Wednesday, December 10, 2014

திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய விழாவாக அறிவித்ததற்கு நன்றி...


ராஜ்யசபாவில் 28.11.2014 வெள்ளி அன்று பாஜக எம்.பி தருண் விஜய், திருவள்ளுர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் மற்றும் நாட்டின் அனைத்து பள்ளிகளில் தேசிய விழாவாக கொண்டாடப்படும், அடுத்த ஆண்டு முதல் திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் பள்ளிகளில் புத்தகமாகவும் விநியோகிக்கப்படும் என்றும், மாணவ/ மாணவியர்களிடையே திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்த திருவள்ளுவர் பிறந்தநாளில் வருடந்தோறும் விழிப்புணர்வு விழா மற்றும் திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளும் அரசால் நடத்தபட்டு சான்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாரதியார் பாடல்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி தெரிவித்தார் .

தமிழை கரைத்து பருகியதால் அதன் இலக்கிய சுவையை அறிந்து அதன் மீது உண்டான காதலால், திரு தருண் விஜய் எம் பி அவர்கள் உலகபொதுமறையாம் திருக்குறளை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்த வள்ளுவரின் பிறந்த தினத்தை தேசிய விழாவாக அறிவிக்க செய்ததற்கு நெஞ்சத்தில் நிறைந்த நன்றியை தெரிவித்து கிள்கிறேன். இதை அறிவித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.ஸ்மிருதி இராணி அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தமிழர்கள் அனைவரின் சார்பில் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

அதேபோல தமிழ் கவிஞன் பாரதியாரின் பிறந்த நாளையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்துள்ளதை விரைவிலே தேசிய விழாவாக அறிவித்து தமிழர்கள் மனதை மீண்டும் குளிர்விக்க செய்யவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment