Monday, November 2, 2015

கொடநாடு செல்வதை தடுத்து நந்தினியை வீட்டுச்சிறை வைத்த காவல்துறைக்கு கண்டனம்!

கடந்த சனிக்கிழமையன்று இரவு தொடர்ந்து பூரண மது ஒழிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தன் தந்தையுடன் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர். 

டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. 

தமிழகத்தில் ஜனநாயகம் கெட்டு போய்விட்டதா. பேச்சுரிமை இல்லையா. ஆட்களை கொல்லும் மதுவை ஒழிக்க போராடுவது எப்படி குற்றமானது. எந்த சட்டத்தில் ஜனநாயக போராட்டம் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது? ஜெயாவின் காவல்துறை ஏன் மக்களை மிரட்டி அடாவடி செய்கிறது. இதை நான் வன்மையாக கண்டிப்பதோடு, சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை வீட்டு சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment