Monday, February 9, 2015

கொடுப்பைக்குழி சிறுவன் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதி...

குமரிமாவட்டம் குருந்தன்கோடு பஞ்சாயத்துகுட்பட்ட கொடுப்பைக்குழியில் அமைந்துள்ள பன்றி பண்ணையால் அப்பகுதி சிறுவன் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்...

கொடுப்பைக்குழியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் பல போராட்டங்களையும் மீறி செயல்பட்டு வரும் பன்றி பண்ணையால் அப்பகுதியில் பலர் பலவித தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் முதலாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுவன் I.நிதன்சக்தி கடந்த பல நாட்களாக காய்ச்சலால் பாதிக்கபட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டான். அவனுக்கு சிகிட்சையளித்த மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு நிமோனியா என்னும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனார்.

மேலும் கொடுப்பைக்குழியில் பன்றி பண்ணை இருப்பதை கேள்விபட்ட மருத்துவர் இந்நோய் வருவதற்க்கு பன்றி பண்ணையிலிருந்து பரவும் கிருமிகளும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர் அச்சிறுவனின் பெற்றோரிடம் அப்பகுதியில் அமைந்துள்ள பன்றி பண்ணையை மாற்றவில்லையென்றால் அப்பகுதி மக்கள் அனைவரும் மேலும் பலவித தொற்றுநோய்க்கு உடபட்டு பலர் உயிரை இழக்கும் நிலைமை ஏற்படும் என்றும் வரும் காலத்தில் உங்கள் கிராமம் ஊனமுள்ள கிராமமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

இப்போது பரவிக் கொண்டிருக்கும் இந்ந தொற்றுநொய்க்கும்,மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்பையும் மீறி தொற்றுநோய் பரப்பிக்கொண்டிருக்கும் பன்றி பண்ணையை மாற்றாத குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவரே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இந்த நிலைமையை பார்த்தாவது, குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தானும் குழந்தைகளுக்கு தகப்பனார் என்ற மனிதாபிமானத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரின் மன நிலையை உணர்ந்து, அவர்களும் தாங்களை போல சந்தோசமாக வாழ கொடுப்பைக்குழி ஊரில் அமைந்திருக்கும் பன்றி பண்ணையை மாற்றும்படி திரும்பவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment