Wednesday, December 8, 2021

Iam Awarded as CIO 2021!

Awarded CIO 2021 in World CIO summit 2021 in AJMAN UAE.

Thanks a lot to my Bosses Sandeep Jaitly,  Ravindra Kumar Srivastava and my Friends and Family.

#ChangeX
#CIO200Awards
#CIO
#globalcioforum


Saturday, December 4, 2021

போராட்ட கள வீரன் தம்பி தமிழருண் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

உங்கள் தந்தையார் மறைந்த செய்தி நேற்று (03-12-2021) கேட்டு  துயருற்றேன். அதற்கு முந்தைய நாளில்தான் அவர் உடல் நலன் பற்றி பேசிக்கொண்டது என் மனதை வாட்டிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் அவர் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. தந்தை என்பவர் வெறுமனே இருந்தாலே நமக்கு பெரும் பலம் என்பதை அறிவேன். அவர் இல்லா உலகு நாம் தனிமை படுத்தப்பட்ட ஆடுகள்‌போல மேய்ப்பன் இல்லாமல் இருப்பது துர்பாக்கியம்தான். ஆனாலும் நல்ல மேய்ப்பன் அண்டையில் இருந்த ஆடுகளாக நம்மை தற்காத்து குடும்பத்தையும் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை உங்கள் தம்பியின் பலத்துடன் இணைந்தே பலப்படுங்கள்.

தந்தை இல்லா சோகம் நம்மை‌ போன்றவர்கள் அனுபவிப்பது காலம் தரும் அனுபவங்களே...

தளராமல் முன்னேறுங்கள். விடா முயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வாழ்வை வசப்படுத்தட்டும்.

 தமிழீழம் சார்ந்த பதிவுகளால் எனது முகநூல் முடக்கப்பட்டதால் ஆறுதல் பதிவு கூட‌ செய்ய‌ இயலாத சூழல். தமிழீழ விடுதலை போராளிகளை போல நாமும்‌ போராடுவோம்.

தந்தையாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.


தம்பி தமிழருண் துயரில் பங்கெடுக்கும் சகோதரன்,

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
04-12-2021

Thursday, November 11, 2021

அங்கன்வாடி நில‌ அளவீடுக்கு வட்டாட்சியரிடம் மனு!

கொடுப்பைக்குழியில் சர்வே எண் 520/2 ல் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) புதிய கட்டடத்திற்கு நில அளவீடு வேண்டி கல்குளம் துணை வட்டாட்சியரிடம்‌ (நிலம்) கொடுப்பைக்குழி ஊர்மக்கள் சார்பாக, குருந்தன்கோடு ஊராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் திரு.N.சுதாகர், காந்திஜி இளைஞர் மன்ற தலைவர் திரு.P.செல்லதுரை, உப தலைவர் J.கஜில், செயலாளர் திரு.N.ஜாண் பீட்டர், தகவல் தொடர்பு செயலாளர் Er.KD.மைக்கேல் செல்வ குமார், திரு.துரை ஆகியோர் இன்று 11-11-2021 மனு கொடுத்தனர். 

குருந்தன்கோடு ஒன்றிய‌ மேநாள் சேர்மன் திரு.K.T.உதயம் அவர்கள் துணை வட்டாட்சியர் அவர்களிடத்தில் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி அங்கன்வாடி மற்றும் மாதர் சங்க நில‌ அளவுகளை எங்களுடன் வட்டாட்சியருக்கு விளக்கி கூறி, துணை வட்டாட்சியரே, நிலத்தின் பழைய சான்றிதள்கள் எடுக்க  பதிவாளருக்கு  கடிதம் எழுத கேட்டு பெற்று தந்தார்.

கல்குளம் வட்டாட்சியர் கொடுத்த கடிதத்தை இரணியல் சார் பதிவாளரிடம் கையளித்து நில அளவீடு பற்றி விளக்கி கூறிய போது கடிதம் பார்த்து விட்டு ஆவன செய்கிறேன்‌ என உறுதியளித்துள்ளார்.

ஆகவே வேறு சிக்கல்கள் புதிதாக இல்லாமல் இருந்தால், விரைவில் நில அளவீடு இருக்கலாம் என எதிர் பார்க்கிறோம்.

மைக்கேல் செல்வ குமார்
கொடுப்பைக்குழி                       
தேதி : 11-11-2021

Tuesday, November 9, 2021

கொடுப்பைக்குழி அங்கன்வாடி நில அளவீடு வேண்டி‌ மனு!

குருந்தன்கோடு‌ ஊராட்சி கொடுப்பைக்குழியில் 
சர்வே எண் 520/2 ல் வடக்கு மூலையில் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) செயல்பட்டு வந்தது. 2017 ஓகி புயலால் அங்கன்வாடி முழுதும் சேதமடைந்ததால்  01-10-2019 ல் இடிக்கப்பட்டு (பாலர் பள்ளி) தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 

ஆகவே புதிதாக கட்டடம் கட்ட சர்வே எண் 520/2 அளவீட்டின் படி, அங்கன்வாடி மற்றும் மாதர் சங்கத்திற்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தருமாறு இன்று 09-11-2021 காலையில் குருந்தன்கோடு ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் குருந்தன்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுப்பைக்குழி ஊர் மக்கள், மற்றும் காந்திஜி இளைஞர் மன்றம் சார்பாக  மனு கையளித்தோம். 

கொடுப்பைக்குழி                       
தேதி : 09-11-2021

Saturday, November 6, 2021


via IFTTT

via IFTTT

மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!

விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அன்னமிட்ட, மது ஒழிப்புக்கு உண்ணாவிரதமிருந்து மதுக்கடையை மூடிய  வீரத்தாய் அன்னை மாரியம்மாளின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்ட மதிமுகவினரால் இன்று 6-11-2021 மாலை 5.30 மணி‌ அளவில் அனுசரிக்கப்பட்டது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் அடியேனும் புகழஞ்சலி செலுத்தினேன்.

மைக்கேல்‌ செல்வ குமார்
06-11-2021

Friday, August 13, 2021

அருணகிரிநாதர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

மனிதம் போற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

மதம் சாராமல் மனிதம் மட்டுமே பார்த்த பெரியவர், சைவ மதமே தமிழர் மதம் என்று உரக்க சொன்னவர், இந்து அறநிலைய துறை என்பதை சைவ அறநிலையதுறை என்ற தமிழர்களின் உண்மையான பெயரை சூட்ட வேண்டுமென்று வலியுறுத்துயவர்‌, பெரும்‌ இலக்கியவாதி, அன்பு தலைவர் வைகோ அவர்கள் மீது எல்லையற்ற பாசம் வைத்திருந்தவர். சமூக‌ நல்லிணக்கத்தை வாழ்நாள் முழுதும் காத்தவர் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பு.

ஆதீன மக்களுக்கும், தமிழர்களான சைவர்களுக்கு பேரிழப்பு. அவரது மறைவிற்கு ஒமான தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
13-08-2021

Tuesday, August 3, 2021

வாழ்த்திய அன்புகளுக்கு நன்றி!

நேற்று மாலை முதலே வாழ்த்து சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறேன். 

எளியவன் மேலும் பாசம் வைத்து வாட்சப், முகநூல், மெசஞ்சர், அலைபேசியில் என‌ பல உறவுகள் இந்த பிறந்த நாளில் வாழ்த்திவிட்டீர்கள்.

அன்பு தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகளாக, குடும்பத்தாராக, நண்பர்களாக, உறவினர்களாக, தோழமைகளாக என அன்பால் என்னை கரைத்துவிட்டீர்கள்.

என் மீதுள்ள உங்கள் அன்பை தக்கவைக்க என்னை நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்களால் என் ஆயுள் கூடிக்கொண்டேயிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பாசம் காட்டி என்னை, அன்பால் பல்கி பெருக வைத்துவிட்டீர்கள்.

உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் பறந்து வந்து நாக்கில் விழுகின்றன. ஆனாலும் எல்லாம் எழுதி சலிப்படைய செய்யாமல், உங்கள் அன்புக்கு பாத்திரமாயிருப்பேன் என்று கூறி, என் மீது பாசம்‌ காட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை மனதார தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.
03-08-2021

Monday, June 21, 2021

காவு வாங்குகிறதா, குமரி மாவட்டம் கருங்கல் பகுதி வேளாங்கோடு செம்மண் குளம்! தொடரும் வாகன பலிகளால் மக்கள் கடும் அச்சம். குளத்திற்கு உறுதியான தடுப்பு சுவர் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செல்லங்கோணம் செல்லும் சாலையில் வேளாங்கோடு என்னும் செம்மண் குளம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 21-06௨021 குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50 வயது) ரப்பர் விவசாயி, தனது மூத்த மகள் ஷாமினி (வயது 21), இலைய மகள் ஷாலினி (வயது 20) ஆகியோருடன், ஈத்தாமொழி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லும் வழியில், கருங்கல் நண்பரை சந்தித்து விட்டு, பேருந்துகள் ஓடும்  செல்லங்கோணம் செல்லும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் வாகனம் செம்மண் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளைய மகள் ஷாலினி வாகன கதவை திறந்து நீந்தி உயிர் தப்பினார். போதிய வெளிச்சமும் இல்லாததால், தந்தையையும், சகோதரியையும் காப்பாற்ற இயலாத சூழலில், தந்தையும், சகோதரியும் காருடனே நீரில் மூழ்கி ஷாலினி கண் முன்னே பரிதாபமாக இறந்தனர். இது அந்த வட்டார மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த கோர விபத்தானது, குளத்தை ஒட்டி சாலை அமைந்ததாலும், சாலை சரியில்லாததாலும், குளத்திற்கும் சாலைக்கும் இடையில் தடுப்பு சுவர் இல்லாததாலும், சாலை வெளிச்சம் இல்லாததாலும் நடந்திருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இதே குளத்தில், இதே போல கடந்த நாட்களிலும், 15 க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்களால் பலர் இறந்துள்ளனர். இதனால் உறுதியான தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் சார்பாக பலமுறை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தும் முந்தைய தமிழ்நாடு அரசு செவிசாய்க்காமலே இருந்திருக்கிறது என்பது குமரி மாவட்ட மக்களின் துர்பாக்கிய நிலையாக இருக்கிறது.

இந்த செம்மண் குளத்தை போல, செல்லங்கோணம் கடையகுளம், கப்பியறை குளம், மேக்கோடு குளம், பெத்தேல்புரம் குளம், வேம்பனூர் குளம்ம் புத்தேரி குளம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுங்கான்கடை குளம், போன்ற 100 க்கும் மேற்பட்ட குளங்கள் குமரி மாவட்டத்தில் மக்கள் பயணம் செய்யம் பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளன. இவை யாவற்றிற்கும், தடுப்பு சுவரோ, தரமான சாலையோ, இரவு நேரங்களில் போதிய வெளிச்சமோ இல்லை. சாலையை விட குளம் தாழ்வாக இருப்பதாலே விபத்துக்கள் தொடர்கிறது என்பது அவலத்திற்குரிய செய்தியாகும்.

சாயங்கால நேரம் முதல், அதிகாலை நேரம் வரை சாலை விளக்குகள் இல்லாமலும், விளக்குகள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் வெளிச்சம் இல்லாததாலும், குளங்களை ஒட்டிய சாலைகளுக்கு தடுப்பு சுவர் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகின்றனர் என்ற செய்தி தினசரி நாளேடுகளில் குமரி மாவச்ச செய்தி பக்களில் தினமும் வருவதை காணலாம்.

இப்படிபட்ட விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகளின் குடும்பங்கள், தங்களின் வருமானம் ஈட்டும் தந்தையையோ, மகனையோ அல்லது குடும்பமாக செல்லும்போது, மொத்த குடும்ப உறுப்பினர்களையோ இழக்கும் நிலையால், பல குடும்பங்கள் அனாதைகளாக வாழும் அவலம் குமரி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருகிறது.

இது போன்ற அவல நிலயை தடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை உயரமான தடுப்பு சுவர் அமைத்து தராமாலே முந்தைய அரசுகள் தட்டி கழித்தன. 
ஆகவே தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, குமரி மாவட்டத்தின் பேருந்துகள் ஒடும் பிரதான சாலையை ஒட்டியுள்ள அனைத்து குளங்களிலும் சாலையை விட, 6 அடிக்கு மேலான உயரமான, உறுதியான  தடுப்பு சுவர் அமைத்து இது போன்ற வாகன விபத்துகளை தடுத்து குமரி மாவட்ட குடும்பங்கள் அனாதைகளாகும் அவல நிலையிலிருந்து காக்குமாறு குமரி மாவட்ட பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

மைக்கேல் செல்வ குமார்
குமரி மாவட்டம்
21-06-2021

Wednesday, June 16, 2021

"பேங்க் ஆப் தமிழ்நாடு" மறு உருவாக்கம் செய்ய கோரிக்கை!

‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்து அரசுடமையாக்கினார்கள் தமிழர்கள்.

அதை தற்போது தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முனைவது தமிழர்களின் மீதான சுரண்டலாக கருதபடுகிறது.
ஆகவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்பதை, தமிழ்நாடு அரசு தடுப்பதோடு, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற பழைய பெயரில் தமிழ்நாடு அரசாங்கமே புதிய வங்கியை மறுபடியும் உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதில் தமிழர்கள் தங்கள் வங்கி கணக்குகளை திறந்து, மாநில பொருளாதாரத்தை சீரமைக்க வாய்ப்பு ஏற்படும்.
இப்போதுள்ள சூழலில் அனைவரும் தேசிய வங்கிகளிலே கணக்கு வைத்திருப்பதை தமிழ்நாடு அரசு ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற வங்கியை திறந்தவுடன் அதிலே கணக்கு தொடங்குவார்கள். மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
ஆகவே முதல்வர் M. K. Stalin அவர்களே, தமிழ்நாடு நிதி அமைச்சகத்தின் கீழ், நிதி அமைச்சரை தலைவராக கொண்டு புதிதாக நமது‌ பழைய வங்கியான ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' மறு உருவாக்கம் செய்து தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
16-06-2021

Thursday, June 3, 2021

நீங்களும் எழுதுங்கள் USI என்று!

அண்ணன் மானாமதுரை மருது அவர்கள்தான் முதலில் முகநூலில் USI என எழுதியதாக ஞாபகம். தமிழின வழிகாட்டி, தமிழ்நாட்டு ஊழியன் அன்பு தலைவர் அவர்கள் வைகோ அவர்கள் சொன்னதைதானே அண்ணன் எழுதியிருக்கிறார் என்று நினைத்து நானும் எனது முகநூலிலும் ட்விட்டரிலும் முழுதாக United States of India என்று சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருந்தேன். இன்றளவும் அப்படியே இருக்கிறது.

அதன் வீரியம் இப்போது அதிகமாகிக்கொண்டேயிருப்பது மகிழ்ச்சி...
இந்திய ஒன்றியம் என்பதில் மகிழ்ச்சியடைந்தாலும், முழுதாக இந்திய ஐக்கிய நாடுகள் என்று பெயரை மாற்றுவதே நமது லட்சிய தாகமாக கொள்ளவேண்டும். அதற்காக பயணப்படுவோம்.
மைக்கேல் செல்வ குமார்
இந்திய ஐக்கிய நாடுகள்.

Thursday, May 13, 2021

ரமலான் நல் வாழ்த்துக்கள்!

தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்தி சாய்கிறது வரை விரதம் இருந்து மெக்கா நோக்கி தொழுகை செய்கின்றனர்.

பிறை கண்டு நோன்பு‌ தொடங்கி, அடுத்த பிறை காணும்போது நோன்பு முடித்துக்கொள்கின்றனர்‌.

அவர்களின்‌ கடமைகளின் ஒன்றான கொடை என்ற வள்ளல் மனதால் ஏழை எழியோருக்கு உணவு உடை‌ உறைவிடம் போன்றவையும் செய்து வருகின்றனர்‌.

அவர்கள் கொடையே அவர்களை செழிப்பாக வைக்கிறது என நம்புகின்றனர். 

ரமலான் காலம் கடந்த வருடமும் இந்த வருடமும் கொரொனா கொடுமை உலகை வாட்டி வதைக்கிறது. நோயோளிகளுக்கு உதவுவதிலிருந்து, மரணித்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வராதவர்களை இஸ்லாமிய மக்களே தங்கள் ஈகை குணத்தால் அடக்கம் செய்து இறுதி மரியாதையையும் செய்தனர்.

கருணையுள்ளம் கொண்ட மக்களாக விளங்கும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும், ரமலானை கொண்டாடும் அனைவரும் நல் வாழ்வு வாழ ரமலான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Friday, April 23, 2021

உலக புத்தக தினங்களில் தமிழீழ வரலாற்று நூல்களை பரப்புவோம்!

உலக புத்தக தினமானது முதன் முதலாக 1995 ஏப்ரல் 23 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு இப்போது இதை வருடாந்திர நிகழ்வாக கொண்டாடி வருகிறது.

இந்த தினமானது, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது புத்தகத்தின் சர்வதேச நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தமிழீழம் சார்ந்த நூல்களை தமிழர்கள் அனைவரும் பரப்புவது, தமிழர்களை அறிய செய்வதும் நமது கடமையாகும். இனி வரும் காலங்களில் இந்த தினங்களில் தமிழீழம் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வெளியிடவும், தமிழீழம் சார்ந்த புத்தக கண்காட்சி நடத்திடவும் தமிழ் சமூகம் முனைப்பு காட்ட வேண்டும். தமிழீழ வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள இப்படி பட்ட தினங்களை புதிய நூல்கள் வெளியிட்டும், பழைய நூல்கள் தமிழர்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அமையவும் நாம் செயலாற்ற வேண்டியது கடமையாகிறது. 2009 மே 18 ல் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட எம் தமிழ் இனத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படிருந்தது. இந்த நினைவுதூபி 2021 ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, சிங்கள ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தால், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறையை கண்டித்து, பல்கலை மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தியதோடு, பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டங்களால், மீண்டும் தமிழின படுகொலைக்கான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் இனத்தின் அடையாளமான நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் 23-04-2021 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் அடங்கிய வரலாறுகள் வரும் புத்தக தினங்களில் உலகம் அறிய செய்திட வேண்டுமென விரும்புகிறேன். சில புத்தகங்களை வாசித்து சில பக்கங்கள் முடித்து முடி வைத்துவிடுவோம். ஆனால் தமிழீழ வரலாறுகளை படிக்கும்போது நாம் மூட இயலாதவாறு தமிழர்களின் ரத்தமும் தமிழ் உணர்வும் போராட்ட குணமும் அறமும் படிப்பவர்களை நூலை மூட விடுவதில்லை. ஆகவே தமிழர்களே புத்தக தினங்களில் தமிழர்களான நாம் தமிழீழம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து, பரிந்துரை செய்து தமிழீழ வரலாற்றை உலகின் முட்டுச்சந்துகளுக்கு எடுத்து செல்வோம். தமிழீழம் மலரும் நாளே தமிழர்களின் விடிவு நாள். பொதுவாக்கெடுப்பே தமிழீழத்தின் ஒரே தீர்வு. "தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்" தமிழீழ தாயகத்தில் கால் பதிக்க காத்திருக்கும் தமிழன்,
மைக்கேல் செல்வ குமார்

Monday, March 29, 2021

CIO300 Awards Winner – MENA 2021.

The CIO300 Awards, has recognized Chief Information Officers (CIO) that have displayed considerable feats in using IT in innovative ways to deliver business value; whether by creating competitive advantage, optimizing business processes, enabling growth or improving relationships with customers and; has through this enabled or pioneered a successful path for organization.


I am very much thankful to my CEO sandeep jaitly and our management team to gave this opportunities to implement and develop with new technology for this company.

Thursday, March 11, 2021

2021 சட்டபேரவை மதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

  1. 35. மதுராந்தகம் ( தனி) - மல்லை சி.ஏ. சத்யா  
  2. 204. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
  3. 115. பல்லடம் - க. முத்துரத்தினம்
  4. 192. மதுரை தெற்கு - மு. பூமிநாதன்
   5. 220. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்
   6. 149. அரியலூர் - வழக்குஉரைஞர் கு. சின்னப்பா

மதுராந்தகம் - மல்லை சி.ஏ. சத்யா  

சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்

பல்லடம் - க. முத்துரத்தினம்

மதுரை தெற்கு - மு. பூமிநாதன்


வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்

அரியலூர் - வழக்குஉரைஞர் கு. சின்னப்பா

Monday, March 8, 2021

மகளிர் தின வாழ்த்துக்கள்!

இன விடுதலையில் தமிழர்கள் பங்கு தன் இனத்திற்காக அளப்பரியது.

தமிழீழ விடுதலைக்காக சகோதரி அங்கயற்கண்ணி அவர்கள், இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார். 

உலக மகளிரில் தமிழச்சிகள் உலகில் தலைசிறந்தாவர்களாகவே இருக்கிறார்கள். 

இதுபோன்ற அனைத்து உலக மகளிருக்கும், தங்கள் தியாக உணர்வை போற்றும் வகையில் மகளிர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Sunday, March 7, 2021

நாகர்கோவில் டவுண் பள்ளிவிளை ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால், இந்த முன்பதிவு வசதி திருவனந்தபுரத்திற்கு மாறும் அபாயம்!

நாகர்கோயில் வெட்டூர்ணிமடம் அருகே 
பள்ளிவிளையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு மையம் தினசரி காலை 8:00 முதல் மாலை 8:00 வரை செயல்பட்டு வருகின்றது. 

இந்த முன்பதிவு மையத்தை மக்கள், பயண சீட்டு முன்பதிவு ‌செய்ய, அதிகம் பயன்படுத்தாத காரணத்தால், அங்கிருந்து தட்கல் டிக்கெட்டுகள் அதிக பயணிகளுக்கு கிடைக்க பெறுகின்றது.

இந்த முன்பதிவு மையம் அதிக பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்து பயன்படுத்தினால் மட்டுமே,‌ நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு வசதி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள், அதிக பணம் கொடுத்து தட்கல் பயண சீட்டு பெற்று பயணம் செய்வதை தவிர்த்து, முன்பதிவு செய்து ‌குறைவான கட்டணம் கொண்ட பயணசீட்டு பெற்று பயனடையுங்கள்.  

அப்போது நம்‌ முன்பதிவு மையத்தையும் இருப்பில் வைக்க முடியும். மக்கள் முன்பதிவு செய்து பயன்பெறவில்லையென்றால், இந்த முன்பதிவு மையத்தை திருவனந்தபுரம் கோட்டம் இங்கிருந்து எடுத்துவிடும்.

பின்னர் அந்த பகுதி மக்கள் ‌அனைவரும் நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கால் கடுக்க கியூவில், நெருக்கடிக்கு மத்தியில் நின்று பயண சீட்டு எடுக்கும் நிலை வரும்‌என்பதை எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பயண சீட்டு முன்பதிவிற்காக பயன்படுத்த உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

சக பயணியாக, 

மைக்கேல் செல்வ குமார்.
நாகர்கோயில் டவுண் பயணி
07-03-2021

Saturday, March 6, 2021

கன்னியாகுமரி தொகுதிக்கு ஹிந்தி அறிவிப்பு மூலம் குமரியில் ஹிந்தியை திணிக்கும் பொன் ராதாகிருஷ்ணனை தேர்தலில் தோற்கடிப்போம்!

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற 2021 ஏப்ரல் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாசிச பாசக, கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிப்பை
ஹிந்தியில் அறிவிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது, ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாசக.

தமிழர் தொட்டிலாம் நாஞ்சில் நாட்டிலே, தமிழ் பேசும் குமரியிலே ஹிந்தி வெறி பிடித்த பாசிச பாசக, ஹிந்தியை வேகமாக திணிக்க முயலுகிறார்கள்.

இரு மொழி கொள்கை பின்பற்றப்படும் தமிழ் நாட்டில் எதற்கடா ஹிந்தியில் குமரி தேர்தல் அறிவிப்பு?

கன்னியாகுமரி வாக்காள பெருமக்களே, தமிழ் உணர்வு மிகுந்து இருக்கும் குமரி மண்ணில் பொன்.இராதாகிருஷ்ணன் மூலம் தமிழை அழித்து ஹிந்தியை திணிக்க முயலுகிறது மத்திய ஒன்றிய அரசு.

பொன் ராதாகிருஷ்ணனும் தமிழை அழித்து ஹிந்தியை வளர்க்க பாசிச பாசகவுக்கு துணை புரிகிறார். குறைந்த பட்சம் தேர்தல் அறிவிப்பைக் கூட தமிழில் வெளியிட முடியாத பாசிச பாசக, குமரி தொகுதியை கைப்பற்றினால், தமிழ் அழிக்கப்பட்டு ஹிந்தி அமல்படுத்தப்படும் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

ஆகவே, பாசிச பாசக எனும் கொடிய விசத்தை வேர்லேயே முற்றாக அழிக்க வேண்டியது குமரி தமிழனான நமது கடமையாக இருக்கிறது என்பதை குமரி தமிழர்கள் உணர வேண்டும்.

குமரி தொகுதியில் தமிழை அழித்து ஹிந்தியை அமல்படுத்த முயலும் பொன் ராதாகிருஷ்ணனை ஏப்ரல் 6 தேர்தலில் டெப்பாசிட் இழக்க செய்து தமிழ் கொடுத்த தமிழன்னையை காக்க உறுதியேற்போம். ஆரிய மாயையை முறியடிப்போம்.

தமிழ் மான உணர்வுடன்,
மைக்கேல் செல்வ குமார்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
06-03-2021

Thursday, March 4, 2021

மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூல் புதிய வடிவில் வெளியீடு! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

150 வருடத்திற்கு முன்னர் எழுதிய மனுநீதி நூலை எளிய வடிவில் மொழி பெயர்த்து மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூலை சுவடு இதழின் நூலாசிரியர் நல்லு லிங்கம் அவர்கள் எழுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்கள்.

மதிமுக அமைப்பு செயலாளர் திரு. வந்தியத்தேவன் அவர்கள் நூலை பெற்று கொண்டார்கள்.

நூல் வெளிவர காரணமாயிருந்த, அதற்கு உதவிய, சுவடு பதிப்பகத்தாருகு ஆதரவாக இருந்த, நூல் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வருணாசிரத்தை தோலுரித்து காட்டுகின்ற உண்மையை உரைக்கின்ற நூலாக உலக வலம் வரும் நுலிற்கு வாழ்த்துக்கள்.


மைக்கேல் செல்வ குமார்.

Sunday, February 28, 2021

ரவுடிகளின் சரணாலயம் எது?

பாஜக கமலாலயம்!
ரவுடிகளின் சரணாலயம்!

Saturday, February 27, 2021

மதிமுக கன்னியாகுமரி மாவட்ட துணைச் செயலாளர் வீடு புகுந்து ரெளடிகள் தாக்குதல்! தாயார் தீவிர சிகிச்சையில்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார் கொற்றிகோடு சுரேஷ் குமார். 

இவரது வீட்டில் நேற்று 26-02-2021 இரவு 10:30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோர் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுரேஷ்குமார், அவரது தாயாா் மற்றும் அவரது மனைவி காயமடைந்துள்ளனர்.

இதில் சுரேஷ்குமாரை அடிக்கும்போது தாய் மனம் வெதும்பி தடுத்ததால் அவரின் தாயாரை ரெளடிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

காயமுற்ற சுரேஷ் குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் 3 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயார் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

குற்றவாளிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரெளடி ஜாண் கிறிஸ்டோபர், அலெக்சாண்டர், தேவதாஸ் ஆகியோரை குமாி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவம் மேலும் நிகழா வண்ணம் சுரேஷ் குமார் குடும்பத்திற்கு குமரி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முன்வர வேண்டும். பொதுமக்களையும் இதுபோன்ற ரெளடிகளிடமிருந்து பாதுகாத்து குமரி மாவட்ட சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும்.

மேலும் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானவா், தமிழகத்தின் நேர்மையான அரசியல் கட்சியான மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் என்பதாலும், பல மக்கள் பணிகளை செய்து வரும் சமூக சேவகர் என்பதாலும், கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளான சமூக விரோதிகளை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் போராட்டத்தை அறிவிக்கும் முன் காவல்துறை நடவடுக்க எடு!

மைக்கேல் செல்வ குமார்.

5 மாநில‌ சட்டசபை தேர்தல் 2021! தேர்தல் ஆணையம் கண்ணியத்தை காக்குமா?

ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற நிலையில்,

அஸ்ஸாம் மாநிலத்திற்கு மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும், 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

மேற்கு வங்க மாநில அரசியலை சிதைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி அவர்களின் கட்சியை சிதைக்கும் நோக்கில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டமாகவும் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறது இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பாசிச பாசகவை அரியணையில் அமர்த்த இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி வேலை செய்கிறது என்பதை தேர்தல் நாட்களிலும், வாக்கு எண்ணும் மே 2 லும் புரிந்துகொள்ளலாம்.

மைக்கேல் செல்வ குமார்

Monday, February 22, 2021

வாய்மையே வெல்லும்!

இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல் விலை 100 ஐ தொட்டது.

விலை உயர்வுக்கு காரணம் முந்தைய அரசே!
8 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் நரேந்திரா குற்றச்சாட்டு.
பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு கண்டனம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.

இறுதியில் உண்மையே வெல்லும்..!

Friday, February 12, 2021

கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்திற்கு ₹15.47 லட்சம் ஒதுக்கி அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் MLA! முன்னாள் மாணவர் மைக்கேல் நன்றி!

கொடுப்பைக்குழி அரசு தொடக்க பள்ளிக்கட்டிடம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் இடிந்து தரைமட்டமானது. இதனால் மாணவர்கள் எந்தவித பாதுகாப்புமில்லாமல் கூரையில்லாத தரைதளங்களில் பாடம் கற்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.

மாணவர்கள் பாதிக்கப்படுவதால் கொடுப்பைக்குழி மக்கள் சார்பில் கொடுப்பைக்குழி ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் பிரின்ஸ் MLA, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கிராமசபை கூட்டங்கள் மூலமும், இன்னும் பிற அலுவலகங்களில் புதிய கட்டடம் கட்டி மாணவர்கள் பயன்பெற வேண்டுமென்று கோரிக்கை மனுக்களை கையளித்தனர்.

மட்டுமல்லாது தொடர்ந்து கண்காணித்து அதிகாரிகளை தொடர்புகொண்டனர். இதன் தொடர்பாக, கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் J.G.பிரின்ஸ் அவர்கள் மூன்று வகுப்பறைகளுக்கு 15.47 இலட்சம் கடந்த வருடம் ஒதுக்கீடு செய்தார். பின்னர் வரைபடங்கள், கட்டடம் கட்ட ஒப்புதல்கள் அனைத்தும் பெறப்பட்டது.

இதன் விளைவாக, ₹15.47 லட்ச மதிப்பிலான கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்திற்கு இன்று 12-02-2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மாணவர்கள் பயன்பெற அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டுமான பணிக்கான வேலையை துவக்கி வைத்தார் J G பிரின்ஸ் MLA அவர்கள்.

இவ்விழாவில் குருந்தன்கோடு ஊராட்சி தலைவர் திருமதி.சந்திரா ஒய்சி பாய், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு.கே.டி.உதயம், ஊராட்சி கவுன்சிலர் திருமதி.சிவந்திகனி, கக்கோட்டுதலை ஊராட்சி தலைவர் திரு கென்னடி, வார்டு உறுப்பினர்கள் திருமதி.தங்கம்மாள், திருமதி.விஜயா, திருமதி.சாரதா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள்,கொடுப்பைக்குழி வட்டார மக்கள் பலர், பள்ளிஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதிய கட்டடம் தொடர்பாக தொடர் களப்பணியாற்றிய கிளப் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார ஊர் மக்கள் அனைவருக்கும் முன்னாள மாணவனாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மாணவன்
மைக்கேல் செல்வ குமார்