தமிழ் திரு நாட்டின், குமரியின் கோடியில் அமைந்திருக்கும் குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்பட்ட, கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி பொதுமக்கள் பயன்படுத்தும் ஒட்டான்குளத்தின் அருகில், சட்ட விரோதமாக அரசின் அனுமதியில்லாமல் அமைந்திருக்கும் பன்றி பண்ணையால் சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் அனுதினமும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், பல போராட்டங்களை நடத்தியும், பல மனுக்களை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், மத்தியமந்திரி, சுகாதாரதுறை அதிகாரி மற்றும் பல அதிகாரிகளுக்கு கொடுத்தும், இது வரை எந்த பலன்னும் இல்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமைக்குள் பன்றி பண்ணையை அப்புறபடுத்த பஞ்சாயத்து தலைவரிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டுள்ளதோடு, அகற்றவில்லையென்றால் அனைத்து பன்றிகளையும் ஏலமிட்டு பன்றி பண்ணையும் இழுத்து மூடுவதாக எச்சரித்துள்ளார் என் தகவல் வெளியான நிலையில், நேற்று பன்றி பண்ணையின் 7 பன்றிகள் இறந்துள்ளாக தெரிவித்துள்ளார் அதன் உரிமையாளர். இந்த பாதக செயல் இனம் தெரியாத நபர்களால் அரங்கேறியுள்ளதாகவும். இதை இரணியல் காவல் துறை மேலதிகாரி விசாரித்து உடனே நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்களின் போராட்டம் பன்றி பண்ணையை அகற்றுவதற்காகவே நடத்த பட்டு வருகிறது எனவும் காவல் துறையானது பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் மக்கள் பன்றி பண்ணை முதலாளிகளுக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தியதில்லை, அவர்களது எண்ணமும் அவ்வாறாக இதுவரை அமைந்ததில்லை. இந்த அறவழி போராட்டமெல்லாம் பன்றி பண்ணையை அப்புறபடுத்துவதற்காக மட்டுமே தவிர நட்டத்தை ஏற்படுத்த அல்ல.
பன்றி பண்ணை உரிமையாளருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள்போல சிலர் வேடமணிந்து பல்லாயிரகணக்கான ரூபாயை தங்கள் சுய வாழ்விற்காக பெற்றுளார்கள் எனவும், லட்சகணக்கான பணத்தை செலவளிக்கவும் வைத்து பன்றி உரிமையாளரான உங்களுக்கு நட்டத்தையும் உருவாக்கி உங்களை அழித்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே பன்றி பண்ணை உரிமையாளரான நீங்கள் புரிந்து கொண்டு தங்களை தவறான வழியில் நடத்தியவர்களை காவல் துறையில் தெரிவித்து தண்டனை வாங்கி தரவேண்டுமெனவும் கேட்டு கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், தாங்களே முன்வந்து பன்றி பண்ணையை அப்புறபடுத்தி மனித குலத்தை காக்க வேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.
இது மட்டுமல்லாமல், இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் யார் யாரெல்லாம் தொடர்புள்ளார்களோ அவர்களை காவல்துறை அடையாளம் கண்டு குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment