில் சுமந்து தமிழீழ மண்ணில் உயிர் விட்ட மாவீரகளின் தியாகத்தில் தமிழீழ மலர போராடுவோம் என உறுதியேற்ப்போம்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, November 26, 2016

சட்ட நாள் நல்வாழ்த்துக்கள்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1949 நவம்பர் 26 ல், இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நானும் இந்த சட்டங்களை விரும்பி படிப்பவன் என்ற முறையில் சட்டத்தை விரும்பி படிக்கும் அனைவருக்கும் இந்த சட்ட நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், இந்த சட்டம் மூலம் அனைவருக்கும் சமமான நீதி கிடைத்திட போராட வேண்டும். ஏழைகளுக்கும் நீதி கிடைத்திட வழி செய்ய வேண்டும். இந்த சேவை மூலம் நீதி காக்கப்பட்டு மனித நேயம் உயரும். கல்லூரிகளில் சட்டம் பயிலும் அனைத்து மாணவர்களும் தலை சிறந்த வழக்கறிஞர்களாக உருவாகவேண்டும் என வாழ்த்துதலை தெரிவித்து, அனைவருக்கும் சட்ட நாள் நல் வாழ்த்துக்கள்.

மைக்கேல் செல்வ குமார்

தமிழினத்தை உலகறிய செய்த மாவீரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

அடிமைபட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழினத்தை வீறுகொண்டு எழ செய்து, தமிழீழத்திலே தனது விடுதலைக்காக 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்டததை முன்னெடுத்து தமிழின தமிழீழ விடுதலைக்கு போராடிய தலைவன்தான் தமிழீழ தேசிய தலைவராக உருவெடுத்த மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

இலங்கை சிங்களவர்கள், தமிழீழ பகுதியை ஆக்கிரமிக்க துடிக்கும்போதெல்லாம் பின்னங்கால் பிடரியில் அடித்து விரட்டியவர். உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கண்டிராத, ராணுவ தரை படை, கடற்படை, விமான படைகளையும் தாண்டி 4 ஆவதாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய தன்னலமில்லா தலைவன். 

ஒழுக்கமும் சுய மரியாதையும் தனது இயக்கத்தில் அனைவருக்கும் கற்றுக்கொடுத்த மாவீரன். அப்படி பட்ட மாவீரனால்தான் தமிழினம் உலகறிய செய்யப்பட்டது. 

அந்த மாவீரன் பிரபாகரன் அவர்கள் தான் தமிழினத்திற்கே தலைவராக இருக்கிறார். அவர் பிறந்த நாளில் நாம் அவர் கண்ட கனவான தமிழீழம் மலரவும், அதற்காகன் பொதுவாக்கெடுப்பை ஐநா நடைமுறைப்படுத்த, செய்ய வேண்டிய வேலைகளுக்கு போராடி அழுத்தம் தரவும் நாம் வீதிக்கு வர வேண்டும்.

இளைஞர்களாகிய நாம் தமிழினம் காக்க தமிழீழத்திற்கு போராடாவிட்டால் வேறு யார் போராடுவார் என்ற தமிழ் உணர்வோடு நம் தமிழீழம் மலர உறுதியேற்ப்போம்.

தமிழன்புடன்.
மறுமலர்ச்சி மைக்கேல்

இன புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ மரணம். ஆழ்ந்த இரங்கல்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை 80 கல் தொலைவில் இருந்துகொண்டு அடிபணியாமல் கியூபா அரசை நிறுவியவர். கியூபா இன மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவர். 

இன விடுதலைக்கு வித்திட்டு புரட்சி செய்த புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ இன்று 26-11-2016 காலமானார். இது அடிமை பட்டு விடுதலைக்கு போராடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு கருப்பு நாள்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளில் காஸ்ட்ரோ மரணமடைந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல். ஆனால் என் தமிழினம் கொன்று புதை குழியில் போடப்படும்போது ஒரு அனுதாப வார்த்தை கூட சொல்லாதவர்தான். அதனால் அவர் மீலிருந்த மதிப்பு என்னிடத்தில் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கல்.

மைக்கேல் செல்வ குமார்

Thursday, November 24, 2016

கறுப்பு பண கொள்ளையில் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, திமுக!

