கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்கள் சார்பாக ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் இயங்கி வருகிறது. இதில் இளம் விளையாட்டு வீரர்கள், ஆலோசகர்கள் மற்றும் சக உறுப்பினர்கள் என ஏறக்குறைய 300 பேர் உள்ளனர். இந்த கிளப்-ல் மட்டைப்பந்து பிரதானமாக விளையாட்டாக இருந்தாலும், கபடி, சிலம்பாட்டம், மற்றும் நாட்டுபுற, உடல் ஆரோக்கியத்திற்கான அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் ஊக்கமளித்து திறமையானவர்களை உருவாக்கி வருகிறது.
இந்த கிளப்-ஆனது விளையாட்டுகளை மட்டும் ஊக்குவிக்காமல், உடல் சார்ந்த, பொது நலன் சார்ந்த அனைத்து சேவைகளிலும் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள், கலாச்சார மேடைகள், பள்ளிகளின் சுற்றுபுறத்தை தூய்மை படுத்துதல், பொதுமக்களுக்காக போராடுதல், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை செயற்படுத்துதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள அனைவருமே கொடுப்பைகுழி வட்டார பகுதியை சார்ந்த திறமை மிக்க வருங்கால தூண்கள்.
இந்த கிளப்-ஆனது கொடுப்பைகுழி வட்டார மக்களை கொண்டு இயங்குவதால் மேலும் கிளப் தொடங்கினால், கொடுப்பைக்குழி வட்டார மக்களை கூறுபோடுவது போல வெளி மக்களுக்கு தென்படும். எனவே அனைத்து மக்களும் எந்த வித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து, சில குறைகள் இருந்தால், குழுவாக கூடி ஆராய்ந்து, பொதுமக்கள் குறைகளை எடுத்து சொல்லி, நிவர்த்தி செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் நமது கொடுப்பைகுழி வட்டாரத்தை முன்மாதிரியாக மாற்ற கை கோர்ப்போம்.
வெற்றி நமதே...
வெற்றி நமதே...
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment