Monday, December 28, 2015

இணையத ஏகலவன் அண்ணன் சிவராமகிருஷ்ணனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!

கடல் கடந்து சென்று தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் உழைக்க சென்றிருந்தாலும், தான் ஏற்றுக் கொண்ட தலைவன் வைகோவின் அசைவுகள் அனைத்தையும் தோழர்களுடன் இணைந்து இயக்கம் வளர்ச்சி பெற அகிலத்துக்கு எடுத்து செல்லுகின்ற மகத்தான பணிகளை இணையத்தில் செவ்வனே செய்யும் மதிமுகவின் இணையதள அணி சகோதரர் சிவ ராமகிருஷ்ணன் அவர்கள், பல்லாண்டுகள் வாழ நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, December 20, 2015

தமிழின முதல்வர் வைகோ அழைப்பு - நிவாரணத்திற்கு நன்றி - நெகிழ்ந்த தொண்டன்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
 
இன்று 20-12-2015 இரவு உணவருந்த செல்ல நண்பருக்காக காத்திருந்த போது எனது அலைபேசிக்கு இரண்டு குறுந்தகவல் வந்தது, அன்பிற்குரிய அண்ணன் அருணகிரி அவர்களிடமிருந்து... ஏதுமறியாதவனாய் அங்கலாய்த்துக்கொண்டு மறுகணமே அழைத்தேன். அண்ணன் அவர்கள் மைக்கேலா, நீங்கதானே 68000 அனுப்பிருந்தீங்க என்று கேட்டார். ஆம் அண்ணா என்றேன். சரி என்று சொல்லிவிட்டு மைக்கேல் லைனில் என்று சொல்லி கொடுத்தார்.
 
என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, தனக்கென்று ஒரு தனி வழ்வு இல்லை என்று சொல்லி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்நாளும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், ஆகாயம் தேடாத ஆதாயம், தமிழின முதல்வர், உலக தமிழ் மக்கள் அனைவரும் பேச தவமிருக்கும் தலைவர் வைகோ அவர்கள், காந்த குரலில், இந்த எளியவனிடம்...
 
நான் வைகோ பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா என்றார்.
 
ஐயா நல்லா இருக்கிறேன். உங்களின் ஒரு வார்த்தைக்காக எவ்வளவு நாள் ஏங்கி க்கொண்டிருந்தேனோ இன்று அது நிறைவேறி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா என்றேன்.
 
வெளிநாட்டில் போய் இவ்வளவு கஸ்டப்பட்டு சம்பாதித்ததை அனுப்பிருக்கீங்க என்றார்.
 
ஆம் ஐயா, தமிழ்நாட்டில் ஒருபெரும் தலைவருக்கு அனுப்பினால், அது முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்று அதீத நம்பிக்கையால் நண்பர்களிடத்தில் பிரித்து உங்களுக்கு அனுப்பி தந்தோம் ஐயா. 
 
சரி. அந்த பணம் முறையாக பொருட்கள் வாங்கி மக்களிடத்தில் கொடுக்கப்படும். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.
 
சரி ஐயா மிக்க நன்றி ஐயா. எங்களுடைய கவலையெல்லாம் உங்களை பற்றிதான் ஐயா. நீங்கள் ஓய்வில்லாமல் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உங்களை நாகர்கோயிலில் சந்தித்த போது கூட உங்கள் உடல் நலனை பற்றி கேட்டேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள் ஐயா.
 
சரி. கன்னியாகுமரியில் மாவட்ட செயலாளர் போன உடன் அனைவருமே நம்மோடு வந்துவிட்டார்கள். வெற்றிவேலை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறோம்.
 
ஆம் ஐயா, அண்ணன் வெற்றிவேல் அவர்களுக்கு நான், தில்லை செல்வம் போன உடனே அழைத்தேன். தலைவருக்கு நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியிருந்தேன் ஐயா. ஆம் எனக்கு தெரியும் ஐயா அவர் மாவட்ட செயலாளர் என்று. நன்றி ஐயா.
 
சரி நன்றி.
 
இப்படியாக என்னுடைய உரையாடல் தலைவருடன் இருந்தது. 
 
எந்த இயக்கத்தில் உலகமே போற்றும் தலைவன் தன் கட்சி தொண்டனுக்கு அழைத்து பேசி நன்றி சொல்லுவார்கள். தொண்டனின் மனதை அறிந்த தலைவன் அல்லவா. பாசத்தை ஊட்டி உதிரத்தில் உணர்வேற்றும் தலைவன் அல்லவா. கழகத்தை ஒரு குடும்பமாக வார்ப்பித்து, அதை உணர்வுபூர்வமாக அனைவரையும் அரவணைத்து செயல்படுத்த, இந்த பூவுலகில் எங்கள் தலைவனை போல யாராவது உண்டா.
 
குஞ்சுகளுக்கு ஆபத்து வரும்போது, தாய் ஒடி வந்து காப்பாத்துவதை போல நீங்கள்தான் கழகத்தை காப்பாற்றுகிறீர்கள் என்று தொண்டர்களிடம் சொன்ன தலைவனின் கரங்களை வலுப்படுத்துவோம். 
 
இப்படிப்பட்ட தன்னலமில்லாத தலைவனின் பாசத்திற்காக கோடிக்கணக்கான என்னை போன்ற தொண்டர்கள் இருக்கின்றோம் என்பதை எதிரிகளுக்கு உணர்த்துவோம். வரும் காலம் வைகோவின் காலம் என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழின முதல்வர் வைகோவை தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க சபதம் ஏற்போம்.
 
விதைத்துக் கொண்டிருக்கிறோம், அறுவடைக்கு தயாராவோம் 2016 ல்... 
 
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, November 27, 2015

நவம்பர் 27 மாவீரர் நாளில் தமிழீழம் மலர உறுதியேற்போம்!

தமிழர் தாயகமான தமிழீழ பகுதிகளில் நடந்த போரில், சிங்கள கொலைவெறி ராணுவத்துடன் நடந்த போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழர்கள் தமிழீழத்தில் மாவீரர்கள் தினம் துக்கதினமாக அனுசரிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. அந்த நாள்தான் மாவீரர் தினமாக இன்றளவும் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ மண்ணை காக்க தனது உயிரை கொடையளித்த மாவீரர்கள் அனைவருக்கும் நமது இதய அஞ்சலியை காணிக்கையாக்குவோம். அவர்கள் தமிழீழ மண்ணில் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் சிந்திய குருதியால் தமிழர் வாழ்வு உயர் நிலையை அடையும் நாள் தூரத்தில் இல்லை. மாவீரர்களின் கனவான தமிழீழத்தை அடையவே நமது இலட்சியமாக கொள்வோம்.

"தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல் 

Thursday, November 26, 2015

தமிழர்களை பாரினில் தலை நிமிர செய்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்து!

இலங்கை தீவில் இரண்டு இனங்கள் வாழ்கின்றன. ஒன்று தமிழினம், மற்றொன்று சிங்களம், தமிழின பகுதி தமிழீழ நாடாகும். அந்த தமிழீழத்தில்தான் சிங்களவர்களின் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்று தமிழர்களை உலகறிய செய்தவர்தான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கொண்டிராத முப்படைகளான, ராணுவ படை யான விடுதலைபுலிகள், கடற்படையான கடற்புலிகள், வான்படையான வான்புலிகளோடு நான்காவது படையாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய புகழ் மிக்க தலைவன் பிரபாகரன்.

சிங்கள தேசத்திலிருந்து அடிமைப்பட்டிருந்த மக்களை விடுவித்து தலை நிமிர்ந்து வாழ வைத்த தெய்வம்தான் பிரபாகரன் என்று அனைத்துலக தமிழ் மக்களாலும் போற்றப்படுபவர். தமிழினத்திற்கான நாட்டை சிங்களவர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி, கொடுமையான சித்திரவதை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்த வேளையில் ஒரு கை துப்பாக்கியுடன் தனது சகாக்களுடன் வன்னிக்காட்டிற்கு சென்று சிங்கள ராணுவத்திற்கு எதிராக போராட தொடங்கியவர்தான் பிரபாகரன் அவர்கள். பின்னாளில் சகாக்கள் கொண்ட அணியை படையாக பெருக்கினார். படைகளுக்கு பெயரிட்டார். 

