பாரத திருநாட்டின் தெற்கு பகுதியான தமிழகத்தில், கடை கோடியான குமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில், குருந்தன்கோடு பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தில், பொதுமக்கள் அனுதினமும் நீராடும் ஒட்டான்குளத்தின் அருகினில், சட்ட விரோதமாக, அரசின் அனுமதியின்றி தனியாருக்கு சொந்தமான, மனிதகுலத்திற்கே தொற்று நோய்களை ஏற்படுத்தும், உயிர் கொல்லியான பன்றி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இதை அப்புறப்படுத்த பஞ்சாயத்து தலைவரிடம், கிராம பஞ்சாயத்து உருப்பினர்கள் மூலமாக மனு கொடுக்கப்பட்டது. பின்னனர் வட்டார இளைஞர்கள் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்ததுடன் அப்புறபடுத்த மனுவையும் கையளித்தனர். மேலும் பொதுமக்களாக பெண்களூம் குழந்தைகளுமாக சேர்ந்து கோரிக்கை வைத்ததுடன், விரைவில் அப்புறப்படுத்தபடும் என உறுதியளித்தார். ஆனாலும் மாற்றபடவில்லை. இதனால் பன்றி பண்ணை முற்றுகை போராட்டத்தில் கொடுப்பைகுழி வட்டார இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இன்னிலையில் இளைஞர்களாக அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் திரு.KT உதயத்திடமும், திரு.பிரின்ஸ் MLA வீடமும், பண்றி பண்ணையை அப்புறபடுத்த மனுவை கொடுத்தும் தெளிவாகவும் எடுத்து கூறியள்ளனர். ஆனாலும் பண்ணை அகற்றபடவில்லை.
மத்திய மந்திரி திரு.பொன் ராதா கிருக்ஷ்ணனிடம் கொடுப்பைகுழி வட்டார மக்கள் நேரிடையாக சந்தித்து தொற்றுநோயை விளைவிக்கும் பன்றி பண்ணையை மாற்ற வேண்டி மனுவையும் கொடுத்து உடனே மாற்ற வேண்டி கோரிக்கையும் வைத்தனர். அவரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மத்திய மந்திரி உறுதி அளித்த நிலையில் மக்கள் சிறிது ஆசுவாசம் பெற்றனர். ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கொடுப்பைக்குழி வட்டார பொது மக்கள் மிகுந்த அதிருப்திக்கும், மன வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டனர். வருங்கால சந்ததியினர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிளப்பு ஏற்பட்டுவிடுமோ என மிகுந்த கலக்கத்தில் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தனர்.
கொடுப்பைக்குழி வட்டார பொதுக்கூட்டத்தில் திரு KT உதயம் அவர்களிடம் பண்ணை தொடர்பாக அப்புறபடுத்த மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் வீறுகொண்டு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் திரு KT உதயம் திரு.பிரின்ஸ் MLA முன்னிலையில், திரும்பவும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கையளித்து, MLA மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் விளக்கி கூறியதோடு உடனே அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கையும் வைத்தனர். இன்னும் அகற்றபடாத நிலையில், பஞசாயத்து தலைவரிடமும், சுகாதார அதிகாரிகளிடமும், மாறி மாறி மனுக்களை கொடுத்தும் பண்ணை அகற்ற படாமலே உள்ளது.
கடந்த ஆறு கால மாதங்களாக போராடியும் பண்ணையை அப்புறப்படுத்தாததால் கொதித்தெழுந்த கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்கள் குமரி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன்பாக திரு .பிரின்ஸ் MLA தலைமையில் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தை 24-12-2014 நாள் முழுதும் நடத்தியுள்ளனர். இதை அனைத்து பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் செய்திகளை சேகரித்து, தினகரன், தின தந்தி, மாலை மலர், ஆங்கில நாளிதள்களான இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டு சுகாதர கேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறபடுத்த ஆதரவளித்தனர்.
ஆனாலும் 3 வாரங்கள் ஆகியும் இன்னும் மாற்றபடவில்லை. மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பஞ்சாயத்து தலைவரோ பொதுமக்களுக்கு நன்மையை செய்து தராதவராக விளங்குகிறார்.
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொதுமக்களாக மனுவை சிறந்த விளக்கத்துடன் பன்றி பண்ணையை அப்புறபடுத்த வேண்டி கையளித்தோம். தொடர் போராட்டத்தின் காரணமாக வட்டார வளர்ச்சி அதிகாரி பஞ்சாயத்து தலைவரிடம் பன்றிபண்ணயை மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவரும் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற சனி (13-12-2014) கிழமைக்குள் அப்புறபடுத்தவில்லையென்றால் அனைத்து பன்றிகளையும் ஏலமிட்டு பண்ணையை இழுத்து மூடுவதாகவும் பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
கொடுப்பைகுழி வட்டார பொது மக்களின் தொடர் போராட்டம் வெற்றி பெறுமா? மக்கள் சுகாதாரமாக வாழ முடியுமா?
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment