கிறுஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்க என மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகமாகனது "நவோதயா" மற்றும் "சி.பி.எஸ்.இ" - இன் கீழ் இயங்கி வரும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. இந்த அநீதி செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு உடனே அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற பிரதமர் அவர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அந்த சுற்றறிக்கையில் முந்நாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளையும் கொண்டாடுவதற்காக நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதை வாய் பேசமுடியாமல் இருக்கும் பெருமதிப்பிற்குரிய திரு.வாஜ்பாய் அவர்கள் காதுகளில் கசிந்தாலே அவர் மனம் வேதனை படுமெனவும் தெரிவித்து கொள்கிறேன். பெருமதிப்பிற்குரிய திரு வாஜ்பாய் அவர்களின் ஆட்சி காலங்களில் இது போன்ற விரோத செயலுக்கு அவர் இடமளிக்காமல், அனைத்து மக்களையும் இந்தியனாக நினைத்து, அனைத்து மதத்தினரின் பண்டிகைகளுக்கும் விடுமுறையை தொடர செய்தார் என மத்திய அரசுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
எனவே பெருமதிப்பிற்குரிய திரு வாஜ்பாய் அவர்களை போற்றும் நீங்கள் அவரின் வழியிலே நல்லாட்சி நடத்தவும் இந்திய திருநாட்டில் மதத்தை திணிக்காமல் இந்தியன் என்னும் ஒருமைப்பாட்டோடு அனைத்து மக்களையும் அரவணைத்து செயல்படவேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.
இப்படியாக மத்திய அரசின் செயல்பாடு இருந்தால் அது நல்லாட்சியாக இருக்க முடியாது என்றும் இதை மத்திய அரசானது உணர்ந்து சுற்றறிக்கையை திரும்ப பெற்று, இது போன்ற தூண்டும் செயல்களில் மீண்டும் ஈடுபடகூடாது எனவும் கோரிக்கயை விடுக்குறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment