Saturday, February 7, 2015

தமிழகத்தில் வாகனங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் (IND Number Plate) பொருத்தினால் அபராதம்!

வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்ட உத்தரவிட்டது. இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும்.

மத்திய அரசின் உத்தரவையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஐ.என்.டி. நம்பர் பிளேட் இன்னும் அமலுக்கு வரவில்லை. இருப்பினும், சிலர் தங்களது வாகனங்களில் போலியான ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியுள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ''தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிகக்கூடாது என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நம்பர் பிளேட்டுகளை அகற்றிவிட்டு, பழைய நடைமுறைப்படியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற திங்கட்கிழமை (9-2-2015) முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக IND - ஐ அகற்றி TN மற்றும் பிற சரியான எண்ணை பொறிக்கும்படி அறிவுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

No comments:

Post a Comment