உலகிலே எந்த இயக்கமும் பெற்றிராத முப்படைகளை அமைத்து தானே கண்காணித்தார். உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றார். தமிழீழ மக்களுக்கான தனி தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அரசியல், நிதிதுறை, நீதி துறை, போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, சிறார் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் ஏராளமான ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி தனி நாடாக செயல் வடிவம் கொடுத்து இயக்கி காட்டி உஅலகையே திரும்பி பர்க்க வைத்த மாவீரன் பிரபாகரன். 

தமிழீழத்திற்கான போர்க்கருவிகளை ராணுவமே தயாரிக்கவும், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் வீரர்களை திறமையானவர்களாக உருவாக்கினார். அனைத்து போர் படைகளுக்கும் தனி சீருடை மற்றும் பயிற்ச்சிகள் வழங்கினார். படைகளுக்கு தமிழிலே பயிற்ச்சிகளை வழங்கி தமிழை பேணி காத்தார். 

தமிழீழத்தில் யார் வேண்டுமானாலும் எந்த நடுநிசை நேரத்திலும் பாதுகாப்பாக சென்று வர முடியும் என்ற நிலையை கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினார். மது இல்லா நாடாக கட்டமைத்திருந்தார். 12 கோடி மக்களுக்கான தமிழர் தேசமாக தமிழீழத்தை கட்டமைத்தார்.

கலை இலக்கியம், பொறியியல் போன்ற அனைத்திலும் தமிழீழ மக்கள் சிறந்து விளங்கவேண்டுமென்று அனைத்து துறைகளையும் மேம்படுத்தினார். தமிழீழ நாடு அமைதியின் உருவாக உருவெடுத்து தனி நாடாக உருவாகும் அனைத்து சாத்திய கூறுகளையும் உருவாக்கினார் பிரபாகரன். 

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ புலிக்கொடி பறக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் பொறுக்க முடியாத சிங்கள படை பிரபாகரனின் விடுதலைபுலிகளோடு தனியாக போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து, உலக நாடுகளை துணைக்கு அழைத்து தமிழர்களை படுகொலை செய்து, திட்டமிட்டு சிறார்களையும், சிசுக்களையும் கொன்று தமிழினத்தையே அழித்தது. இது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையாகும். தமிழீழ ராணுவமான விடுதலைப்புலிகளான தமிழீழ தமிழர்கள் போர்க்களத்தில் வீழ்ந்திருந்தாலும், அவர்களுடைய போராட்ட குணம் சற்றும் குறையாமல் இன்னும் வேகமாக கூடுதலாகவே இருக்கிறது. போராட்ட வடிவம் மட்டுமே மாறி இருந்தாலும், இலட்சியத்தில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

உலக தமிழர்களை உலகமே போற்றும் அளவிற்கு தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிய மாவீரன் பிரபாகரன் அவர்களின் இன்றைய பிறந்த நாளில் நேரடியாக வாழ்த்து சொல்ல முடியாமல் போனாலும், தமிழர்களாகிய நாம் அனைவரும் பிரபாகரன் பிறந்த நாளை "தமிழர்களின் விடுதலை நாளாக" கொண்டாடுவோம். ஒற்றுமையுடனும், தமிழீழ மண்ணை வென்றெடுக்கவும் இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழீழம் மலரும் நாளில் தமிழர்கள் ஐநாவில் பதவிகளில் அலங்கரிப்பார்கள் என்பது சாத்தியமாகும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். தமிழீழ புலிக்கொடி ஐநாவில் பறக்கும் நாள் வெகு விரைவில் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். "தமிழீழ குடியரசை" வென்றெடுப்போம்.

"தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, November 22, 2015

சிங்கப்பூரின் சீவக சிந்தாமணி, துவார் சுப்பையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

திராவிட இயக்க கொள்கைகளை அடி மாறாமல் எடுத்துரைக்கும் வரலாற்று பெட்டகம் அண்ணன் துவார் சுப்பையா அவர்கள், இன்று தனது பிறந்த நாளிலும், கழகத்தின் மீதும், உலக தமிழர்கள் மீதும் பற்றுள்ளவர்.
 
எங்கெல்லாம் தமிழர்கள் தாக்கபடுகிறார்களோ, தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரோ அவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவிப்பவர்.
 
அவ்வாறு தமிழ், தமிழர்கள், தமிழினத்தின் மீது காதல் கொண்ட சகோதரர் துவார் பொன் சுப்பையா அவர்கள் கடந்த 3 நாட்களாக தமிழீழ தமிழர்களுக்கான மனித உரிமை மீறல்களுக்கான தலைவர் வைகோ அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்கள். தாய் தமிழக தலைவர்களுடனும், தமிழீழ தலைவர்களுடனும் பங்குபெற்று வருவது சிறப்பாகும்.
 
அவருடைய தமிழ் உணர்வும், கழகத்தின் பால் காதலும் போற்றுதலுக்குரியது. அண்ணனின் கடமைகள் கச்சிதமாக நிறைவேற புதிய பிறந்த நாளை தமிழால் மக்களுக்கான தொண்டாற்ற செயல்படுத்துவதற்காக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, November 21, 2015

மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களை அடித்து துன்புறுத்திய அடிமை ஆட்சியின் காவலாளிகள்!

நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கொட்டும் மழையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை, அடிமை ஆட்சியின் காவல்துறை அடித்து துன்புறுத்தியது.
 
மக்களை காக்கவேண்டிய காவல்துறை மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணமோ, குடியிருக்க வேறு இடம் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவதை விட்டுவிட்டு போராடுகிற மக்களை துன்புறுத்துவது வேதனைக்குரியது.
 
மழை வெள்ளத்தால் குடும்பங்களில் உள்ள குழந்தைகள், வயது முதியவர்கள் வேறு இடத்திற்கு நகர முடியாமலும், அதே மழை வெள்ளத்தால் தொற்றுநோய்கள் பரவும் சூழ்நிலை இருப்பதாலும் கவலைபடும் குடும்பங்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதை ஆறுதல் கூறி நிவாரணம் வழங்காமல் அடித்து துன்புறுத்தியிருக்கிறது. மக்களே வேதனையில் இருக்கும்போது அவர்களை ஜெயலலிதாவின் அடிமை ஆட்சியின் காவல்துறையினர் தாக்கியிருப்பது அரசின் அராஜக போக்கையே காட்டுகிறது.
 
இந்த காட்டுமிராண்டி அரசின் காவல்துறைய நான் வன்மையாக கண்டிப்பதோடு, நெல்லை சமாதானபுரம் மக்களுக்கு தங்குமிடமும், உணவும், கழிப்பிடம் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகளையும், மருத்துவ வசதிகள் போன்ற அன்றாட தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறவேற்றி பொதுமக்களின் கண்ணீரை துடைக்க பாடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
 
மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, November 19, 2015

ஈழப்போரில் சித்ரவதை கூடங்களில் தமிழர்களை கொடுமை படுத்தபட்டதற்கு கண்டனம்!

2009 ஆம் இலங்கை தீவில் தமிழீழ பகுதியில் நடந்த போரில் தமிழீழ மக்கள் மீது உலக நாடுகள் தடை செய்த பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசியும், பாலியல் வன்முறைகள், குழந்தைகளை சுட்டு கொல்லுதல், பெண்களின் வயிறை கிழித்து சிசுக்களை அகற்றுதல் போன்ற கொடுமைகளை செய்து தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலைகளை மேற்க்கொண்டனர் சிங்கள ராணுவத்தினர். அது இன்றளவும் தொடர்கிறது உலகறிந்ததே!

மேலும், உக்கிரமாக போர் நடந்த அந்த காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்ட விரோதமாக ரகசிய சித்ரவதை கூடங்கள் அமைத்து அங்கு தமிழர்களை அடைத்து வைத்து இலங்கை சிங்கள ராணுவத்தினர் சித்திரவதை செய்துள்ளது 3 பேர் அடங்கிய ஐ.நா. அமைத்த குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று 18-11-2015 வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தும் ஐநா குழுவில் இடம்பெற்றுள்ள பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகியோர் மேலும் இது போன்ற ரகசிய சித்திரவதை கூடங்கள் இருக்க கூடும் எனவும் சொல்கின்றனர். திரட்டப்பட்ட இந்த ஆவணங்களை அறிக்கையாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்க உள்ள இந்த குழுவினர் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதற்கான ஆதாரத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையம் இப்போதாவது தமிழர்களின் நிலையை உணர்ந்து உள்நாட்டு விசாரணை என்ற ஒரு விசாரணையை தவிர்த்து, சர்வதேச விசாரணையை மேற்க்கொள்ள அனைத்து நாடுகளிடத்தும் எடுத்து கூறி அனைத்து நாடுகளின் உதவியுடன் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடவேன்டும். அந்த சர்வதேச விசாரணை தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்க வேண்டும். விசாரணை அனைத்துலக நாடுகள் கண்காணிப்பில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கிய சிங்கள அரசை சர்வதேச கூண்டில் ஏற்றுவதோடு அதற்கு காரணமாயிருந்த மகிந்த ராஜபக்ஷேவை சர்வதேச நிதிமன்றத்தில் தூக்கிலிட வேண்டுமெனவும், போர் நடந்த போது தமிழர்களை அழிக்க ஆயுதங்களையும், பயிர்ச்சியும், துணை நின்றும் போரிட்ட இந்திய காங்கிரஸ் அரசும், தமிழர்கள் கூடவே இருந்து துரோகம் செய்த தமிழ்நாட்டின் திமுக அரசும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, November 18, 2015

கடலூரை கண்டமாக்கிய வெள்ளப்பெருக்கு! தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதபடுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்!

கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது என்றே சொல்லலாம். தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கால் அனைத்து சாலை வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வெள்ளப்பெருக்கால் மனித உயிர்கள் வெளியில் செல்ல முடியாமலும், மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டும் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் வீடுகளை மழை நீர் அடித்து சென்றுள்ளதால் உணவிற்கும், உடை இல்லாமலும், தங்க வசதிகளற்றும் அவதிப்படுகின்றனர்.

இந்த இயற்கை சீற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து நாசமாயின. ரயில் தண்டவாளங்கள் மண்ணரிப்பால் தொங்கி காணப்படுகின்றன. வீடுகளில் உள்ள கால்நடைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துவிட்டன.

பெருவெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டும், ஆற்றுப்பாலங்கள் பேருந்துகள் செல்லமுடியாதவாறு அடித்து செல்லப்பட்டும் உள்ளன. கடலூர் மாவட்டமே மழை நீரால் பாதிப்படைந்துள்ளது வெளிப்படுகிறது.

எனவே கடலூர் மாவட்டை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். மருத்துவ வசதியை தமிழக அரசு முழுமையாக எந்தவித தொய்வில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்ப்படுத்திகொடுத்து உணவிற்கு வழிவகை செய்திட வேண்டும். பாதிப்படைந்த விளை நிலங்களான, நெல், கரும்பு, வாழை, கிளங்கு மற்றும் ஏனைய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, விலங்கினங்களை வளர்த்து அதன் மூலம் தன் வாழ்வை வாந்த்துகொண்டிருந்த குடும்பங்கள் வளர்த்த கால்நடைகளை இழந்து தவிக்கிறார்கள். வாழ வழியில்லாமல் அல்லலுறுகிறார்கள். எனவே இறந்த ஆடு, மாடு, கோழி போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்திட வேண்டுமென்றும் வேண்டுகிறேன்.

பல அரசியல் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தை பார்வையிட்டு, வைகோ போன்ற தலைவர்கள் முகாமிட்டு உணவு வழங்கி மக்களை பசியாற்றினார்கள். இப்போது தமிழக அரசும் நிவாரண பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் பணிகளை துரிதப்படுத்தி, அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க வழிசெய்திடவேண்டும். மேலும் படிப்படியாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்து தண்ணீரும் வெளியேறியதும், அவர்களது வீடுகளை சரி செய்யவும், வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு வீடுகளை தமிழக அரசே ஏற்று கட்டி கொடுத்து மக்களை காக்க வேண்டுமெனவும், வரும் காலங்களில் இது போன்ற பெரு மழையிலிருந்து மக்களை காக்க நீர்நிலைகள், ஆறுகள், குளங்களை தூர்வாரியும், புதிய அணைகளை அமைத்தும் நீரை சேகரித்து வளமாக்கவும் தமிழக அரசு திட்டங்களை தீட்டி மக்கள் நலனில் அக்கரை செலுத்தி நல்லாட்சி செய்யவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, November 10, 2015

தீப ஒளி திரு நாள் நல்வாழ்த்துக்கள் 2015!

திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

ஒவ்வொருத்தர் மனதிலும் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற தீய குணங்களான இருளை தீபத்தால் எரித்து ஒளி போன்ற நற்குணத்தை அடையவே தீப ஒளியேற்றியும், பட்டாசுகளை வெடித்தும் தீப ஓளி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

எனவே நாம் அனைவரும் குடும்பமாக தீப ஒளியேற்றி நற்சிந்தனைய பெற தீபம் ஏற்றி தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, November 7, 2015

தமிழ் மக்களுக்காக போராடும் வைகோவின் வீரத்தாய்க்கு கண்ணீர் அஞ்சலி!

மாரி போல வாரி இறைத்து வந்தவருக்கெல்லாம் வயிறாற்றி பாதுகாத்த அன்னை மாரியம்மாள். பார் போற்றும் வீர திருமகன் வைகோவை பத்து மாதம் பாதுகாத்து பெற்றெடுத்த குலமகள். 

ஆசிவாங்க வருபருக்கெல்லாம் தமிழ் பண்பாடு மாறா போற்றுதல். எறும்புகளுக்கும் ஊறு விளைவிக்காமல் உணவிட்ட கருணை தாய்.


தமிழீழத்தை நேசித்த உலக தமிழினம் போற்றும் தாய். தமிழீழ போராளிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, சோறு போட்டு பாசத்தை பொழிந்த புன்னகையரசி. 

போலீசார் தன் வீட்டிலிருந்த தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் படத்தை அகற்ற முயன்ற போது அந்த படத்தை அகற்றாதீர்கள். அதுவும் என் மகன் தான் என வீரத்தோடு போர்ப்பணி செய்த வீர மங்கை. 

விடுதலை புலிகள் கலிங்கப்பட்டி வீட்டில் தங்கி இருந்த காலங்களில் இரண்டு கை இரண்டு கால்கள் இல்லாதவர்களை கூட மருந்திட்டு காப்பாற்றி வாழவைத்து வழியனுப்பி வைத்த வீரத்தாய்.

தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும் மதுவிற்கு அடிமையாகிவிட கூடாது என மதுவிற்கெதிராக தனி ஆளாய் களத்தில் இறங்கி பெரும் போராட்டம் நடத்திய போர்ப்படை தலைவி. 

தமிழீழ மக்களுக்காகவும், தாய் தமிழக மக்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். தன் மகன் சிறையில் வாடியபோது கலங்காதே மகனே! நீ கொலையா செய்துவிட்டாய்! உன்னை எத்தனை நாள்தான் சிறையில் அடைத்து வைக்க முடியும் என்று ஆறுதல் சொன்ன தாய். 

