திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
ஒவ்வொருத்தர் மனதிலும் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற தீய குணங்களான இருளை தீபத்தால் எரித்து ஒளி போன்ற நற்குணத்தை அடையவே தீப ஒளியேற்றியும், பட்டாசுகளை வெடித்தும் தீப ஓளி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
எனவே நாம் அனைவரும் குடும்பமாக தீப ஒளியேற்றி நற்சிந்தனைய பெற தீபம் ஏற்றி தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment