Saturday, February 28, 2015

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிறிஸ்தவ ஊழிய கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவர், அனுமதியில்லாமல் இயங்கும் தீங்கு விளைவிக்கும் பன்றி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிராமத்தின், குட்டிமாந்தட்டு மடை பகுதியில், சடையால் புதூர் செல்லும் சாலையில், ஒரு கிறிஸ்தவர் தனது சொந்தமான நிலத்தில், சிறிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். தனது வீட்டின் மறு பகுதியில் வெளிபுறத்தில் சிறிய தொழுகை இடத்தையும் உருவாக்கி வயோதிபர்களுக்காக, குடும்ப வறுமையில் கக்ஷ்டபடுபவர்களுக்காக, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஜெபித்து வருகிறார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அதை விரும்பும் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஊழியத்தை செய்து வரும் இவர் மக்கள் அதிகமாக வருவதால் சிறிய அளவிலான பெந்தேகோஸ்தே சபை போல விரிவு படுத்துகின்ற நிலையில், குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தமிழக காவல்துறை உதவியுடன் அந்த தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று, இப்படிபட்ட ஊழியங்களின் கட்டடங்களுக்கு தாங்கள் அனுமதி வாங்கவில்லையென்று கூறி அதை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் சார்ந்திருக்கும் பாஜக வின் கொள்கைகளை பறைசாற்றுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிபட்ட கிறிஸ்தவ ஊழியங்களை நடத்த கட்டடங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அதை தடுக்கும் பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள், எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக, பலமுறை பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் கடந்த ஒரு வருட காலமாக கொடுப்பைக்குழி ஊரின் ஒரு பகுதியில் இயங்கிவரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பன்றி பண்ணைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? பலமுறை பொதுமக்கள் மனுகொடுத்தும் பொதுமக்களின் மனுக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வது ஏன்? பன்றி பண்ணையை பற்றி பஞ்சாயத்து தலைவர் வாய் திறக்காமல் மெளனமாக உலாவருவது ஏன்? பன்றி பண்ணை முதலாளிகளிடம் விசுவாசமாக இருக்கிறாரா? அவரோடு சேர்ந்து அவரின் கூட்டாளிகளையும் பன்றி பண்ணைக்கு எதிராக போராட விடாமல் தடுக்கிறாரா?

ஊர் நன்மைக்காக போராட்டத்தில் முனைப்போடு பணியாற்றுகின்ற இளைஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்த பன்றி பண்ணை முதலாளிகளை கண்டித்து வழக்கை திரும்ப பெற செய்யாதது ஏன்? சொந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊரிலே நிகழும் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சொந்த ஊர் மக்களையே காப்பாற்ற முடியாத பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி குருந்தன்கோடு பஞ்சாயத்து முழுவதுமுள்ள பகுதி மக்களை எப்படி காப்பற்றுவார்? சிறிய பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாத தலைவரின் தகுதிதான் என்ன?

இவ்வளவு கண்டனங்களுக்கு பிறகும் அதிகாரிகளையும் தன் வசமாக்கி பன்றி பண்ணையை அகற்றாமலிருக்கும் திரு.வைகுண்டமணி அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தமிழக அரசு அவரது தலைவர் பதவியை பறிக்க வேண்டுமென்று முக நூல் வாயிலாக் வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் இவர் போன்ற தலைவர்களுக்கு மக்கள் பணம் பாராமல் பொதுமக்கள் நலம் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதாவது இவரை போன்றவர்களுக்கு புத்தி தெளிகிறதா என பார்ப்போம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்.....

மறுமலர்ச்சி மைக்கேல்.

Wednesday, February 25, 2015

ஜெசிகா-வின் தமிழின உணர்வு!

தமிழீழ சிறுமி ஜெசிகா மற்றும் ஜெசிகா-வின் தகப்பனாரின் தமிழின உணர்வு வெளிப்பட்டிருக்கின்றது, இந்த இன உணர்வு தமிழனை தவிர, தமிழ் இனத்தை தவிர வேறு எந்த இனத்துக்கும் கிடையாது. தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து சொல்லுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

அன்னை தெரசாவை கொச்சைபடுத்திய மோகன் பகவத்-க்கு கடுங்கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பகவத்தின் இந்த பேச்சு கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டார். இப்படிப்பட்ட சேவை செய்தவரை மோகன் பகவத் அறியாதிருப்பது துரதிஸ்டவசமானது. அவரின் சேவைக்கு மோகன் பகவத் இப்படியாக அவதூறு கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது கூட்டங்களில் மக்களின் மனதை வென்றவர்களை இனிமேலாவது மோகன் பகவத் போன்றவர்கள் நிறுத்து கொண்டு மக்கள் தொண்டாற்றவேண்டுமென கேட்டு கொள்கிறேன். இப்படி பேசுபவர்களை மத்திய பாஜக அரசு கண்டிக்காமலிருப்பது இந்து மத கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பது போல இருக்கிறது. எனவே மத்திய அரசானது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, February 21, 2015

உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள் !

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு போற்றி பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல, அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். தாய் மொழிதான் மனித வாழ்க்க முறையை கலாச்சாரத்தை கற்றுகொடுக்கிறது. ஓவ்வொரு மனிதனும் மிகப்பெரிய உலகம் போற்றும் தலைவர்களாக வலம் வருகின்றார்களே அவர்களெல்லாரும் தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து பணியாற்றினார்கள். தாய் மொழியாம் தமிழை போற்றிய திருவள்ளுவர் உலக பொதுமறையாம் திருக்குறளை நமக்கு அருளி நம் தாய் உணர்வை தீவிரபடுத்தியிருக்கின்றார். எனவே தம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை மதித்து, தமிழை உலகறிய செய்ய உறுதி ஏற்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, February 20, 2015

தமிழீழத்து ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி!

தமிழீழத்து தங்கை ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.வெற்றி பெற்ற முழு தொகையையும், ஒரு பகுதி சென்னையில் உள்ள குழந்தை காப்பகத்துக்கும், மீதமுள்ள முழுவதையும் தமிழீழத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தைரியமும், கொடையுள்ளமும் யாருக்கு உண்டு தமிழனை தவிர.... 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, February 15, 2015

தமிழக அரசே! பன்றி பண்ணையை அகற்றாத பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்!

குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், பொதுமக்கள் தினசரி உபயோகிக்கும் ஒட்டாங்குளத்தின் கரையில் அரசு அனுமதியில்லாமல், சட்டவிரோதமாக தனியாரின் பன்றி பண்ணை இயங்கி வருகிறது. இதை பல முறை பஞ்சாயத்து தலைவரிடம் எடுத்து கூறியும், செவிடன் காதில் சங்கு ஊதியது போல பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி நடந்துகொள்கிறார். 

பஞ்சாயத்து தலைவரின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் காலம் தாமதிக்காமல் பண்ணையை அகற்றும்படியும் வலியுறுத்துகிறேன்.எனவே பன்றி பண்ணையால் வரும் நோய்களை தடுக்க நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

பன்றி காய்ச்சலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல், சளி வந்தாலே எல்லோரும் பயந்தார்கள். அரசு அறிவித்த ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசை காத்திருந்தது. பொது இடங்களுக்கு முகமூடி அணியாமல் வரப் பலரும் பயந்தார்கள். அன்று அப்படி மக்களைப் பயமுறுத்திய காய்ச்சல், ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டப்பட்ட பன்றி காய்ச்சல்தான்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தோன்றிய அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள்.
காய்ச்சல் அசட்டை
இன்றைக்கோ ஆந்திரா, தெலங்கானா எனத் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிந்தும்கூட, மக்களிடையே பெரிய அளவில் எச்சரிக்கை விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
இதைச் சாதாரணப் ஃபுளு காய்ச்சல் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சல் வந்தால் டாமி ஃபுளு மாத்திரை சாப்பிட்டால் போதும், அதேநேரம் காய்ச்சல் வந்தால் மருந்துக் கடைக்குச் சென்று தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் பொது மருத்துவத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதெல்லாமே முன்னெச்சரிக்கைகள்தான், வேறு எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் தேவை?
கூடுதல் கவனம் தேவை
"பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் வெளியேறும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், கைகுலுக்குகிறோம். ஏற்கெனவே, சிலர் பயன்படுத்திய சில பொருட்களை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதனால்தான் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவச் சொல்கிறோம். முகமூடி அணியச் சொல்கிறோம். இது பன்றி காய்ச்சலுக்கு மட்டுமில்லை. பொதுவாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைதான்" என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஆர்.ஜெயந்தி.
பன்றி காய்ச்சலுக்குச் சொல்லப்படும் அறிகுறிகள் பொதுவாகச் சொல்லப்படும் காய்ச்சல் அறிகுறிகளைப் போன்றவைதான். அதனால், எந்தக் காய்ச்சல் வந்தாலும் நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு வேளை பன்றி காய்ச்சலாக இருந்து நாமே மருந்து வாங்கிச் சாப்பிட்டு அசட்டையாக விட்டுவிட்டால், நோய் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப் பரிசோதனை
இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற எல்லாமே பொதுவான அறிகுறிகள் தானே? அப்படியானால் எந்தெந்த அறிகுறிகளைக் கண்டு பன்றி காய்ச்சலுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? "தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணக் காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான்.
எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரைப் பார்க்கும்போது ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதன்மூலம் பன்றி காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்" என்கிறார் ஆர். ஜெயந்தி.
குழந்தைகள் கவனம்
பெரியவர்கள்கூட எச்சரிக்கையுடன் இருந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களுக்குச் சொல்லப்படும் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த வகை காய்ச்சல், சளியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்க, இது உதவும் என்கிறார்கள். 

மறுமலர்ச்சி மைக்கேல்.

Tuesday, February 10, 2015

ஆம் ஆத்மி கட்சி திரு.கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்து.

பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தினமான இன்று, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று கெஜ்ரிவால் தலமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் டெல்லி மக்கள் திரு.மோடி யின் பாரதிய ஜனதா கட்சியை ஓட விரட்டியுள்ளார்கள். பாஜக எதிர்கட்சி தகுதி கூட இல்லாமல் கூனி குறுகி போயுள்ளது. 

மக்கள் மோடியின் ஆட்சியை புறந்தள்ள தொடங்கியுள்ள நிலையில் டெல்லி தேர்தலிலும் பாஜக மிகவும் மோசமான படுதோல்வியை தழுவி மதசார்பின்மையை எடுத்து காட்டியுள்ளது, இந்து பாசிசம் இதன் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தால் சுத்தமாக துடைத்தெறியப்பட்டுள்ளது.

டெல்லி மக்களின் இந்த முடிவால் மத்திய பாரதிய ஜனதா வாயடைத்துள்ள நிலையில், நெருக்கடி மிகுந்ததாகவே பாஜக வுக்கு அமைந்துள்ளது. இனிமேல் தமிழர்கள் மற்றும் பிற மொழி பேசும் அனைத்து மாநிலத்திலும் பாஜக தூக்கி எறியப்படும்.

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் திரு.கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பதவியேற்றபின் ஊழலற்ற நேர்மையான திறமையான மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்து நல்லாட்சி நடத்தவேண்டுமென்று விரும்பி கேட்டு கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Monday, February 9, 2015

கொடுப்பைக்குழி சிறுவன் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதி...

குமரிமாவட்டம் குருந்தன்கோடு பஞ்சாயத்துகுட்பட்ட கொடுப்பைக்குழியில் அமைந்துள்ள பன்றி பண்ணையால் அப்பகுதி சிறுவன் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்...

கொடுப்பைக்குழியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் பல போராட்டங்களையும் மீறி செயல்பட்டு வரும் பன்றி பண்ணையால் அப்பகுதியில் பலர் பலவித தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் முதலாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுவன் I.நிதன்சக்தி கடந்த பல நாட்களாக காய்ச்சலால் பாதிக்கபட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டான். அவனுக்கு சிகிட்சையளித்த மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு நிமோனியா என்னும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனார்.

மேலும் கொடுப்பைக்குழியில் பன்றி பண்ணை இருப்பதை கேள்விபட்ட மருத்துவர் இந்நோய் வருவதற்க்கு பன்றி பண்ணையிலிருந்து பரவும் கிருமிகளும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர் அச்சிறுவனின் பெற்றோரிடம் அப்பகுதியில் அமைந்துள்ள பன்றி பண்ணையை மாற்றவில்லையென்றால் அப்பகுதி மக்கள் அனைவரும் மேலும் பலவித தொற்றுநோய்க்கு உடபட்டு பலர் உயிரை இழக்கும் நிலைமை ஏற்படும் என்றும் வரும் காலத்தில் உங்கள் கிராமம் ஊனமுள்ள கிராமமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

இப்போது பரவிக் கொண்டிருக்கும் இந்ந தொற்றுநொய்க்கும்,மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்பையும் மீறி தொற்றுநோய் பரப்பிக்கொண்டிருக்கும் பன்றி பண்ணையை மாற்றாத குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவரே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இந்த நிலைமையை பார்த்தாவது, குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தானும் குழந்தைகளுக்கு தகப்பனார் என்ற மனிதாபிமானத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரின் மன நிலையை உணர்ந்து, அவர்களும் தாங்களை போல சந்தோசமாக வாழ கொடுப்பைக்குழி ஊரில் அமைந்திருக்கும் பன்றி பண்ணையை மாற்றும்படி திரும்பவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Saturday, February 7, 2015

தமிழகத்தில் வாகனங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் (IND Number Plate) பொருத்தினால் அபராதம்!

வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்ட உத்தரவிட்டது. இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும்.

மத்திய அரசின் உத்தரவையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஐ.என்.டி. நம்பர் பிளேட் இன்னும் அமலுக்கு வரவில்லை. இருப்பினும், சிலர் தங்களது வாகனங்களில் போலியான ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியுள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ''தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிகக்கூடாது என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நம்பர் பிளேட்டுகளை அகற்றிவிட்டு, பழைய நடைமுறைப்படியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற திங்கட்கிழமை (9-2-2015) முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக IND - ஐ அகற்றி TN மற்றும் பிற சரியான எண்ணை பொறிக்கும்படி அறிவுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Wednesday, February 4, 2015

சர்வதேச விசாரணை அவசியமில்லை, தமிழருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரவூவ் ஹக்கீம்

இலங்கை தீவில் தமிழீழ பகுதியில் 2009-ல் நடந்த போரில், 1.47 இலட்சம் பொதுமக்களை, சிங்கள இராணுவபடை இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைக்காக ஈழத்தமிழர்களும், தமிழக தமிழர்களும்,  அனைத்து நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், போராடி வருகின்ற நிலையில், ஐ நா வில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் கீழ் இலங்கையில் சர்வதேச விசாரனை நடத்த படவேண்டும். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வருகின்ற வேளையில், தமிழ் முஸ்லிம் வகுப்பை சேர்ந்த   முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சிங்களவர்களுக்கு துணைபோக துணிந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான அணைத்துலக விசாரணை தற்போது அவசியம் இல்லை என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துத் பேச்சு நடத்தும் போதே வலியுறுத்தியுள்ளார். 

இதனால் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா-வின் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற பட வேண்டிய நிலையில் ஹக்கீம்-ன் கருத்து அதன் வீரியத்தை குறைப்பதாக அமைந்துள்ளது. 

இனிவரும் காலங்களில் திரு.ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவிகளுக்கு ஆசைபடாமல் தமிழருக்கு நல் வாழ்வு கிடைக்க சிங்களவருக்கு துணைபோகமல் இருக்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

பாஜக அரசு, ஈழதமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க மறு பரிசீலணை செய்யவேண்டுமென வலியுறுத்தல்.

தமிழீழத்தில் நடந்த கொடிய போரினால் தமிழீழத்தின் பெரும்பாலான குடிமக்கள் தொப்புள் கொடி உறவுகளின் தாயகமான தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசு எந்த உதவிகளை வழங்கவில்லை என்றாலும் தமிழக அரசு சிறு உதவிகளை செய்து அவர்களை வாழ வழி வகை செய்கிறது. மற்றும் முகாம்களில் வாழும் குடும்பத்தினர் சிறு வேலைகளை செய்து அவர்களின் அன்றாடம் வாழ்வை கழிக்கின்றனர். சிறு வேலைகள் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்கள் பிள்ளைகளை படிக்கவும் வைக்கின்றனர்.  இந்நிலையில் பாரத அரசானது ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப முனைப்புடன் செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. கடைசி கட்ட ஆயுதம் ஏந்திய ஈழப்போருக்கு பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர்களின் பகுதியில சகஜ வழ்வு நிலை திரும்பவில்லை. வீடுகளை இழந்த, காணிகளை இழந்த தமிழர்களுக்கு இன்னும் மீழ் குடியேற்றங்களும், காணிகளை திரும்ப ஒப்படைத்தலும் நடைபெறவில்லை. 

இப்படிபட்ட சூழ்நிலையில் ஈழத்து தமிழர்களை திரும்ப ஈழத்திற்கே அனுப்ப இந்திய பாஜக அரசு வேகம் காட்டுகிறது. இதை தமிழக அரசு தீவிரமாக எதிர்ப்பது ஈழத்தமிழருக்கு சிறு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், பா.ஜ.க வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அவர்கள், எக்காரணம் கொண்டும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளார். இது ஈழத்து மற்றும், தமிழக தமிழர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசானது குடியுரிமை பற்றி மறு பரிசீலணை செய்து, அனைத்து ஈழதமிழர்களுக்கும் இந்திய தேச குடியுரிமை வழங்கி அவர்களை உயிருடன் வாழ வழி வகை செய்யவேண்டுமென வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Tuesday, February 3, 2015

பன்றி பண்ணையை அகற்ற முதுகெலும்பில்லாத குருந்தன்கோடு பஞ்சாயத்து மற்றும் குமரி மாவட்ட நிர்வாகங்கள், தமிழக அரசு தலையிடுமா?

தமிழகத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் சொர்க்க பூமியாம் கன்னியாகுமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தில் மக்கள் அனுதினமும் குளிக்கும் ஒட்டான்குளத்தின் மிக அருகில் பஞ்சாயத்து அனுமதியோ, சுகாதார துறைஅனுமதியோ இல்லாமல் சட்ட விரோதமாக கடந்த ஆண்டு 1.5.2014 முதல் சுகாதாரமற்ற தொற்று நோயை உண்டாக்கும்  தனியாரின் பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இதனை கேள்விபட்டவுடன் அந்த சுற்று வட்டார பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் உடனடியாக இங்கிருந்து பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு பஞ்சாயத்து தலைவர் ஒரு வாரத்தில் மாற்றி விடுவேன் என்று பொதுமக்களிடம் கூறினார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் மாற்றாமல் கொடுப்பைக்குழி ஊரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊர் மக்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார். 

இவரின் குணாதிசயங்களை உணர்ந்த மக்கள் இது வரை 28 மனுக்கள் கொடுத்துள்ளனர். இதில் குமரி மாவட்ட ஆட்சியருக்கு 6 மனுக்களும், பஞ்சாயத்து தலைவர் மதிப்பிற்குரிய திரு.வைகுண்டமணி அவர்களுக்கு 3 மனுக்களும் அடங்கும். பலமுறை பொதுமக்களாக சேர்ந்து பன்றி பண்ணையை மாற்ற வலியுறுத்தியும் மாற்றாத பஞ்சாயத்து நிர்வாகம், மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 12.11.2014 அன்று கொடுப்பைகுழி வட்டார பொதுமக்கள் பெருந்திரளாக உண்ணாவிரதமிட திட்டமிட்டிருந்தனர். இந்த தகவலறிந்த பஞ்சாயத்து தலைவர் வரும் 18.11.14 ம் தேதி கண்டிப்பாக பன்றி பண்ணையை மாற்றி விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்ததின் படி 18.11.14 அன்று பன்றி பண்ணையை மாற்றி தராமல் அன்றும் பொதுமக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பன்றி பண்ணையை மாற்றாத பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 24.11.14 அன்று 300 பேருக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பன்றி பண்ணையை அகற்றக்கோரி குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.G.பிரின்ஸ், குருந்தன்கோடு ஊராட்சி மன்ற பெருந்தலைவர் திரு.K.T.உதயம், அவர்கள் முன்னிலையிலும், கொடுப்பைக்குழி ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திரு.ராஜன் அவர்கள் தலைமையிலும் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 13.12.14 க்குள் பன்றி பண்ணையை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பன்றி பண்ணையை மாற்ற வேண்டிய 13.12.14 அன்று பன்றி பண்ணையை அகற்ற முன்னின்று போராடிய இளைஞர்களை பன்றியை கொன்றதாக இரணியல் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பொய் வழக்கு புனையபட்ட இளைஞர்கள் ஜாமினில் வெளி வந்துள்ளனர். மேலும் பன்றி பண்ணையை அகற்றப்போராடிய  இளைஞர்கள்,பொதுமக்கள் மீதும் பழி தீர்ப்பு மற்றும் பன்முக அடக்கு முறைகளில் இனந்தெரியாத நபர்கள் ஈடுபடுகிறார்கள். 

பொதுமக்களுக்கு தொற்று நோய் உண்டாக்கும் பன்றி பண்ணையை மாற்றாததால் எங்கள் பகுதி மக்கள் பல வித தொற்று நோயால் பாதிக்கபட்டள்ளனர். மேலும் இந்த பன்றி பண்ணை எங்கள் ஊரில் வருவதற்க்கும், பொய் வழக்கு பதிவு செய்வதற்க்கும், இன்று வரை பன்றி பண்ணை மாறாமல் இறுப்பதற்கும் கொடுப்பைக்குழி ஊரைச் சார்ந்த, குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவரே காரணம் என அனைத்து பொதுமக்கள் மத்தியிலும் செய்திகள் உலா வருகிறது. பஞ்சாயத்து தலைவரே பன்றி பண்ணை உரிமையாளருக்கு ஆதரவாகவும் செயல் படுவதாக  தகவல்கள் வருகின்றன. 

இந்த செய்தி பஞ்சாயத்து தலைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், பஞ்சாயத்து தலைவர் அவர்கள் உடனடியாக இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் நலன் பேண பாடுபட வேண்டுமென கேட்டுகொள்கிறேன். மேலும் இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்களை ஒழுங்கீன முறையில், பொதுமக்களின் வாழ்வை சீரழிப்பு என்ற முறைகேட்டின் அடிப்படையில், பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடவேண்டுமென்று வலியுறுத்தி, சுகாதார கேடு விளைவிக்கும் பன்றி பண்னையை போர்க்கால அடிப்படையில் அகற்றி கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்களை தீய நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.