தன் மகன் சிறை சென்றால் மனவருத்தபடும் தாய்க்குலங்களுக்கு மத்தியில், மகிழ்ச்சியடையும் புதுமைப்பெண். சிறை வாசத்தின் கொடுமைக்காக அல்ல. தன் மகன் அப்படியாவது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டுமே என்றெண்ணிய தாயுள்ளம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மகனை பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, வளர்த்து, படிக்க வைத்து, பட்டங்கள் பல வாங்க செய்து, தமிழ் மக்களை காப்பதற்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக, தமிழினம் தழைக்க போரிடுவதற்காக, தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்க போர்ப்படையை தயார் செய்ய, தமிழ் மக்களுக்காகவே சேவையாற்ற தன் மகன் வைகோவை அற்ப்பணம் செய்த அந்த வீரமிக்க தாயார் மாரியம்மாள் அவர்கள் நேசித்த தமிழீழத்தை வென்றெடுக்கவும், முழு மதுவிலக்கு அமல்படுத்தும் வரை போராடி வெற்றி பெறவும், தமிழின முதல்வர் வைகோ அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்கவும், அன்னை மரியம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, November 2, 2015

கொடநாடு செல்வதை தடுத்து நந்தினியை வீட்டுச்சிறை வைத்த காவல்துறைக்கு கண்டனம்!

கடந்த சனிக்கிழமையன்று இரவு தொடர்ந்து பூரண மது ஒழிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தன் தந்தையுடன் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர். 

டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. 

தமிழகத்தில் ஜனநாயகம் கெட்டு போய்விட்டதா. பேச்சுரிமை இல்லையா. ஆட்களை கொல்லும் மதுவை ஒழிக்க போராடுவது எப்படி குற்றமானது. எந்த சட்டத்தில் ஜனநாயக போராட்டம் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது? ஜெயாவின் காவல்துறை ஏன் மக்களை மிரட்டி அடாவடி செய்கிறது. இதை நான் வன்மையாக கண்டிப்பதோடு, சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை வீட்டு சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

தமிழ் அருண் உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!

மாணவ பருவத்திலே பொது வாழ்வில் தன்னை இணைத்துக்கொண்ட திராவிட கொளகை வேங்கை தம்பி தமிழ் அருண். மதிமுகவின் பல தன்னாலான போராட்டங்களை முன்னெடுத்தவர். தங்கள் ஊரில் பேருந்து வசதி வேண்டி மனு கொடுத்து மாவட்ட ஆட்சியருக்கு கெடு விதித்து வந்தவர். கஸ்டங்களை அனுபவித்தாலும், எதிர்பாராமல் பழகும் எண்ணமுடையவர். 

தம்பியின் கடின காலங்கள் விரைவில் நீங்கும். குடும்பத்தின் சுமையுடன் அரியலூர் மாணவர் மன்ற அமைப்பாளராகவும் கழகத்தையும் தாங்குகின்றார். நல்லதே நடக்கும். இருதயத்தின் ஆளத்திலிருந்து செஞ்சார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, October 30, 2015

ஊருக்கு ஊரு சாராயம் பாடல் பாடிய கோவன் கைதுக்கு கடும் கண்டனம்!

ஊருக்கு ஊரு சாராயம், மூடு டாஸ்மாக் மூடு பாடல் பாடிய, மக்கள் கலை இலக்கிய கழகத்தின், மைய கலைக்குழுவை சார்ந்த கோவன் அவர்களை, திருச்சியில் நள்ளிரவில் 2 மணி அளவில் சென்னை குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 124ஏ தேசதுரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்குள்ளார் என்பதை தெரிவிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகாரம் சார்பாக ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் பாடி மக்களுக்கு மதுவின் கொடுமைகளை விழிப்புணர்வு பாடலாக வெளியிட்டார்கள். இந்த பாடலில், ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம், ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில் உல்லாசம், மூடு டாஸ்மாக்கை மூடு,   என்ற இரண்டு பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதற்காக மக்கள் பாடகர் தோழர்.கோவன் அவர்களை தமிழக அதிமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் பாடிய பாடல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனனாயகத்தை அடியோடு அழிக்கின்ற செயல்களில் ஜெயா அரசு ஈடுபட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மக்களின் மீது ஏதேச்சாரமாக தமிழக அரசு நடந்துகொள்கிறது கண்டிக்கதக்கது. சொந்த மாநில மக்களையே கொடுமைபடுத்தும் நிலமை கேவலமான செயலாகும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் இனியும் ஜெயா அரசு ஈடுபடகூடாது எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்