இலங்கை தீவில் தமிழீழ பகுதியில் 2009-ல் நடந்த போரில், 1.47 இலட்சம் பொதுமக்களை, சிங்கள இராணுவபடை இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைக்காக ஈழத்தமிழர்களும், தமிழக தமிழர்களும், அனைத்து நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், போராடி வருகின்ற நிலையில், ஐ நா வில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் கீழ் இலங்கையில் சர்வதேச விசாரனை நடத்த படவேண்டும். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வருகின்ற வேளையில், தமிழ் முஸ்லிம் வகுப்பை சேர்ந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சிங்களவர்களுக்கு துணைபோக துணிந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான அணைத்துலக விசாரணை தற்போது அவசியம் இல்லை என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துத் பேச்சு நடத்தும் போதே வலியுறுத்தியுள்ளார்.
இதனால் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா-வின் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற பட வேண்டிய நிலையில் ஹக்கீம்-ன் கருத்து அதன் வீரியத்தை குறைப்பதாக அமைந்துள்ளது.
இனிவரும் காலங்களில் திரு.ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவிகளுக்கு ஆசைபடாமல் தமிழருக்கு நல் வாழ்வு கிடைக்க சிங்களவருக்கு துணைபோகமல் இருக்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
No comments:
Post a Comment