Wednesday, December 31, 2014

ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் 2015

மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தந்த வருடம் கடந்து போகிறது... புதிய வருடம் பிறந்து புது பொலிவோடு ஒவ்வொரு விடயங்களையும் அறிந்து தெரிந்து, அனைவருக்கும் உதவியாக, நல்லெண்ணங்களை கடைபிடித்து, புதியம மனிதர்களாக அவதாரமெடுத்து, அன்பாக ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ உலக மக்களாகிய நாம உறுதி ஏற்போம்.

புதிய வருடம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதோடு புதிய வாழ்வில், செல்வமும், அன்பும், நற்பண்புகளும் பெற்று வாழ எனது ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

சல்மான்கானின் துரோக செயலுக்கு கண்டனம்.


600 க்கு மேலான தமிழக மீனவர்களை கொன்றழித்த இலங்கையின் அதிபரான மகிந்த ராஜபக்ச க்கு ஆதரவாக 2015 ஜனாதிபதிக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்துள்ளார் இந்தி பட நடிகரான சல்மான்கான். இதன் மூலமாக அவர் இந்திய தேசத்திற்கும், தமிழ் திருநாட்டிற்கும் துரோகம் இழைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாரத தேசம் கொடியவனுக்கு இன்னும் சாதகமாக இருக்கும் என்பதையே மறைகுகமாக எடுத்துகாட்டுவதாக விழங்குகின்றது. இது போன்ற செயல்களுக்கு பாரத பிரதமர் அவர்கள் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுத்து சல்மான்கானை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி வலியுறுத்துவதோடு, சல்மான்கான் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது எனவும் வன்மையாக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Thursday, December 25, 2014

கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2014


பாவிகளை இரட்சிக்க பாரினில் அவதரித்த ஏசுபிரான் பிறந்த தினத்தை உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்பு, கருணை, சமாதானம் என்பவற்றை போதித்து உலக மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழவேண்டுமென்று அன்பினாலே அவர்களை ஆண்டவர். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலே நாம் அனைவரும் இனிப்புகள் வழங்கி ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி கொண்டாட வேண்டும். வான வேடிக்கைகள், பட்டாசுகளை கவனமாக வெடிக்க செய்து மகிழ வேண்டும். இந்த ஓளி வெள்ளத்திலே அனைத்து மக்களின் வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டுமென்று கூறி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைகேல்

Wednesday, December 24, 2014

கே பாலசந்தர் - திரையுலக பேரிளப்பு...


அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய திரையுலகில் அளப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜாம்பவான் மனிதகுலத்திலிருந்து சென்று தேவர்களோடு உலாவர சென்றுவிட்டார். திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்திகளை உடைய திரைப்படங்களையே விரும்பி இயக்கினார். மக்களுக்கு நல்ல கருத்துக்களையுடைய திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் தயாரித்தும் வெளியிட்டிருக்கின்றார். பல திரையுலக நட்சத்திரங்களை உருவாக்கியவரும் இவரே. தேசிய மாநில விருதுக்கு சொந்தகாரர் எளிமையின் சிகரமாகவும் விழங்கினார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் திரையுலகின் அனைத்து நண்பர்களுக்கும் மனதின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு கே பாலசந்தர் அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Friday, December 19, 2014

தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு!!


தமிழ் மற்றும் எந்த புதிய மொழியையும் மத்திய ஆட்சி மொழியாக சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது தமிழ் மக்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது..

இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தமைக்கு அவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இதை தாங்கள் மந்திரியாக இருக்கும்போதே நிறைவேற்றியிருந்தால், அப்போதைய காங்கிரஸ் தலமையிலான மத்திய அரசு தமிழையும் ஆட்சி மொழி என அறிவிக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்பதையும் நினவுபடுத்துகிறேன்..

தமிழை ஆட்சி மொழி கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்ட மத்திய உள்துறை துணை மந்திரி ஹரிபாய் பராத்திபாய் சவுத்ரி, இந்த முடிவை ஏற்றுக் கொள்வதானால் அரசியலமைப்பு சட்டத்தின் 346-வது பிரிவில் திருத்த வேண்டிவரும். இதே கோரிக்கையை முன்வைத்து, தங்கள் பிராந்தியத்தின் மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மற்ற மாநிலங்களும் அழுத்தம் தர நேரிடும் என கூறி உலகமே போற்றும் தமிழை தட்டி கழித்துள்ளார். 

உலகம் தோன்றிய காலத்தே தொன்று தொட்டு தமிழ் மொழி வழக்கத்திலிருக்கிறது என்பதை தமிழின தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரைகளாகவே அளித்துள்ளனர். தமிழ் மொழி அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானதால், அதை ஆட்சி மொழியாக்கினால் பாரத்தின் தேசிய மொழி ஆக்கிவிடுவார்களோ என்ற கசப்பு மனப்பான்மையில் மத்திய மந்திரி இதை மறுத்துள்ளார் என தெளிவாகிறது.

தமிழ் மொழிக்கென்று தனி வரலாறே இருக்கிறதே... உலகின் முதல் கப்பல் படையை கட்டி நிறுவிய மன்னன் போற்றிய தமிழ் மொழிக்கே ஆட்சி மொழி அந்தஸ்து இல்லாதது தமிழர்களிடையே மிகுந்த மன வேதனையான விடயமே... இதுவே தமிழன் இன்னும் அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதற்கு ஒரு பெரிய சான்றுமாகும். 

எனவே உலகின் மிக பழமையான உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த தமிழை ஆட்சி மொழியாக்க, மந்திரிசபை கூடி பரிசீலித்து ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பன்றி பண்ணையால் கொடுப்பைக்குழி மக்களின் உயிர்கள் காக்கபடுமா!!!?


கோவை தனியார் மருத்துவமனையில்  பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மும்தாஜ் என்ற பெண் உயிரிழந்தார் என் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானேன். அவரின் ஆன்மா இறைவனடி சேரவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாதபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

எனவே இதை போன்ற கொடூர உயிரிளப்பு சம்பவங்கள் நிகழ கூடாது என்பதற்காகதானே கொடுப்பைகுழி ஊரில் சட்டவிரோதமாக அமைந்திருக்கும் பன்றி பண்ணையை அகற்றும்படி வட்டார பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் சில இளைஞர்கள் மீது பொய்யான குற்றசாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளது வெட்க கேடானது என சமூக விரோதிகள் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவே இன்னும் தாமதிக்காமல் தொற்று நோயை பரப்பும் பன்றி பண்ணையை அகற்ற, மாவட்ட ஆட்சி தலைவர் கட்டளை பிறப்பித்து, பஞ்சயத்துதலைவர் அதை செயல்படுத்தி, ஒன்றிய தலைவர் அதை உறுதிபடுத்த வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பி.பி.சி தமிழ்ச் சேவையை இந்தியுடன் இணைத்து டெல்லிக்கு மாற்றக்கூடாது


அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஈழம் குறித்த செய்திகளையும், தமிழ் இனம் பற்றிய செய்திகளையும் இலண்டனில் இருந்து இயங்கிய பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பின் மூலம் தெரிவித்து வந்தது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் தமிழ் ஈழ மக்கள் படும் அவலத்தையும் கொடுந்துயரத்தையும் ஓரளவாவது பி.பி.சி. தமிழோசை அறிவித்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பி.பி.சி. தமிழோசையை இந்தி மொழியுடன் இணைத்து இலண்டன் தலைமையகத்திலிருந்து மாற்றி புது டில்லியில் இருந்து ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது. எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 இலட்சம் நேயர்கள் உள்ளனர். முக்கியமாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.

டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். மேலும் பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியா-இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும்.

பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயமும் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து, இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு, முதல்வர் அவர்கள் தமிழர்களின் எதிகாலம், தமிழினம், தமிழ் மொழி ஆகியவற்றை கருத்தில் கொண்டு BBC அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளை வெளிபடுத்தி இப்போது இயங்கும் இடத்திலே தொடர்ந்தும் இயங்கும்படி செய்ய தூரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பாகிஸ்தான் முந்நாள் அதிபர் முஸ்ரப் கருத்துக்கு எதிர்ப்பு.


தலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உதவியதால்தான்  இந்த கொடூர சம்பவம் பெசாவர் பள்ளி குழந்தைகளுக்கு நேர்ந்துள்ளது என பாகிஸ்தான் முந்நாள் அதிபர் முஸ்ரப் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். இந்த கருத்துக்கு முஸ்ரப் வருத்தம் தெரிவிப்பதோடு திரும்ப பெற வேண்டும். 

இதுபோன்ற பாதக செயல்களுக்கு அகிம்சையை பின்பற்றும் எம் பாரத திரு நாடு ஒரு போதும் இடமளிக்காது எனவும் முஸ்ரப் க்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

அரசியல் ஆதாயத்திற்காக வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பெசலாம் என முஸ்ரப் நினைப்பது தவறான செயலாகும். இந்த விரோதபோக்கை அவர் மாற்றி கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...


பிஞ்சு குழந்தைகளை கொன்ற தலிபான்களை அழிக்கவேண்டும்

பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் ராணுவப் பள்ளிக்குள் புகுந்த 9 தலிபான் தீவிரவாதிகள் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல், குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். குறிப்பாக, குழந்தைகளின் தலையை குறிவைத்து மிக அருகில் நின்று, மிருகத்தனத்தைவிட கொடிய செயலாக சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர். இது இதயமே இல்லாதவர்களின் வெறிசெயல். வன்மையாக கண்டிப்பதோடு பாகிஸ்தான் இராணுவமானது உடனே தலிபான் மீது போர் தொடுத்து உலக நாடுகளின் உதவியோடு முற்றிலும் வேரோடு அழித்து ஒழிக்க வேண்டுமென அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...


Monday, December 15, 2014

கிறுஸ்துமஸ் விடுமுறை ரத்து சுற்றறிக்கை திரும்ப பெறுக.


கிறுஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்க என மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகமாகனது "நவோதயா" மற்றும் "சி.பி.எஸ்.இ" - இன் கீழ் இயங்கி வரும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. இந்த அநீதி செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு உடனே அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற பிரதமர் அவர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அந்த சுற்றறிக்கையில் முந்நாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளையும் கொண்டாடுவதற்காக நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதை வாய் பேசமுடியாமல் இருக்கும் பெருமதிப்பிற்குரிய திரு.வாஜ்பாய் அவர்கள் காதுகளில் கசிந்தாலே அவர் மனம் வேதனை படுமெனவும் தெரிவித்து கொள்கிறேன். பெருமதிப்பிற்குரிய திரு வாஜ்பாய் அவர்களின் ஆட்சி காலங்களில் இது போன்ற விரோத செயலுக்கு அவர் இடமளிக்காமல், அனைத்து மக்களையும் இந்தியனாக நினைத்து, அனைத்து மதத்தினரின் பண்டிகைகளுக்கும் விடுமுறையை தொடர செய்தார் என மத்திய அரசுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். 

எனவே பெருமதிப்பிற்குரிய திரு வாஜ்பாய் அவர்களை போற்றும் நீங்கள் அவரின் வழியிலே நல்லாட்சி நடத்தவும் இந்திய திருநாட்டில் மதத்தை திணிக்காமல் இந்தியன் என்னும் ஒருமைப்பாட்டோடு அனைத்து மக்களையும் அரவணைத்து செயல்படவேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.

இப்படியாக மத்திய அரசின் செயல்பாடு இருந்தால் அது நல்லாட்சியாக இருக்க முடியாது என்றும் இதை மத்திய அரசானது உணர்ந்து சுற்றறிக்கையை திரும்ப பெற்று, இது போன்ற தூண்டும் செயல்களில் மீண்டும் ஈடுபடகூடாது எனவும் கோரிக்கயை விடுக்குறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, December 14, 2014

பன்றி பண்ணை போராட்டத்தை திசைதிருப்ப, மர்ம மனிதர்களின் பாதக செயல்


தமிழ் திரு நாட்டின், குமரியின் கோடியில் அமைந்திருக்கும் குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்பட்ட, கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி பொதுமக்கள் பயன்படுத்தும் ஒட்டான்குளத்தின் அருகில், சட்ட விரோதமாக அரசின் அனுமதியில்லாமல் அமைந்திருக்கும் பன்றி பண்ணையால் சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் அனுதினமும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், பல போராட்டங்களை நடத்தியும், பல மனுக்களை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், மத்தியமந்திரி, சுகாதாரதுறை அதிகாரி மற்றும் பல அதிகாரிகளுக்கு கொடுத்தும், இது வரை எந்த பலன்னும் இல்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமைக்குள் பன்றி பண்ணையை அப்புறபடுத்த பஞ்சாயத்து தலைவரிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டுள்ளதோடு, அகற்றவில்லையென்றால் அனைத்து பன்றிகளையும் ஏலமிட்டு பன்றி பண்ணையும் இழுத்து மூடுவதாக எச்சரித்துள்ளார் என் தகவல் வெளியான நிலையில், நேற்று பன்றி பண்ணையின் 7 பன்றிகள் இறந்துள்ளாக தெரிவித்துள்ளார் அதன் உரிமையாளர். இந்த பாதக செயல் இனம் தெரியாத நபர்களால் அரங்கேறியுள்ளதாகவும். இதை இரணியல் காவல் துறை மேலதிகாரி விசாரித்து உடனே நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். 

மேலும் கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்களின் போராட்டம் பன்றி பண்ணையை அகற்றுவதற்காகவே நடத்த பட்டு வருகிறது எனவும் காவல் துறையானது பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் மக்கள் பன்றி பண்ணை முதலாளிகளுக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தியதில்லை, அவர்களது எண்ணமும் அவ்வாறாக இதுவரை அமைந்ததில்லை. இந்த அறவழி போராட்டமெல்லாம் பன்றி பண்ணையை அப்புறபடுத்துவதற்காக மட்டுமே தவிர  நட்டத்தை ஏற்படுத்த அல்ல. 

பன்றி பண்ணை உரிமையாளருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள்போல சிலர் வேடமணிந்து பல்லாயிரகணக்கான ரூபாயை தங்கள் சுய வாழ்விற்காக பெற்றுளார்கள்  எனவும்,   லட்சகணக்கான பணத்தை செலவளிக்கவும் வைத்து பன்றி உரிமையாளரான உங்களுக்கு நட்டத்தையும் உருவாக்கி உங்களை அழித்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பன்றி பண்ணை உரிமையாளரான நீங்கள் புரிந்து கொண்டு தங்களை தவறான வழியில் நடத்தியவர்களை காவல் துறையில் தெரிவித்து தண்டனை வாங்கி தரவேண்டுமெனவும் கேட்டு கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், தாங்களே முன்வந்து பன்றி பண்ணையை அப்புறபடுத்தி மனித குலத்தை காக்க வேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன். 

இது மட்டுமல்லாமல், இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் யார் யாரெல்லாம் தொடர்புள்ளார்களோ அவர்களை காவல்துறை அடையாளம் கண்டு குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Friday, December 12, 2014

மின் கட்டண உயர்வு - தமிழக அரசின் விரோத செயல்


தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 15% உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசானது ஏழை எளிய மக்களுக்கு துரோக செயல் புரிகிறது. சிறு வருவாய் மூலம் அன்றாடம் வாழ்க்கையை கழிப்பதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மக்கள் இவ்வளவு நாட்களும் சிறு வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போது இந்த மின்சார கட்டணத்தை 15 % உயர்த்தியதன் மூலம் மின் கட்டணத்தை கட்ட முடியாத நிலை ஏற்படுவதோடு மக்கள் இருளில் வாழ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

எனவே தமிழக அரசானது, ஏழை எளிய மக்களின் குடும்ப சூழலை உணர்ந்து, உடனே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதனால் மீண்டும் மக்கள் வெளிச்சத்தில் வாழ வழி வகை செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Thursday, December 11, 2014

பன்றி பண்ணையால் கொடுப்பைக்குழி மக்கள் உயிருக்கு போராடும் அவலம்

பாரத திருநாட்டின் தெற்கு பகுதியான தமிழகத்தில், கடை கோடியான குமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில், குருந்தன்கோடு பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தில், பொதுமக்கள் அனுதினமும் நீராடும் ஒட்டான்குளத்தின் அருகினில், சட்ட விரோதமாக, அரசின் அனுமதியின்றி தனியாருக்கு சொந்தமான, மனிதகுலத்திற்கே தொற்று நோய்களை ஏற்படுத்தும், உயிர் கொல்லியான பன்றி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
 இதை அப்புறப்படுத்த பஞ்சாயத்து தலைவரிடம், கிராம பஞ்சாயத்து உருப்பினர்கள் மூலமாக மனு கொடுக்கப்பட்டது. பின்னனர் வட்டார இளைஞர்கள் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்ததுடன் அப்புறபடுத்த மனுவையும் கையளித்தனர். மேலும் பொதுமக்களாக பெண்களூம் குழந்தைகளுமாக சேர்ந்து கோரிக்கை வைத்ததுடன், விரைவில் அப்புறப்படுத்தபடும் என உறுதியளித்தார். ஆனாலும் மாற்றபடவில்லை. இதனால் பன்றி பண்ணை முற்றுகை போராட்டத்தில் கொடுப்பைகுழி வட்டார இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இன்னிலையில் இளைஞர்களாக அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் திரு.KT உதயத்திடமும், திரு.பிரின்ஸ் MLA வீடமும், பண்றி பண்ணையை அப்புறபடுத்த மனுவை கொடுத்தும் தெளிவாகவும் எடுத்து கூறியள்ளனர். ஆனாலும் பண்ணை அகற்றபடவில்லை. 
மத்திய மந்திரி திரு.பொன் ராதா கிருக்ஷ்ணனிடம் கொடுப்பைகுழி வட்டார மக்கள் நேரிடையாக சந்தித்து தொற்றுநோயை விளைவிக்கும் பன்றி பண்ணையை மாற்ற வேண்டி மனுவையும் கொடுத்து உடனே மாற்ற வேண்டி கோரிக்கையும் வைத்தனர். அவரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மத்திய மந்திரி உறுதி அளித்த நிலையில் மக்கள் சிறிது ஆசுவாசம் பெற்றனர். ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கொடுப்பைக்குழி வட்டார பொது மக்கள் மிகுந்த அதிருப்திக்கும், மன வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டனர். வருங்கால சந்ததியினர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிளப்பு ஏற்பட்டுவிடுமோ என மிகுந்த கலக்கத்தில் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தனர்.
கொடுப்பைக்குழி வட்டார பொதுக்கூட்டத்தில் திரு KT உதயம் அவர்களிடம் பண்ணை தொடர்பாக அப்புறபடுத்த மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் வீறுகொண்டு  மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் திரு KT உதயம் திரு.பிரின்ஸ் MLA முன்னிலையில், திரும்பவும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கையளித்து, MLA மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் விளக்கி கூறியதோடு உடனே அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கையும் வைத்தனர். இன்னும் அகற்றபடாத நிலையில், பஞசாயத்து தலைவரிடமும், சுகாதார அதிகாரிகளிடமும், மாறி மாறி மனுக்களை கொடுத்தும் பண்ணை அகற்ற படாமலே உள்ளது.
கடந்த ஆறு கால மாதங்களாக போராடியும் பண்ணையை அப்புறப்படுத்தாததால் கொதித்தெழுந்த கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்கள் குமரி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன்பாக திரு .பிரின்ஸ் MLA தலைமையில் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தை 24-12-2014 நாள் முழுதும் நடத்தியுள்ளனர். இதை அனைத்து பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் செய்திகளை சேகரித்து, தினகரன், தின தந்தி, மாலை மலர், ஆங்கில நாளிதள்களான இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டு சுகாதர கேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறபடுத்த ஆதரவளித்தனர்.

  ஆனாலும் 3 வாரங்கள் ஆகியும் இன்னும் மாற்றபடவில்லை. மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பஞ்சாயத்து தலைவரோ பொதுமக்களுக்கு நன்மையை செய்து தராதவராக விளங்குகிறார். 
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொதுமக்களாக மனுவை சிறந்த விளக்கத்துடன் பன்றி பண்ணையை அப்புறபடுத்த வேண்டி கையளித்தோம். தொடர் போராட்டத்தின் காரணமாக வட்டார வளர்ச்சி அதிகாரி பஞ்சாயத்து தலைவரிடம் பன்றிபண்ணயை மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவரும் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற சனி (13-12-2014) கிழமைக்குள் அப்புறபடுத்தவில்லையென்றால் அனைத்து பன்றிகளையும் ஏலமிட்டு பண்ணையை இழுத்து மூடுவதாகவும் பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்துள்ளார். 

கொடுப்பைகுழி வட்டார பொது மக்களின் தொடர் போராட்டம் வெற்றி பெறுமா? மக்கள் சுகாதாரமாக வாழ முடியுமா?

மறுமலர்ச்சி மைக்கேல்...

தற்கொலை முயற்சிக்கு தண்டனை ரத்து


பாரதத்தின் அனைத்து மாநில அரசுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு தண்டனை வழங்கபடுவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை ஒரு பிரபலமில்லாத அரசியல்வாதியாக, தமிழ் குடிமகனாக வரவேற்பதோடு, தற்கொலை செய்ய நினைப்பவர்கள் அந்த முடிவை மாற்றி அமைத்து அந்த பிரச்சினைக்கான தீர்வை பிறரிடத்தில் பங்கிடுவதன் மூலம் சிறந்த தீர்வை பெறலாம் எனவும், அதன் மூலம் அடுத்தவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்கொலை என்னும் கொடிய எண்ணத்தை நீக்கி அவர்களின் வாழ்விலும் ஒளி ஏற்றுவதால் நீங்களும் சந்தோசமாக மன நிறைவோடு தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகரலாம் எனவும்  அறிவுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பாரதியின் பிறந்த நாளை தேசிய தினமாக கொண்டாட்டம்


சுப்பிரமணி என்னும் இயற்பெயரை கொண்ட பாரதி சிறு வயது முதலே தமிழின் மீதான பற்றால் தனது 7 வயதிலே கவிதை எழுத தொடங்கினார். சிறு வயதிலே தந்தையை இழந்த இவருக்கு தனது கவித்திறமையை பாராட்டி "பாரதி" பட்டத்தை கொடுத்த எட்டயபுர மன்னரின் அரசவையிலே கவிஞராக பணியாற்றினார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் தமிழ் காவியங்களை நமக்கு தந்தருளினார். 

தமிழ் கவிதைகளை பாடல்களாக தந்ததன் மூலம் அகிலமும் போற்றும் விதத்தில் தமிழை கொண்டு சேர்த்து அகிலமும் அறிய "மகாகவி" என மக்களால் அன்போடு அழைக்கப்பெற்றார். அவரது கவிதைகளை பல இழைஞர்கள் படித்து கவிஞர்களாக உருவெடுத்து தமிழுக்கு பெருமை சேர்க்கின்றனர்.  

எனவே தமிழுக்கும் அதன் கவிதைகளுக்கும் பெருமை சேர்த்த இவரின் பிறந்த தினத்தை தேசிய தினமாக தாய் தமிழகம், மற்றும் பாரத திரு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், வெளி இடங்களிலும் கொண்டாடி தமிழுக்கும் தமிழ் கவிதைகளுக்கும் பெருமை சேர்ப்போம். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Wednesday, December 10, 2014

தமிழ் வளர்க்கும் தினத்தந்தி...


பாமர மக்களும் ஊர் உலகில் நடக்கும் செய்திகளை தமிழில் படிக்கும் விதத்தில் எழிய நடையில், குறைந்த விலையில் தொன்று தொட்டு பணியாற்றி வருகின்ற, தமிழை நாடெல்லாம் எடுத்து சென்ற, :தின தந்தி" இப்போது அரபு நாட்டிலும் தமிழை வளர்க்க அதன் 17 ஆம் கிளையை தொடங்கி இருக்கிறது. தின தந்தி நிறுவனத்தாரின் தமிழ் பற்றை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்து கொண்டு மென்மேலும் தமிழ் வளர்க்குமாறும் கேட்டு கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

தமிழ் பத்திரிகையாளரை தாக்கிய ஆந்திர போலீசாரின் அராஜகம்.


ஆயிரத்துக்கு மேலான இந்து கோவில்களை இடித்து, லட்சகணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சே பாரத திருநாட்டில் இந்து கோவிலான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்திருக்கிறான். இதை எதிர்த்து தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. இந்த தகவல்களை சேகரிக்க சென்ற தமிழ் பத்திரிகையாளர்களை ஆந்திர போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இது ஜனனாயக விரோதபோக்கான செயலாகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது. தாக்கியவர்களை அம்மாநில அரசு உடனடியாக விசாரித்து பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். இதையே தொடர்ந்தும் ஆந்திர போலீசார் கடைபிடித்தால் அது சம்பந்தபட்ட அரசுக்கும் நல்லதல்ல என தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய விழாவாக அறிவித்ததற்கு நன்றி...


ராஜ்யசபாவில் 28.11.2014 வெள்ளி அன்று பாஜக எம்.பி தருண் விஜய், திருவள்ளுர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் மற்றும் நாட்டின் அனைத்து பள்ளிகளில் தேசிய விழாவாக கொண்டாடப்படும், அடுத்த ஆண்டு முதல் திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் பள்ளிகளில் புத்தகமாகவும் விநியோகிக்கப்படும் என்றும், மாணவ/ மாணவியர்களிடையே திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்த திருவள்ளுவர் பிறந்தநாளில் வருடந்தோறும் விழிப்புணர்வு விழா மற்றும் திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளும் அரசால் நடத்தபட்டு சான்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாரதியார் பாடல்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி தெரிவித்தார் .

தமிழை கரைத்து பருகியதால் அதன் இலக்கிய சுவையை அறிந்து அதன் மீது உண்டான காதலால், திரு தருண் விஜய் எம் பி அவர்கள் உலகபொதுமறையாம் திருக்குறளை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்த வள்ளுவரின் பிறந்த தினத்தை தேசிய விழாவாக அறிவிக்க செய்ததற்கு நெஞ்சத்தில் நிறைந்த நன்றியை தெரிவித்து கிள்கிறேன். இதை அறிவித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தமிழர்கள் அனைவரின் சார்பில் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

அதேபோல தமிழ் கவிஞன் பாரதியாரின் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்துள்ளதை விரைவிலே தேசிய விழாவாக அறிவித்து தமிழர்கள் மனதை மீண்டும் குளிர்விக்க செய்யவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...