2009 ஆம் இலங்கை தீவில் தமிழீழ பகுதியில் நடந்த போரில் தமிழீழ மக்கள் மீது உலக நாடுகள் தடை செய்த பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசியும், பாலியல் வன்முறைகள், குழந்தைகளை சுட்டு கொல்லுதல், பெண்களின் வயிறை கிழித்து சிசுக்களை அகற்றுதல் போன்ற கொடுமைகளை செய்து தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலைகளை மேற்க்கொண்டனர் சிங்கள ராணுவத்தினர். அது இன்றளவும் தொடர்கிறது உலகறிந்ததே!
மேலும், உக்கிரமாக போர் நடந்த அந்த காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்ட விரோதமாக ரகசிய சித்ரவதை கூடங்கள் அமைத்து அங்கு தமிழர்களை அடைத்து வைத்து இலங்கை சிங்கள ராணுவத்தினர் சித்திரவதை செய்துள்ளது 3 பேர் அடங்கிய ஐ.நா. அமைத்த குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று 18-11-2015 வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தும் ஐநா குழுவில் இடம்பெற்றுள்ள பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகியோர் மேலும் இது போன்ற ரகசிய சித்திரவதை கூடங்கள் இருக்க கூடும் எனவும் சொல்கின்றனர். திரட்டப்பட்ட இந்த ஆவணங்களை அறிக்கையாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்க உள்ள இந்த குழுவினர் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதற்கான ஆதாரத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையம் இப்போதாவது தமிழர்களின் நிலையை உணர்ந்து உள்நாட்டு விசாரணை என்ற ஒரு விசாரணையை தவிர்த்து, சர்வதேச விசாரணையை மேற்க்கொள்ள அனைத்து நாடுகளிடத்தும் எடுத்து கூறி அனைத்து நாடுகளின் உதவியுடன் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடவேன்டும். அந்த சர்வதேச விசாரணை தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்க வேண்டும். விசாரணை அனைத்துலக நாடுகள் கண்காணிப்பில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கிய சிங்கள அரசை சர்வதேச கூண்டில் ஏற்றுவதோடு அதற்கு காரணமாயிருந்த மகிந்த ராஜபக்ஷேவை சர்வதேச நிதிமன்றத்தில் தூக்கிலிட வேண்டுமெனவும், போர் நடந்த போது தமிழர்களை அழிக்க ஆயுதங்களையும், பயிர்ச்சியும், துணை நின்றும் போரிட்ட இந்திய காங்கிரஸ் அரசும், தமிழர்கள் கூடவே இருந்து துரோகம் செய்த தமிழ்நாட்டின் திமுக அரசும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment