தமிழீழத்தில் நடந்த கொடிய போரினால் தமிழீழத்தின் பெரும்பாலான குடிமக்கள் தொப்புள் கொடி உறவுகளின் தாயகமான தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசு எந்த உதவிகளை வழங்கவில்லை என்றாலும் தமிழக அரசு சிறு உதவிகளை செய்து அவர்களை வாழ வழி வகை செய்கிறது. மற்றும் முகாம்களில் வாழும் குடும்பத்தினர் சிறு வேலைகளை செய்து அவர்களின் அன்றாடம் வாழ்வை கழிக்கின்றனர். சிறு வேலைகள் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்கள் பிள்ளைகளை படிக்கவும் வைக்கின்றனர். இந்நிலையில் பாரத அரசானது ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப முனைப்புடன் செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. கடைசி கட்ட ஆயுதம் ஏந்திய ஈழப்போருக்கு பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர்களின் பகுதியில சகஜ வழ்வு நிலை திரும்பவில்லை. வீடுகளை இழந்த, காணிகளை இழந்த தமிழர்களுக்கு இன்னும் மீழ் குடியேற்றங்களும், காணிகளை திரும்ப ஒப்படைத்தலும் நடைபெறவில்லை.
இப்படிபட்ட சூழ்நிலையில் ஈழத்து தமிழர்களை திரும்ப ஈழத்திற்கே அனுப்ப இந்திய பாஜக அரசு வேகம் காட்டுகிறது. இதை தமிழக அரசு தீவிரமாக எதிர்ப்பது ஈழத்தமிழருக்கு சிறு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், பா.ஜ.க வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அவர்கள், எக்காரணம் கொண்டும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளார். இது ஈழத்து மற்றும், தமிழக தமிழர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசானது குடியுரிமை பற்றி மறு பரிசீலணை செய்து, அனைத்து ஈழதமிழர்களுக்கும் இந்திய தேச குடியுரிமை வழங்கி அவர்களை உயிருடன் வாழ வழி வகை செய்யவேண்டுமென வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
No comments:
Post a Comment