பிரதமர் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து ₹500 ₹1000 தடை செய்ததன் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க போராடுகிறார். ஆனால் அந்த திட்டத்தை வரவேற்காமல் அதை திரும்ப பெற வேண்டுமென்று போராடுகின்றனர் கோடிகளை குவித்துள்ள அதிமுகவும் திமுகவும்.

பிரதமர் திட்டம் வரவேற்ககூடியது. ஆனால் அதை செயல்படுத்தியவிதத்தில்தான் தவறிழைத்திருக்கிறார்கள். அவர்கள் பணத்தை சரிவர மக்களுக்கு கிடைக்க செய்திருந்தால் இந்த சாமானிய மக்கள் பாதிப்படைந்திருக்கமாட்டார்கள். அதை பிரதமர் குழு சரியான அணுகுமுறை மூலம் சரி செய்ய வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

முல்லை பெரியார், நியூட்ரினோ, காவிரி மற்றும் பல பிரச்சினைகளுக்கு ஒன்றாக போராடாமல், நாகரீக அரசியலை காழ்ப்புணர்ச்சி அரசியலாக மாற்றி பொறாமை குணத்திற்கு வித்திட்ட அதிமுக, திமுக கட்சிகள் தாங்கள் கொள்ளையடித்து குவித்துள்ள கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை காப்பாற்றிக்கொள்ள டெல்லியில் ஓரணியில் இணைந்து போராடுகிறார்கள்.

இந்த இரு கட்சிகளுமே தமிழகத்தை சூறாடியவர்கள். இவர்கள் கொடுக்கும் ₹500 க்கும் ₹1000 க்கும் நாக்கை தொங்கவிட்டு தன்மானத்தை இழந்து பணத்தை பெற்றுக்கொண்டு தன் வாக்கை விலைக்கு கொடுக்கும் வாக்காளர்கள் இதன் மூலாமாகவாவது அதிமுகவையும், திமுகவையும் உணர்ந்து வருகிற தேர்தலில் இரு கட்சிகளுக்கும்  வாக்களிக்காமல் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும்.

நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் கறுப்பு பணத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதிமுக, திமுக வும் ஓரணியில் நின்று எதிர்ப்பு தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதை வெள்ளையாக்கி அனுபவிக்க துடிக்கிறார்கள் இதை மக்கள் புரிந்துகொண்டு தமிழகத்தில் இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, November 13, 2016

நெருக்கடியில் நல் வார்த்தை உதிர்த்தவர்களுக்கு நன்றி!

என் வீட்டில் திருட்டு போனது சம்பந்தமாக, கடந்த இரண்டு நாட்களாக, ஆறுதலாக, ஆதரவாக, தேறுதலாக, ஆதங்கப்பட்ட அனைத்து உறவுகளுக்கும், அலைபேசியிலும், முகநூலிலும், வாட்சப்பிலும் விசாரித்த நண்பர்களுக்கும், நேரடியாக வீடு சென்று நிலமையை கேட்டறிந்த அண்ணன் Chris J Hector, RJerome JeyaKumar அவர்களுக்கும், தொண்டன் தூரத்திலிருந்தாலும், சம்பவத்தை அறிந்த உடன் குமரி மாவட்ட SP யிடம் அழைத்து திருடுபோனவைகளை கண்டிபிடித்து தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துவிட்டு, எனக்கும் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய நான் தலைவராக ஏற்றுக்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்களுக்கும் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

தொண்டன் எங்கிருந்தாலும் அவனை, காக்கும் கவசமாக, தலைவர் வைகோவை தவிர யாருமுண்டோ?

ஓமன் நேரப்படி இன்று 13-11-2016 மதியம் சரியாக  12.09 தலைவரிடம் அழைப்பு வந்தது. நான் தம்பி பிரசாந்த் காலை கட் செய்தேன். நான் உடனே திரும்ப அழைத்து கால் போவதற்குள் திரும்பவும் அழைத்தார். அட்டன் செய்தேன். சொல்லிவிட்டு பின்னர் நான் பேசினேன். அண்ணே நலமா என்றவர் தலைவரிடம் கொடுக்கிறேன் என்றார். 

தலைவர் பேசினார்,

தலைவர்:  தம்பி மைக்கேல் நல்லா இருக்கீங்களா

நான்: ஐயா நான் நல்லா இருக்கேன். நீங்கள் நல்லா இருக்கீங்களா?

தலைவர்: நான் நல்லா இருக்கேன். உங்கள் பதிவு பார்த்தேன் (எனது வீட்டில் ஜன்னல் கம்பி வெட்டி எடுத்து கொள்ளை நடந்திருந்தது 11 ஆம் தேதி நவம்பர் 2016). நான் SP தர்மராஜிடம் பேசியிருக்கிறேன். நல்ல மனிதர்.

நான்: சரி ஐயா

தலைவர்: எனக்கு ரொம்ப வேண்டிய தம்பி, வேற யாரும்ணா அதிகமா சொல்லியிருப்பாங்க, ஆனாலதான் அந்த தம்பி 15 பவுனும், ₹10000 என்று உண்மையை சொல்லியிருக்கிறார். எனக்கு ரொம்ப வேண்டிய தம்பிணு சொல்லியிருக்கிறேன். தம்பியின் மனைவி மற்றும் மகன்தான் இருக்கின்றனர்.

நான்: சரி ஐயா

தலைவர்: கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசினேன்.  20 நாட்களில் கண்டுபிடித்துவிடுவதாக SP கூறியிருக்கிறார். என்றார்.

நான்: சரி ஐயா ரொம்ப நன்றி ஐயா

தலைவர்: இது எனது கடமை, திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க இல்லியா

நான்: ஆமா ஐயா திட்டமிட்டுதான் செய்துருக்காங்க. 2 வாரம் முன் என் நாயையும் விசம் வைத்து கொன்றிருக்கிறார்கள். 

தலைவர்: ஐயோ. ரொம்ப வருத்தமாக இருக்கிறது (அவர் தொனியில் அந்த வருத்தம் தெரிந்தது)

நான்: ஆம் ஐயா, நன்றாக நின்ற நாய் அடுத்த நாள் காலையில் மயங்கிய நிலையில் இருந்தது. சயங்காலம் இறந்துவிட்டது. விசம் என்று அறிந்தும் நாங்கள் வெளியில் சென்றதால் சாப்பிட்டிருக்கலாம் என்று அதை பொருட்படுத்தவில்லை என்றேன்.

தலைவர்: அப்படியா செத்து போச்சா...

நான்: ஆம் ஐயா நல்ல நாய், ஒரு ஆளையும் விடாது.

தலைவர்: சரி அப்போணா திட்டமிட்டுதான் பண்ணியிருக்காங்க. கிடைச்சிடும். கவலை படவேண்டாம்.

நான்; சரி ஐயா, நன்றி ஐயா. உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.

தலைவர்: சரி.. ம்ம்

நான்: சரி ஐயா சரி.

பேச்சு முடிந்தது. அலைபேசி தம்பி பிரசாந்திடம் கொடுக்கும் இடைவெளியில், தலைவர் சொல்வது கேட்கிறது. நாயும் செத்து போச்சாம், வருத்தமாயிருக்கு என்கிறார்.

நான் அலைபேசி காலை துண்டித்தேன்.

தலைவரிடம் 2.25 நிமிடம் பேசினேன். தலைவர் மிகவும் வருந்தினார். தொண்டன் எங்கே இருந்தாலும் அவனை காக்கும் கவசமாகவே தலைவர் வைகோ இருக்கிறார். அவர் குரல் கவசமாக ஓங்கி ஒலிக்கும் என்பது இதுவும் லட்சகணக்கான மனிதநேயமிக்க சான்றுகளின் ஒன்றாகும்.

இந்த கால் வரும் போதே, எனது முக புன்னகை கண்டு, அலுவலகத்தின் பக்கத்து இருக்கையில் இருக்கும் வட நாட்டு நண்பன் கேட்டான் யாரென்று. வைகோ என்றேன். வைகோவா என்று வாய் பிளந்தான். அவனுக்கு தலைவர் வைகோ பற்றி நன்றாகவே தெரியும்.

பேசி முடிந்து வந்ததும் சொன்னேன். தலைவர் வைகோவிடம் பேசினேன். நண்பன் சொன்னான், வைகோ பேசியிருக்கிறாரல்லவா கண்டிப்பாக உனது பொருட்கள் கிடைத்துவிடும் என்றான். அவனுக்கும் தலைவரின் மேல் அவ்வளவு நம்பிக்கை நம் கண்மணிகளை போல. நன்றி சொன்னேன். தமிழர்கள்தான் வைகோவை புரிந்தும், புரியாதது போல தேர்தல் காலங்களில் நடிப்பது வேதனை.

மைக்கேல் செல்வ குமார்