Saturday, December 10, 2016

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை! கொடுப்பைக்குழி பள்ளிகூடத்தில் முகாம்!

7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக புகைபடத்துடன் தகவல் சேகரிக்க இன்று 10.12.2016 சனிக்கிழமை அதிகாரிகள் கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

குழந்தைகள் 5 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதால், விரல் ரேகை பதிவு போன்றவை பெற்றோருடையது மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் புகைப்படம் மட்டும் குழந்தையுடையதை பயன்படுத்தப்படும்.

எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதார் அட்டைகளுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து செல்லுங்கள்.


இடம்: அரசு தொடக்கப்பள்ளி,கொடுப்பைக்குழி.
நாள்: 10.12.2016 சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
தகுதியுள்ளோர்: 7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மட்டும்.
குறிப்பு: குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்படாத பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.


தகவல்: Dr. ராஜா - கொடுப்பைக்குழி

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

Tuesday, December 6, 2016

புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை ஓ.பன்னீர் செல்வம் பூர்த்தி செய்து 26-12-2016 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக மக்களில் ஒருவனாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரவும், மக்களின் மன நிலையை அறிந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், நேர்மையாகவும், சேவை எண்ணத்தோடு செயலாற்றவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

Monday, December 5, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 68 வயதான அவர் தன்னுடைய அதீத தைரியத்தால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தொடுத்தது போரல்ல, இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார். 7 தமிழர்கள் விடுதலைக்கும் போராடியவர். பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்.

தமிழக மக்களுக்கு ஒரு சாதனை பெண்மணியாகவே திகழ்கிறார். எவ்வளவு விமர்சனம் அவர் மீது வைத்தாலும், ஒரு பெண்மணியாக திறமையான நிர்வாகியாக அவர் மீது பெண் என்ற அடிப்படையில் ஒரு மதிப்பு உண்டு.

முதலமைச்சர் இழப்பு தமிழக மக்களை சோகத்தி ஆழ்த்தியிருப்பது நிதர்சனம்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் உடலுக்கு தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த இருக்கின்ற வேளையில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

Sunday, November 27, 2016

தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்க நாள்!

தனது தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை கொடியளித்த மாவீரர்களுக்காக தமிழீழத்தில் முதலில் உயிர்கொடையளித்த மில்லர் அவர்கள் இறந்த தினமான நவம்பர் 27 ல் ஆண்டுதோறும் மாவீரர் தினமாக தமிழீழ மக்களும், உலக தமிழர்களும், தமிழக தமிழர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாவீரர் நாளில் நாம் அனைவரும் தமிழீழம் என்ற ஒன்றுதான் தீர்வு என்று அனைவ்ரும் ஒன்றாக போராட்டம் நடத்தி, பொது வாக்கெடுப்பு நடத்த போராடி ஐநாவுக்கு அழுத்தம் கொடுத்து, தாயக கனவை நெஞ்சில் சுமந்து தமிழீழ மண்ணில் உயிர் விட்ட மாவீரகளின் தியாகத்தில் தமிழீழ மலர போராடுவோம் என உறுதியேற்ப்போம்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, November 26, 2016

சட்ட நாள் நல்வாழ்த்துக்கள்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1949 நவம்பர் 26 ல், இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நானும் இந்த சட்டங்களை விரும்பி படிப்பவன் என்ற முறையில் சட்டத்தை விரும்பி படிக்கும் அனைவருக்கும் இந்த சட்ட நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், இந்த சட்டம் மூலம் அனைவருக்கும் சமமான நீதி கிடைத்திட போராட வேண்டும். ஏழைகளுக்கும் நீதி கிடைத்திட வழி செய்ய வேண்டும். இந்த சேவை மூலம் நீதி காக்கப்பட்டு மனித நேயம் உயரும். கல்லூரிகளில் சட்டம் பயிலும் அனைத்து மாணவர்களும் தலை சிறந்த வழக்கறிஞர்களாக உருவாகவேண்டும் என வாழ்த்துதலை தெரிவித்து, அனைவருக்கும் சட்ட நாள் நல் வாழ்த்துக்கள்.

மைக்கேல் செல்வ குமார்

தமிழினத்தை உலகறிய செய்த மாவீரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

அடிமைபட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழினத்தை வீறுகொண்டு எழ செய்து, தமிழீழத்திலே தனது விடுதலைக்காக 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்டததை முன்னெடுத்து தமிழின தமிழீழ விடுதலைக்கு போராடிய தலைவன்தான் தமிழீழ தேசிய தலைவராக உருவெடுத்த மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

இலங்கை சிங்களவர்கள், தமிழீழ பகுதியை ஆக்கிரமிக்க துடிக்கும்போதெல்லாம் பின்னங்கால் பிடரியில் அடித்து விரட்டியவர். உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கண்டிராத, ராணுவ தரை படை, கடற்படை, விமான படைகளையும் தாண்டி 4 ஆவதாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய தன்னலமில்லா தலைவன். 

ஒழுக்கமும் சுய மரியாதையும் தனது இயக்கத்தில் அனைவருக்கும் கற்றுக்கொடுத்த மாவீரன். அப்படி பட்ட மாவீரனால்தான் தமிழினம் உலகறிய செய்யப்பட்டது. 

அந்த மாவீரன் பிரபாகரன் அவர்கள் தான் தமிழினத்திற்கே தலைவராக இருக்கிறார். அவர் பிறந்த நாளில் நாம் அவர் கண்ட கனவான தமிழீழம் மலரவும், அதற்காகன் பொதுவாக்கெடுப்பை ஐநா நடைமுறைப்படுத்த, செய்ய வேண்டிய வேலைகளுக்கு போராடி அழுத்தம் தரவும் நாம் வீதிக்கு வர வேண்டும்.

இளைஞர்களாகிய நாம் தமிழினம் காக்க தமிழீழத்திற்கு போராடாவிட்டால் வேறு யார் போராடுவார் என்ற தமிழ் உணர்வோடு நம் தமிழீழம் மலர உறுதியேற்ப்போம்.

தமிழன்புடன்.
மறுமலர்ச்சி மைக்கேல்

இன புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ மரணம். ஆழ்ந்த இரங்கல்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை 80 கல் தொலைவில் இருந்துகொண்டு அடிபணியாமல் கியூபா அரசை நிறுவியவர். கியூபா இன மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவர். 

இன விடுதலைக்கு வித்திட்டு புரட்சி செய்த புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ இன்று 26-11-2016 காலமானார். இது அடிமை பட்டு விடுதலைக்கு போராடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு கருப்பு நாள்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளில் காஸ்ட்ரோ மரணமடைந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல். ஆனால் என் தமிழினம் கொன்று புதை குழியில் போடப்படும்போது ஒரு அனுதாப வார்த்தை கூட சொல்லாதவர்தான். அதனால் அவர் மீலிருந்த மதிப்பு என்னிடத்தில் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கல்.

மைக்கேல் செல்வ குமார்