பிரதமர் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து ₹500 ₹1000 தடை செய்ததன் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க போராடுகிறார். ஆனால் அந்த திட்டத்தை வரவேற்காமல் அதை திரும்ப பெற வேண்டுமென்று போராடுகின்றனர் கோடிகளை குவித்துள்ள அதிமுகவும் திமுகவும்.
பிரதமர் திட்டம் வரவேற்ககூடியது. ஆனால் அதை செயல்படுத்தியவிதத்தில்தான் தவறிழைத்திருக்கிறார்கள். அவர்கள் பணத்தை சரிவர மக்களுக்கு கிடைக்க செய்திருந்தால் இந்த சாமானிய மக்கள் பாதிப்படைந்திருக்கமாட்டார்கள். அதை பிரதமர் குழு சரியான அணுகுமுறை மூலம் சரி செய்ய வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.
முல்லை பெரியார், நியூட்ரினோ, காவிரி மற்றும் பல பிரச்சினைகளுக்கு ஒன்றாக போராடாமல், நாகரீக அரசியலை காழ்ப்புணர்ச்சி அரசியலாக மாற்றி பொறாமை குணத்திற்கு வித்திட்ட அதிமுக, திமுக கட்சிகள் தாங்கள் கொள்ளையடித்து குவித்துள்ள கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை காப்பாற்றிக்கொள்ள டெல்லியில் ஓரணியில் இணைந்து போராடுகிறார்கள்.
இந்த இரு கட்சிகளுமே தமிழகத்தை சூறாடியவர்கள். இவர்கள் கொடுக்கும் ₹500 க்கும் ₹1000 க்கும் நாக்கை தொங்கவிட்டு தன்மானத்தை இழந்து பணத்தை பெற்றுக்கொண்டு தன் வாக்கை விலைக்கு கொடுக்கும் வாக்காளர்கள் இதன் மூலாமாகவாவது அதிமுகவையும், திமுகவையும் உணர்ந்து வருகிற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும்.
நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் கறுப்பு பணத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதிமுக, திமுக வும் ஓரணியில் நின்று எதிர்ப்பு தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதை வெள்ளையாக்கி அனுபவிக்க துடிக்கிறார்கள் இதை மக்கள் புரிந்துகொண்டு தமிழகத்தில் இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment